இந்திய அரசு 15 ஜூலை 2010 அன்று தனது ரூபாய் பண மதிப்பைக் குறிப்பதற்கு என தனியே ஒரு சிறப்பு குறியீட்டைக் கொண்டு வந்தது. இதன் மூலம், ரூபாய் மதிப்பைப் பயன்படுத்தும் பிற நாடுகளிடம் (பாகிஸ்தான், இலங்கை, நேபாளம்) இருந்து தனது மதிப்பை வேறுபடுத்திக் காட்டியது.
இந்த குறியீட்டு மாற்றத்தை முதன்முதலில் கணினி பயன்பாட்டில் கொண்டு வந்தது உபுண்டு இயக்குதளம் தான். உபுண்டு தனது 10.10 பதிப்பில் இந்த குறியீட்டைச் சேர்த்துக் கொண்டது. பின்னாளில் பெடோராவும் தனது 15 ஆம் பதிப்பில் ரூபாய் குறியீட்டைச் சேர்த்து கொண்டது.
சரி,
ரூபாய் குறியீட்டை லினக்ஸ் இயக்குதளங்களில் எப்படி உள்ளிடுவது?
விண்டோஸ் இயக்குதளம் போல இதற்கென தனியே ஒரு எழுத்துருவினை நீங்கள் நிறுவ வேண்டிய கட்டாயம் ஏதும் இல்லை. எந்த எழுத்துருவையும் நிறுவாமலேயே, மிக எளிதாக இதைச் செய்து முடிக்கலாம்!!
- கணினி அமைப்புகள் (System Settings) மூலம் விசைப்பலகை இட அமைப்புகளுக்குச் (Keyboard Layout) செல்லுங்கள்
- அங்கு இருக்கும் ‘தேர்வுகள்’(Options) என்பதனைச் சொடுக்குங்கள்
- “Adding currency signs to certain keys” என்பதில், “Rupee on 4” என்பதை தேர்வு செய்யுங்கள்
- “Key to choose 3rd level” என்பதில், உங்களுக்குத் தகுந்த விசையைத் தேர்வு செய்யுங்கள். (உ.தா: Right Alt)
- அனைத்தையும் சேமியுங்கள்
அவ்வளவு தான்!! இனி நீங்கள் உங்கள் விருப்ப விசையை அழுத்தி “4” ஐ (நான் கூறிய உதாரணத்தில் Right Alt + 4) அழுத்தினால் அந்த இடத்தில் ரூபாயின் குறியீடு வந்துவிடும்.
தமிழ் கற்க ஆசைப்பட்டு வழியின்றி பொறியியல் கற்றவன்.. அதனால், அறிவியலையும் தமிழையும் இணைக்கும் பாலமாக விளங்க ஆசைப்படுபவன்.கணிணியையும் தமிழ் பேச வைப்பவன்!!செந்தமிழ் மொழியினன் – பாரத நாட்டினன்.
ஆளுங்க என்கிற அருண்