நம் அனைவருக்கும் பரிச்சயமான jitsi இன் ஆண்ட்ராய்டு செயலி | கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள் பகுதி 5

கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள் தொடர்பாக, அவ்வப்போது பார்த்து வருகிறோம்.

நம் கணியம் நடத்தக்கூடிய, இணைய வழி நிகழ்வுகளை பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும். பெரும்பாலும், நாம் jitsi எனும் ஒளி உரையாடல் கருவியை தான் பயன்படுத்துகிறோம்.

இந்த jitsi தளமானது, முழுக்க முழுக்க கட்டற்றதாகும். இதற்காக, நீங்கள் எந்த கட்டணத்தையும் செலுத்த வேண்டியது இல்லை.

லினக்ஸ் பயனர்களுக்கும், இன்ன பிற கணினி பயனர்களுக்கும் சிறந்த ஒரு தேர்வாக இது அமையும்! என்பதில் சந்தேகம் இல்லை.

காரணம், இங்கு நீங்கள் எவ்வித கட்டணத்தையும் செலுத்த வேண்டியது இல்லை. அதையும் கடந்து, இங்கே உங்களுக்கு இத்தனை நபர் எனும் வரைமுறைகள் எல்லாம் கிடையாது.

ஆம்! நீங்கள் நினைத்தால் இரண்டு கோடி பேரை கூட ஒரே இணைய நிகழ்வில் இணைத்து விட முடியும். ஆனால், அதற்குரிய சர்வர்கள் மட்டும் தேவைப்படும்.

உலகம் முழுவதும் இருக்கக்கூடிய கட்டற்ற பயனர்களின் மூலமாக சாத்திய படுகிறது.

இவ்வளவு சிறப்புகளைக் கொண்ட இந்த jitsi மொபைலில் பயன்படுத்த சற்று கடினமானது என்று பலரும் சொல்லி நான் கேட்டிருக்கிறேன்.

காரணம், பெரும்பாலும் இதனுடைய இணைய இணைப்பை பயன்படுத்தி ஏதாவது ஒரு உலாவியில் பயன்படுத்துவார்கள்.

அதில், உங்களுக்கு செயலியில் கிடைக்கக்கூடிய அனுபவம் கிடைக்காது.

ஆனால், அதற்கு தீர்வாக f-droid ஆப் ஸ்டோரில் உங்களுக்கு jitsi கான செயலி கிடைக்கிறது.

நான் மேற்குறிப்பிட்ட அனைத்து அம்சங்களையும், இந்த செயலியில் உங்களால் பயன்படுத்த முடியும்.

மேலும், இந்த செயலியானது jitsi பயனர்களின் மூலம் பராமரிக்கப்படுகிறது.

இதன் பதிப்பானது 24 ஆவது(version 24) முறையைக் கடந்திருக்கிறது.

எனவே, நீங்கள் நம்பகத்தோடு இந்த செயலியை பயன்படுத்த முடியும்.

App link:f-droid.org/packages/org.jitsi.meet/

வரும் நாட்களில் நண்பர்களோடு இணையத்தில் உரையாட, ஒரு முறை jitsi யை செயலியை பயன்படுத்தி பாருங்கள்.

என்னுடைய இன்ன பிற கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள் தொடர்பான கட்டுரைகளை படிக்க விரும்பினால், கீழே உள்ள இணைப்பை பயன்படுத்தவும்.

kaniyam.com/category/open-source-android-apps/

மேற்படி இந்த கட்டுரை குறித்து உங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் தயங்காமல் என்னுடைய மின் மடலுக்கு மடல் இயற்றவும்.

கட்டுரையாளர்:-
ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்து கல்லூரி, நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் முகவரி : srikaleeswarar@myyahoo.com
இணையம் : ssktamil.wordpress.com

%d bloggers like this: