Anybody Out There – யாரங்கே! – Open Source Creative Community – யூடியூப் வலையொளி – ஓர் அறிமுகம்

பொதுமக்கள் : லினக்சுலாம் யாராவது நிரல் எழுதுறவங்க, கணினி நுட்பத்துறைல உள்ளவங்க, அழகுணர்ச்சியே இல்லாதவங்க பயன்படுத்துறது… நமக்கு எதுக்குப்பா அதெல்லாம்….

திறமூல அன்பர்கள் : KDE, Pantheon (Elementary OS), GNOME, Cinnamon…

பொதுமக்கள்: பயன்பாட்டுக்கு எளிமையான வரைகலை பயனர் இடைமுகம் (GUI) இருந்தாலும் லினக்சுல தேவையான பயன்பாட்டு மென்பொருட்கள் இல்லையே…என்ன செய்ய…!?

திறமூல அன்பர்கள் : LibreOffice, OnlyOffice, Firefox, VLC…

பொதுமக்கள்: அன்றாட பொது பயன்பாட்டுக்கு கச்சிதமா இருக்கு… ஆனா, வரைகலை, ஒலி பகுப்பு, காணொளி உருவாக்கம் போன்ற படைப்பாக்கத்துக்கான மென்பொருட்களுக்கு என்ன பன்றது..!?

திறமூல அன்பர்கள் : GIMP, INKSCAPE, KRITA, KDENLIVE, Shotcut, Blender, Natron…

………………..

**********

பரந்த உள்ளம் கொண்ட திறமூல அன்பர்களுக்கு வணக்கம்,

மேலே உள்ள உரையாடலில் குறிப்பிடப்படாத இன்னும் பல துறைகளில் திறமூலம் வலுபெற்றுள்ள இந்த காலத்தில், இன்னும் இப்படியான செய்திகள் மக்களைச் சென்றடைவதில் தொய்வு நிலவுகிறது.

“யான் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம் – ஆசான் திருமூலர்”

திறமூலத்தின் சுவையறிந்த நாம் இச்சுவையை பிறருக்கு அறிமுகப்படுத்துவதும் திறமூலத்திற்கு ஏதேனும் ஒருசில வகைகளில் பங்களிப்பதும் நமது கடமையாகிறது.

அவ்வகையில் வடிவமைப்பு மற்றும் உருவாக்கத் துறையில் (Designing and Content Creation) திறமூல மென்பொருள்களை மக்களிடம் சென்று சேர்ப்பதற்கானத் தேவை நிலவுகிறது.

  • மக்களிடம் சென்று சேராததிற்கு எனக்கு தெரிந்த சில காரணங்கள் :
  • இப்படியான மென்பொருட்கள் இருப்பதே தெரிவதில்லை.
  • தெரிந்தாலும் பயன்படுத்துவது எப்படி என்பதை அறிய சிரமமாக உள்ளது. காரணம் – இப்படியான மென்பொருட்களை கற்பிப்பவர்கள் குறைவு. கற்பிக்கும் சிலரும் ஆங்கிலத்தில் தான் உள்ளனர்.
  • வார்ப்புகள் (Templates and Presets) பற்றாக்குறை.
  • இன்னும் நிறைய, நிரல் அளவிலும் மேம்படுத்த வேண்டியுள்ளது.

(இவற்றில் தப்பிப்பிழைத்த குழந்தை தான் Blender. Blenderக்கு மிகச்சிறந்த வகையில் ஆதரவுகள் உள்ளன.)

இந்நிலையில் தமிழில் இம்மென்பொருட்களைக் கற்பிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டதே யாரங்கே” என்னும் வலைவெளி (Anybody Out There – யாரங்கே! YouTube channel).

 

GIMP, Inkscape, KDEnLive, Audacity, Blender, Natron இன்னும் இவ்வாறான திறமூல மென்பொருள்களை எளிய இனிய தமிழில் அடிப்படையிலிருந்து கற்றுக்கொள்ள யாரங்கே!” வலைவெளி துணையாக இருக்க வேண்டும் என்பது எங்களது விருப்பம்.

இவ்வலைவெளியின் சிறப்பே, இந்த YouTube channel முழுவது திறமூல மென்பொருள்களைக் கொண்டு நடத்தப்படுகிறது என்பதே.

விருப்பமும் ஆர்வமும் உள்ளோர் “Anybody Out There – யாரங்கே!” வலைவெளியில் உள்ள காணொளிகள் மூலம் திறமூல மென்பொருட்களை கற்றுக்கொள்ளலாம்.

திறமூலம் சார்ந்த கருத்துக்களை எம்போன்றோருக்கு அறிமுகப்படுத்தி வழிநடத்திவரும் கணியம் தளத்திற்கும் அனைத்து திறமூல அன்பர்களுக்கும் நன்றிகள் பல.

“அருங்கலை ஆற்றுக”

அன்புடன்,

யாரங்கே குழு (வேலவன், MVP),

02/02/2021

 

தொடர்புக்கு – பிரசன்னா – udpmprasanna@gmail.com

 

%d bloggers like this: