JS7எனும்பணியை திட்டமிடுபவர் (JobScheduler)

JS7 என்பது, சரக்கு மேலாண்மை, கண்காணிப்பு , கட்டுப்பாடு ஆகியவற்றுக்கான JS7இன் JOC காக்பிட்எனும் பயனர் இடைமுகத்துடனான, முகவர்களைத் திட்டமிடுவதற்கான கட்டுப்பாட்டாளர் ஆகும் , இது தன்னால் ஆதரிக்கப் படுகின்றஇன் தளங்களில் பணிகளையும் பணிப்பாய்வுகளையும் செயல்படுத்துகின்ற JS7 முகவர்களை கொண்டுள்ளது.
முக்கிய வசதிவாய்ப்புகள்
1. தானியங்கியான பணிச்சுமை:JS7 JobScheduler என்பது ஒரு திற மூல தானியிங்கியானபணிச்சுமை (Work load Automation) தீர்வாகும். இது செயற்படுத்திடக்கூடிய கோப்புகளையும், உறைபொதியின் உரைகளையும் , தரவுத்தள நடைமுறைகளையும் இயக்க பயன்படுகிறது. இது சிக்கலான பணிச்சார்புகளையும் பணிப்பாய்வு களையும் உள்ளடக்கியது …
2.குறுக்குத்தள திட்டமிடல்: JS7 JobScheduler ஆனது தொலைதூர இயந்திரங்களில் பணிகளை ஆதரிக்கின்ற எந்த வொருதளத்திலும் செயல்படுத்திடுவதற்கான முகவர்களை உள்ளடக்கியது. கூடுதலாக, ஒரு SSHக்கு முகவரில்லாத திட்டமிடலையும் பயன்படுத்திகொள்ளலாம்.
3. அதிகஅளவில் கிடைக்கும் தன்மை:JS7 JobScheduler ஐ அதிக அளவில் கிடைக்கும் வகையில் அமைக்கலாம்:JS7 JOC காக்பிட் ஆனது கொத்தான ஒரு செயலில் உள்ள நிகழ்வு, காத்திருப்பு நிகழ்வுகளுடன் எத்தனைசெயலற்ற கொத்துஉள்ளன என்ற விவரங்களை வழங்குகிறது.
JS7 கட்டுப்பாட்டு கொத்து, ஒரு செயலில் உள்ள நிகழ்வு ஒரு காத்திருப்பு நிகழ்வுடன் தானியங்கியான தோல்வியுற்ற , கைமுறையாக மாறுவதற்கான செயலற்ற கொத்தின் விவரங்களை வழங்குகிறது.
JS7 முகவரின் கொத்து ஆனது எத்தனை முகவர்களுக்கும் செயலில்உள்ள செயலற்ற கொத்தாக்கத்தினை (round-robin), நிலையான முன்னுரிமை) கொண்டு வருகிறது.
JS7 தயாரிப்புகளின் கொத்தாக்கமானது வழக்கமான வணிகஉரிமத்திற்கு உட்பட்டது.
4. பணியை செயற்படுத்துதல்:உறைபொதியின் உரைகள்: JS7 முகவர்கள் விண்டோஸ் , யூனிக்ஸ் ஆகிய இயக்கமுறைமைகளில் இயங்கக்கூடிய கோப்புகளையும் ,உறைபொதியின் உரைகளையும் இயக்குகின்றனர். பணிகளின் மாறிகளை உறைபொதியின் உரைக்கும் உறைபொதியின் உரையிலிருந்து பணிப்பாய்வுக்கும் அனுப்பலாம். இந்த வழியில் மதிப்புகள் ஒரு பணிப்பாய்வுஆனது பணியின் ஒரு படியில் இருந்து அடுத்த பணிக்கு அல்லது அடுத்தடுத்த அனைத்துபணிகளுக்கும் மாற்றப்படும்.
உரைநிரலின் வெளியேறும் குறிமுறைவரிகளைச் சரிபார்ப்பதன் மூலமும், stderr அலைவரிசைகளுக்கான வெளியீட்டைச் சரிபார்ப்பதன் மூலமும் பிழை கண்டறிதல் செய்யப்படுகிறது.
உரைநிரல் மொழிகள்: ஜாவாஸ்கிரிப்ட், பைதான், ரூபி, பவர்ஷெல் போன்ற எந்தவொரு உரைநிரல்கணினி மொழியிலும் பணிகளை செயல்படுத்தலாம். உறைபொதியின் உரைநிரல்களைப் போலவே, அத்தகைய பணிகள் சூழல் மாறிகளைப் பெறுகின்றன பணிப்பாய்வுகளில் அடுத்தடுத்த பணிகளுடன் பயன்படுத்துவதற்கான பணிப்பாய்வு மாறிகளைப் பெறுகின்றன.
உரைநிரலின்கணினி மொழிகளுக்கு JS7இன் முகவர் இயக்கப்படும் இயந்திரத்துடன் ஒரு மொழிபெயர்ப்பாளரை நிறுவுகைசெய்திட வேண்டும்.
JITL பணி வார்ப்புருக்கள்: JS7 ஆனது பல்வேறு JITL பணி வார்ப்புருக்களை ஜாவாவின் இனங்களாக செயல்படுத்துகிறது. வார்ப்புருக்கள் SSH முகவர் இல்லாத திட்டமிடலைச் செயல்படுத்தும் பணிகளைச் செயல்படுத்தப் பயன்படுத்திகொள்ளலாம்,
5.பிழைகளை கையாளுதல்: JS7 JobScheduler ஆனது பிழை கையாளுதலுக்கான பல அணுகுமுறைகளை வழங்குகிறது, எடுத்துக்காட்டாக:
தோல்வியுற்ற வரிசைமுறைகள், பிழையில் பணியுடன் காத்திருக்கச் செய்வது, பின்னர் பயனாளர் தலையீட்டின் மூலம் மீண்டும் துவங்கப்படும்.
அறிவுறுத்தலை மீண்டும் முயற்சித்தல்: முன் வரையறுக்கப்பட்ட தாமதத்திற்குப் பிறகு தோல்வியுற்ற பணிகளை இயக்க மீண்டும் மீண்டும் ஒரு வரிசைமுறைகளை செய்கிறது.
முயற்சி/பிடிப்பு வழிமுறை: முயற்சி தொகுப்பில் ஒரு பணியானது தோல்வியுற்றால், பிடித்திடும் தொகுப்பில் உள்ள பணிகள் செயல்படுத்தப்படும்.
அறிவுறுத்தலை முடித்தல்: பணிப்பாய்வுகளை விட்டு வெளியேற ஒரு வரிசைமுறையை உருவாக்கிடுகின்றது.
6.நேர மண்டலங்கள்: JS7 வெவ்வேறு நேர மண்டலங்களிலிருந்து பணிப்பாய்வுகள், அட்டவணைகள்வரிசைமுறைகளை நிர்வகிக்க முடியும். பயனாளர் இடைமுக தேதிகளை நேரங்களை பயனாளரின் நேர மண்டலத்திற்கு ஏற்ப மாற்றியமைக்கின்றது.
7.அறிவிப்புகள்: வெற்றிகரமான அல்லது தோல்வியுற்ற பணிகளின் அல்லது பணிப்பாய்வுகளின் போது அறிவிப்புகளை அனுப்ப JS7 JOC காக்பிட்டை உள்ளமைக்க முடியும். அறிவிப்புகளை மின்னஞ்சல் மூலம் அனுப்பலாம், கட்டளை வரியில் இருந்து கணினியின் திரைகள் போன்ற மூன்றாம் தரப்பு கருவிகளுக்கு அனுப்பலாம்.
JOC காக்பிட் பயனாளர் இடைமுகத்தில் நிகழ்நேரத்தில் அறிவிப்புகள் தெரியும்.
8. கிடைக்கக்கூடியதளங்கள்: JS7 தயாரிப்புகளானவை Docker®, Kubernetes®, OpenShift® போன்றவற்றைப் பயன்படுத்தி மேககணினி செயலிகளாக கிடைக்கின்றன.
மேலும் Windows®, Linux®, AIX®, Solaris®, macOS® போன்றவற்றைப் பயன்படுத்தி வளாகத்தில் செயலிகளைகவும் கிடைக்கின்றன.
9மையமான(Central) / மையமற்ற(Decentral) தகவமைவு: JS7 ஆனது மையமற்ற IT நிறுவனங்களுக்கு உள்ளமைவு, கண்காணிப்பு, கட்டுப்பாட்டின் ஒரு புள்ளியை வழங்குகிறது. பல்வேறு வாடிக்கையாளர் திறன்கள் JS7 தயாரிப்புகளின் பரவலாக்கப்பட்ட பயன்பாட்டை ஆதரிக்கின்றன.
ஒரு வாடிக்கையாளருக்கு அல்லது ஒரு பயன்பாட்டிற்கான பணிப்பாய்வினை பணிகளை நிர்வகிப்பதை கடமைகளின் பகிர்வு உள்ளடக்கியது. ஒரு பங்கு அடிப்படையிலான அணுகல் மாதிரி ஒரு குழுவிற்கு நுணுக்கமான அனுமதிகளை அனுமதிக்கிறது.
10.பயனாளரின் இடைமுகம்: JS7 JOC காக்பிட் என்பது சரக்கு மேலாண்மை, கண்காணிப்பிற்கும் கட்டுப்பாட்டிற்குமான பயனாளர் இடைமுகமாகும். இது இணைய உலாவிகளுக்குக் கிடைக்கிறது ,பாதுகாப்பான சான்றுறுதியையும் ஏற்புறுதியையும், பதிலளிக்கக்கூடிய வடிவமைப்பு , நிகழ்நேரத் தகவல் போன்ற சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.
11.பணிகளும், பணிப்பாய்வுகளும், வரிசைமுறைகளும்: JS7 JobScheduler ஆனது பணிப்பாய்வுகளில் சேர்க்கப்படுகின்ற , பணிகளுக்கும் பணிப்பாய்வுகளுக்குமான சார்புநிலைகளை உள்ளமைக்க பணிகளை வழங்குகிறது.
இங்குபணிகள் ஆனவை ஒரு பணிப்பாய்வுக்கான வழிமுறைகளை செயலாக்குகின்றன மேலும்நிரல்கள், உரைநிரல்கள், கட்டளைகள் போன்ற இயங்கக்கூடிய கோப்புகளை இயக்க பயன்படுகின்றன.
பணிப்பாய்வுகளை ஒரு தொகுப்புவரியாகக் காணலாம், அதில் பல்வேறு பணிகள் தொடர்ச்சியாக அல்லது இணையாக நிறைவேற்றப்படுகின்றன. பணிப்பாய்வுகள் முட்கரண்டி/சேர்த்தல், சுழற்சி, ஆதார பூட்டுகள் போன்ற பணிச் சார்புகளை செயல்படுத்த கூடுதல் வழிமுறைகளை வழங்குகின்றன.
வரிசைமுறைகள் என்பது நாட்காட்டி(Calendar) நிகழ்வுகள், கோப்புகளைப் காண்பது அல்லது தேவைக்கேற்ப ஒரு பணிப்பாய்வு துவங்குகின்ற தூண்டுதல்கள் ஆகும்.
12.நாட்காட்டிகளும், திட்டமிடுதல்களும்:நாட்காட்டிகள்: நாட்காட்டிகளானவை பணிப்பாய்வு துவங்கப்பட வேண்டிய நாட்களை வழங்குகின்றன. இது பணி நாட்கள், பணி செய்யாத நாட்களைக் கருத்தில் கொள்கிறது. ஒரு மாதத்தின் 2வது செவ்வாய், ஒவ்வொரு இரண்டாவது வணிக நாள் போன்ற பல்துறை விதிகளை நாட்காட்டிகள் வழங்குகின்றன.
திட்டமிடுதல்கள்: திட்டமிடுதல்கள் ஒரு நாட்காட்டியைப் பயன்படுத்துகின்றன . கொடுக்கப்பட்ட நாளில் பணிப்பாய்வு துவங்கப்பட வேண்டிய நேரத்தைக் குறிப்பிடுகின்றன. குறிப்பிட்ட வாரநாட்கள், மாதத்தின் நாட்கள் வரை செயல்படுத்துவதைக் கட்டுப்படுத்த, நாட்காட்டி வழங்கிய தேதிகளை அட்டவணைகள் மேலும் கட்டுப்படுத்தலாம்.
சேர்க்கைநேரங்கள்: பணி துவங்கிடுகின்ற நேரம் சேர்க்கை நேரங்களுக்கு மட்டுப்படுத்தலாம், அதாவது பணிகள் அடையும் வரை காத்திருக்க வேண்டிய கால இடைவெளிகளாகும், எடுத்துக்காட்டாக வார நாட்களில் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலான நேர இடைவெளி. சேர்க்கை நேரங்கள் இல்லாதபோது பணிகள் தவிர்க்கப்படும்படி கட்டமைத்திடலாம்
13.நிர்வகிக்கப்பட்ட கோப்பு பரிமாற்றம்: JS7 JobScheduler ஆனது நிர்வகிக்கப்பட்ட கோப்பு பரிமாற்றத்திற்கான YADE இன் Add-Onஐ உள்ளடக்கியது. YADEஇன் ஒருங்கிணைப்பில் கோப்பு பரிமாற்ற பணிகளை இயக்கவும் JOC காக்பிட் பயனர் இடைமுகத்துடன் கோப்பு பரிமாற்ற வரலாற்றைக் காட்டுதலும் இதில் அடங்கும்.
YADE FTP, FTPS, SFTP, WebDAV, SMB, HTTPS ஆகியவற்றுடன் கோப்பு பரிமாற்றங்களை ஆதரிக்கிறது. பரிமாற்றம், கோப்புகளின் மறுபெயரிடுதல், முந்தைய , பிந்தைய செயலாக்கம், இணக்கமான பதிவு, கோப்பு பரிமாற்ற வரலாறு, அறிவிப்புகள் போன்ற பலவற்றிற்கான மேம்பட்ட அம்சங்களை YADE வழங்குகிறது.
14.REST API: JS7 JOC காக்பிட் ஒரு சக்திவாய்ந்த REST API உடன் வருகிறது.
பணிப்பாய்வுகளைத் தொடங்க, இயங்கும் பணிகளை நிறுத்த, வரிசைமுறைகளை நீக்கம்செய்திட. சரக்குகளை நிர்வகிக்க, பணிப்பாய்வுகளைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் பயன்படுகின்றது
15.தரவுதளம்: JS7 JobScheduler, சரக்குகளின் தகவல் , பணி , பணிப்பாய்வு செயலியின் வரலாறு ஆகியவற்றைச் சேமிக்க ஒரு தரவுத்தளத்தைப் பயன்படுத்துகிறது.
16.பாதுகாப்பு
இணைப்பு மேலாண்மை: JS7 தயாரிப்புகள் HTTP நெறிமுறையைப் பயன்படுத்துகின்றன. TLS/SSL சான்றிதழ்களைப் பயன்படுத்தி HTTPS மூலம் இணைப்புகளைப் பாதுகாக்க முடியும்.
அணுகல் மேலாண்மை: பல்துறை அடையாளம், அணுகல் மேலாண்மை ஆகியவை அடங்கும்.
Microsoft Active Directory® உட்பட LDAP, OIDC அடையாள வழங்குநர்களுடன் ஒருங்கிணைக்கிறது.
சான்றிதழ் அடிப்படையிலான ஏற்பினை அனுமதிக்கிறது (ஒற்றை காரணி / இரட்டை காரணி ஏற்பு)
அடையாள சேவைகளைப் பயன்படுத்தி Keycloak® , HashiCorp® பூட்டுதல் அங்கீகார சேவையகத்துடன் ஒருங்கிணைக்கிறது
நற்சான்றிதழ்களின் மேலாண்மை: நற்சான்றிதழ் அங்காடியில் பணிகளுக்கான கடவுச்சொற்கள் போன்ற முக்கியமான தகவல்களைச் சேமிக்கிறது.
JS7 முகவர்களுடன் பாதுகாப்பான பயனாளர் பணிகளை மாற்றுவதற்கு Windows Credential Managerஐப் பயன்படுத்துதல், Windows இல் வெவ்வேறு பயனாளராக இயங்குகின்ற பணிகளைப் பாவையிடுக.
17. சான்றுறுதியும், ஏற்புறுதியும்
சான்றுறுதி: JOC காக்பிட் பல்வேறு அடையாளச் சேவைகளிலிருந்து சான்றுறுதியையும் ஏற்புறுதியையும் செயல்படுத்துகிறது.
LDAP (Microsoft® Active Directory), OIDC, வளாக பயனர் மேலாண்மை, சான்றிதழ்கள் அல்லது பல கூடுதல் அடையாளச் சேவைகள் மூலம் சான்றுறுதி செய்யப்படுகிறது.
ஏற்புறுதி: பாத்திரங்களுக்கு சுதந்திரமாக ஒதுக்கக்கூடிய அனுமதிகளால் ஏற்புறதி கட்டமைக்கப்படுகிறது. திட்டமிடல் பொருட்களைகாண்பதற்கும் நிர்வகிப்பதற்கும் எந்தவொரு செயலியும் அனுமதிகளுக்கு உட்பட்டது.
சரக்குகளில் உள்ள குறிப்பிட்ட கோப்புறைகளுக்கு பொருட்களை திட்டமிடுவதற்கான அணுகலை கட்டுப்படுத்துகின்ற கோப்புறை அனுமதிகள் கிடைக்கின்றன.
18.பணிச் சார்புகள்: JS7 JobScheduler ஆனது மிகவும் சிக்கலான பணி சார்புகளை செயல்படுத்துகின்ற பல்வேறுவழிமுறைகளுடன் வருகிறது, எடுத்துக்காட்டாக
பிற்காலத்தில் இணைக்கப்படும் இணையான பணிகளில் தொடர்ந்து செயல்படுத்துதல். பணிகளை இணையாக செயல்படுத்தும் ஆதார பூட்டுகளை கருத்தில் கொள்ளுதல். குறிப்பிட்ட வணிக நேரங்களில் பல பணிகளை சுழற்சி முறையில் செயல்படுத்துதல்.
19.தினசரிசெயல் திட்டம்: JS7 ஆனது தினசரி செயல் திட்டத்தை நிர்வகிக்கிறது, அதில் தொடர்ச்சியான வரிசைமுறைகள் தானாகவே சேர்க்கப்படும். தினசரித் செயல்திட்டம் பயனாளரின் தலையீட்டை, விதிவிலக்குகளைத் தொடங்கும் நேரத்தையும், ஒரு நாளின் அடிப்படையில் வரிசைமுறைகளின் அளவுருவையும் மாற்ற அனுமதிக்கிறது.
20.தணிக்கையும்உள்நுழைவும்: தணிக்கைப் பதிவு பயனர்களால் மாற்றியமைக்கப் பட்ட திட்டமிட்டவாறான பொருள்கள் பற்றிய தகவலைச் சேமிக்கிறது. இது இணக்கமான முறையில் மாற்றங்களைக் கண்காணிக்க அனுமதிக்கிறது.
தணிக்கைப் பதிவில் தொடர்புடைய திட்டமிட்டவாறான பொருள்களானவை, எடுத்துக்காட்டாக பணிப்பாய்வுகள், வரிசைமுறைகள், அட்டவணைகள் போன்றவை, அவற்றின் நிலையை மாற்றியமைக்கும் செயல்கள் பற்றிய தகவலைக் கொண்டுள்ளது.
21.PowerShell எனும்தொகுதி: JS7 JobScheduler ஆனது PowerShell தொகுதி, சரக்கு மேலாண்மை, கண்காணிப்பு , கட்டளை வரியில் இருந்து கட்டுப்படுத்து வதற்கான செயலிகளை வழங்குகிறது.
பவர்ஷெல் தொகுதி என்பது REST API இன் மேல் பாதுகாப்பிற்கானஒரு உறையாகும், எனவே அதுபோன்ற செயலிகளை செய்கிறது.
இது தொடர்ச்சியான பணிகளின் தானியிங்கிசெயலை எளிதாக்குகிறது, எடுத்துக்காட்டாக ஒரு பணிப்பாய்வு துவங்குவதைத் தூண்டுதல்

மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் www.sos-berlin.com/en/jobscheduler-features எனும் இணையதளமுகவரிக்கு செல்க

%d bloggers like this: