இந்த ஜென்கின்ஸ் எனும் திறமூல பயன்பாடுகளில் கூடுதலான பணிகளை செய்திட அதற்கான கூடுதல் இணைப்புகளை(plugin) நிறுவிகொண்டு பயன்படுத்திகொள்ளமுடியும் ஆண்ட்ராய்டினுடைய மெய்நிகர் சூழலை ஆண்ட்ராய்டு ஏப்பிகே கோப்பினை கட்டமைவுசெய்து இயக்கி பயன்படுத்திகொள்ளமுடியும் இதற்காக எஸ்டிகேவை நிறுவுதல்,கட்டமைக்கபட்ட கோப்பினை உருவாக்குதல் பின்தொடர்பவரை உருவாக்குதலும் நிறுவுதலும் ஏப்பிகேவை நிறுவுதல் அல்லது நிறுவுதலை நீக்குதல்,மங்கியைபரிசோதித்தலும் ஆய்வுசெய்தலும் ஆகிய ஆண்ட்ராய்டிற்கான அனைத்து பணிகளையும் இந்த ஜென்கின்ஸின் கூடுதல் இணைப்புகளை கொண்டு தானியங்கியாக செயல்படுமாறு செய்யலாம் இந்த ஜென்கின்ஸின் திரையின் இடதுபுறபகுதியிலுள்ள manage Jenkins link என்பதை தெரிவுசெய்து சொடுக்குக.அதனை தொடர்ந்து manage pluginஎன்பதை தெரிவுசெய்து சொடுக்குக தோன்றிடும் திரையில் available என்ற தாவியின் திரையை தோன்ற செய்க அதில் android emulator pluginஎங்குள்ளது என தேடிபிடித்து அதனுடைய தேர்வுசெய்பெட்டியை தெரிவுசெய்து கொண்டு நிறுவுகைக்கான பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் இந்த ஜென்கின்ஸினுடைய கூடுதல் இணைப்பு பதிவிறக்கம்ஆகி இந்த பயன்பாட்டுடன் இணைந்து கொள்ளும் பிறகு manage Jenkins=>configure sytem=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி கட்டமைவு சரியாக மாற்றியமைக்கபட்டுள்ளதாவென சரிபார்த்து கொள்க. இதேபோன்று தேவையெனில் add build setup , jcloud போன்ற கூடுதல் இணைப்புகளையும் பதிவிறக்கம்செய்து நிறுவிகொள்க.
(இதழ் 23 நவம்பர் 2013 )
ச.குப்பன் kuppansarkarai641@gmail.com
[wpfilebase tag=file id=43/]