பயர்பாக்ஸ் உலாவியில், தேவையில்லாத அறிவிப்புகளை நிறுத்துவது எப்படி?

நம்மில் பலரும் தெரிந்தோ, தெரியாமலோ! பல இணையதளங்களிலும், அறிவிப்பு விருப்பங்களை தேர்ந்தெடுத்து வைத்துவிடுகிறோம்.

Push Notification Permission in Firefox

பின்னாளில், நாம் உலாவியை(browser) பயன்படுத்தாத போதிலும் பல நேரங்களிலும் இத்தகைய இணையதளங்களில் இருந்து, தேவையற்ற பல அறிவிப்புகள்(especially push notifications) வந்து நம்மை எரிச்சலடைய செய்கிறது.

இதற்கான தீர்வு குறித்து தான் பார்க்கவிருக்கிறோம்.

குறிப்பிட்ட இணையதளத்திலிருந்து அறிவிப்புகளை நிறுத்துவது!

ஒரு குறிப்பிட்ட இணையதளத்தில் இருந்து வரும் அறிவிப்புகளை மட்டும், நீங்கள் நிறுத்த விரும்பினால்! நான் இப்பொழுது கூறவிருக்கும் முறையை முயற்சி செய்து பாருங்கள்.

முதலாவதாக உங்களுடைய தேடுபொறி பட்டியில்(search bar) இருக்கும் அமைப்புகளை கிளிக் செய்து, (படத்தில் காட்டப்பட்டுள்ளது போல) அறிவிப்புகளை அனுப்புதல்(செயிண்ட் notifications) என்பதற்கு நேராக உள்ள, பெருக்கல் குறியை அழுத்தவும்.

இதன் மூலம், அந்த குறிப்பிட்ட இணையதளத்தில் இருந்து வரும் அறிவிப்புகள் நிறுத்தப்படும்.

ஒரு சில இணையதளங்களில் இருந்து மட்டும், அறிவிப்புகளை நிறுத்த விரும்பினால் இந்த முறை பயனுள்ளதாக இருக்கும்.

ஆனால், அனைத்து இணையதளங்களில் இருந்தும்   அறிவிப்புகளை நிறுத்த விரும்பினால்!  இந்த முறை எடுபடாது.

பல்வேறு இணையதளங்களில் இருந்தும் அறிவிப்புகளை முடக்குதல்

பலதரப்பட்ட இணையதளங்களில் இருந்தும் வரக்கூடிய அறிவிப்புகளை, நீங்கள் முடக்க விரும்பினால் கீழ்க்காணும் வழிமுறையில் செய்ய முடியும்.

உங்கள் பயர்பாக்ஸ் உலாவில் அமைப்புகளை(settings) திறக்கவும்.

அமைப்புகளில், தனி உரிமை மற்றும் பாதுகாப்பு(privacy and security ) எனும் பகுதிக்கு செல்லவும். அங்கே உங்களுக்கு அனுமதிகள்(permission) என்னும் பகுதி காணக் கிடைக்கும்.

அதற்குள் சென்று, அறிவிப்புகள்(notifications ) என்பதற்கு நேராக உள்ள அமைப்புகள்(settings) என்பதை கிளிக் செய்யவும்.

இங்கே நீங்கள் அறிவிப்புகளை அனுமதித்துள்ள இணையதளங்களின் பட்டியல் காணக் கிடைக்கும். அதில் இருக்கக்கூடிய இணையதளங்களில் தேவையற்ற இணையதளங்களை தேர்வு செய்து, அவற்றை முடக்க முடியும்.

மேற்படி படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது போல, அனுமதி(allow) என்பதை ரத்து செய்துவிட்டு தடை(block) என்பதை சுட்டி, பின்பு கீழே உள்ள மாற்றங்களை சேமிக்கவும்(save changes) எனும் பொத்தானை கிளிக் செய்யவும்.

அனைத்து இணையதளங்களில் இருந்தும் அறிவிப்புகளை தடை செய்தல்

இப்போது நான் கூறவிருக்கும் வழிமுறையை பின்பற்றி, உங்களால் அனைத்து இணையதளங்களில் இருந்தும் வெளியாகும் அறிவிப்புகளை முழுவதுமாக முடக்க முடியும்.

நான் முந்தைய படிநிலைகளில் செய்த அமைப்புகளில் கீழே  பார்க்கும் பொழுது,  அனைத்து இணையதளங்களையும் நீக்குதல்(remove all sites) எனும் பொத்தானை பார்க்க முடியும்.

மேலும் அதற்கு கீழே புதிய, இணையதளங்களில் இருந்து வெளியாகும் அறிவிப்பு அனுமதிகளை நிராகரித்தல்(block new websites) எனும் பெட்டியையும் பார்க்க முடியும்.

மேற்படி படத்தில் காட்டப்பட்டுள்ள படி, செய்துவிட்டு மாற்றங்களை சேமிப்பதன் மூலமாக! அனைத்து இணையதளங்களில் இருந்து வெளியாகும் அறிவிப்புகளையும் உங்களால் முடக்க முடியும்.

மேலும் புதிய இணையதளங்கள் அனுமதி கூறாமலும் தடுக்க முடியும்.

ஆனால் இவ்வாறு செய்வதை காட்டிலும், தேவையில்லாத இணையதளங்களை மட்டும் முடக்குவதே எப்போதும் சிறந்ததாக இருக்கும் என்பதே என்னுடைய கருத்து.

மேற்படி, இந்த கட்டுரையானது itsfoss தளத்தில் ஸ்ரீநாத் அவர்களால் எழுதப்பட்ட கட்டுரையை தழுவி, தமிழில் எழுதப்பட்டுள்ளது.

மேற்படி இந்த கட்டுரை குறித்து, உங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் தயங்காமல் என்னுடைய மின் மடல் முகவரிக்கு மடல் இயற்றவும்.

உங்களுடைய கருத்துக்கள் எப்போதும் வரவேற்கப்படுகிறது.

கட்டுரையாளர்:-

ஸ்ரீ காளீஸ்வரர்.செ,

இளங்கலை இயற்பியல் மாணவர்,

(தென். திருவிதாங்கூர் இந்து கல்லூரி – நாகர்கோவில் -02)

இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,

கணியம் அறக்கட்டளை.

மின் மடல் முகவரி: srikaleeswarar@myyahoo.com

%d bloggers like this: