கணியம் அறக்கட்டளையின் காரைக்குடி கிளை திறப்பு விழா நிகழ்வு செப்டம்பர் 22, 2024 ஞாயிறு அன்று நடைபெற இருக்கிறது. இதனுடன் ‘நுட்பகம்’ என்ற சமுதாயக் கூடம் ஒன்றையும் ஆரம்பிக்க இருக்கின்றோம்.
இந்த நிகழ்வில் மென்பொருள் சுதந்திர தினமும் கொண்டாடப்பட இருக்கிறது. இது காரைக்குடியில் நிகழும் முதல் மென்பொருள் சுதந்திர தினம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்விற்கு Open Street Map பங்களிப்பாளர்கள் பலர் வருவதால் செப்டம்பர் 21, 2024 சனி அன்று படமிடல் நிகழ்வு (Mapping Party) ஒன்றையும் நடத்த திட்டமிட்டுள்ளோம். இதுபோன்ற நிகழ்வுகள் தென் தமிழகத்தில் நடைபெறுவது இதுவே முதன்முறை. நுட்பகத்தில் கட்டற்ற மின்னூலகம் ஒன்றையும் அமைக்க இருக்கின்றோம். இந்நூலகத்தில் நூல்கள் மட்டுமல்லாமல், மின்னூல்கள், காணொளிகள், ஒலி நூல்கள் என படைப்பாக்க பொதுஉரிமத்தின் கீழ் உள்ள தகவல்களை பயனர்கள் கணினி, டேப்லட்கள் அல்லது தங்களது கைபேசிகளில் இணையம் இல்லாமல் படிக்கலாம்.
நாள் – 21-09-2024
நேரம் – காலை 10.00 மணி
இடம் – முதல் தளம், கல்லூரி-ரயில்வே சாலை, அழகப்பா புரம். காரைக்குடி – 3
தொடர்புக்கு –
லெனின் +91 95780 78500
அன்வர் +91 81247 82351





