Kolibri எனும் மீச்சிறு திறமூல (open-source) இயக்கமுறைமை (OS)

இந்த  இயக்கமுறைமையானது (OS) வெறும் 12 MB அளவே கொண்டது; இது Windowsஐ விட வேகமாக இயங்கத் தொடங்குகிறது (boot) .Windows போன்ற நவீன இயக்குமுறைமைகள் பெரும்பாலும் தேவையற்ற மென்பொருட்களாலும் (bloatware), மெதுவான தொடக்க நேரத்தாலும் (slow boot times) மிகமெதுவாக செயல்படுகின்றநிலையை அடைகின்றன. அதற்கு பதிலாகLinuxஆனது இலகுரக மாற்றுகளை வழங்கினாலும், KolibriOS மிகக் குறைந்த வளங்களைப் பயன்படுத்தும் அணுகுமுறையை (minimalism) உச்சத்திற்குக் கொண்டு செல்கிறது. இது செயல்படுவதற்காக வெறும் 8 MB முதல் 12 MB வரையிலான RAM , சில மெகாபைட் அளவே கொண்ட வட்டு இடவசதி (disk space) மட்டுமே தேவைப்படும் இந்த மிகச்சிறிய இயக்கமுறைமையானது, முழுமையான வரைகலை பயனர் இடைமுகம் (GUI), இணைய உலாவி, உரைத் தொகுப்பி (text editor) , விளையாட்டுகள் ஆகியவற்றை வழங்குகிறது; மேலும் இது உடனடியாக இயங்கத் தொடங்குகிறது.

தோற்றமம் Assembly மொழியின் ஆற்றலும்

MenuetOS-இன் உருவாக்கியவர்கள் மூடப்பட்ட-மூல (closed-source) 64-பிட் கட்டமைப்பிற்கு மாறிய பிறகு, 2004-இல் MenuetOS-இன் திறமூல (open-source) வழித்தோன்றலாக KolibriOS என்பது உருவானது. (MenuetOS என்பது ஒரு 1.44 MB அளவேயுள்ள செருகுவட்டில் அடங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட 32-பிட் இயக்கமுறைமையாகும்).

இன்று இந்தKolibriOS-ஐ தனித்துவமாக்குவது அதன் நிரலாக்க குறிமுறைவரிகளாகும் (codebase) . இதன் தனிக்கணிமஅடுக்கின்உருவாக்கமைய (100 KB-க்கும் குறைவானது), இயக்கிகள் (drivers) ,முக்கிய பயன்பாடுகள் அனைத்தும் C அல்லது C++ போன்ற உயர்-நிலை கணினிமொழிகளுக்குப் பதிலாக FASM (Flat Assembler)-இல் எழுதப்பட்டுள்ளன. x86 assembly எனும் கணினிமொழியில் நேரடியாக நிரலாக்கம் செய்வதன் மூலம், மொழியின் இயக்க நேரங்கள் (language runtimes) , சுருக்க அடுக்குகள் (abstraction layers) நீக்கப்படுகின்றன; இதனால் கணினி நேரடியாகச் செயலியுடன் (processor) தொடர்பு கொள்ள முடிகிறது. சில பல்லூடக பணிகளில், கையால் எழுதப்பட்ட இந்த assembly குறிமுறைவரிகள், சிறப்பாக மேம்படுத்தப்பட்ட Cஇன் குறிமுறைவரிகளை விட மூன்று முதல் நான்கு மடங்கு சிறந்த செயல்திறனை வெளிப்படுத்துகிறது.

திவாய்ப்புகளம் பயன்பாட்டுவரம்புகளும்

மிகச்சிறிய அளவைக் கொண்டிருந்தாலும், KolibriOS ஆனது அனைவரையும் கவர்ந்திழுக்கக்கூடிய பல வசதிவாய்ப்புகளைக் கொண்டுள்ளது:

ருகுவட்டு அடிப்படைப் பதிப்பு: இதில் செயல்படும் GUI ஆனது, முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட பல்பணி (preemptive multitasking), TCP/IP வலைபின்னலின் அடுக்கு, பல்வேறு கோப்பு முறைமை ஆதரவுகள் (FAT12/16/32, exFAT, ext2/3/4, படிக்க-மட்டுமேயான NTFS) ஆகியவை அடங்கும்.

ISO விரிவாக்கப்பட்ட பதிப்பு: இதில் NetSurf உலாவி, சொல் செயலி (word processor), DOSBox , DOOM, Quake போன்ற மரபு விளையாட்டுகள் உட்பட 200-க்கும் மேற்பட்ட பயன்பாடுகள் உள்ளன.

இருப்பினும், நவீன கணினிப் பயன்பாட்டிற்கு KolibriOS ஒரு நடைமுறைக்கு ஏற்ற தினசரி இயக்கமுறைமையாக அமையாது:

இணைய வரம்புகள்: NetSurf எனும்உலாவியால் நவீன HTML5 இணையதளங்களைச் சரியாகக் காட்ட (render) முடியாது.

வன்பொருள் கட்டுப்பாடுகள்: இசை, வலைபின்னலின் இணக்கத்தன்மை குறிப்பிட்ட பழைய சிப்புத்தொகுதிகளுக்கு (legacy chipsets) மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது.

கட்டமைப்பு: இது முற்றிலும் 32-பிட் x86 அமைப்பாகும்; அதாவது இதற்கு ARM அல்லது 64-பிட் ஆதரவு இல்லை.

hummingbird எனும் பறவையைக் குறிக்கும் Slavic எனும் சொற்களின் பெயரால் அழைக்கப்படும் KolibriOS, மென்பொருள் கைவினைத்திறன் , செயல்திறன் ஆகியவற்றில் ஒரு தலைசிறந்த படைப்பாகத் திகழ்கிறது. இது கீழ்நிலை நிரலாக்கத்திற்கான ஒரு சிறந்த கல்விக் கருவியாகச் செயல்படுவதுடன், பல பத்தாண்டுகள் பழமையான x86 அளவேயுள்ளவன்பொருளைப் புத்துயிர் பெறச் செய்வதற்கான ஒரு சிறந்தவழியையும் வழங்குகிறது. இதன் மூலம், மென்பொருள் பெருக்கம் என்பது ஒரு தொழில்நுட்பத் தேவையன்று, மாறாக ஒரு வாய்ப்புகளின் தேர்வு என்பதை இது நிரூபிக்கிறது.

Leave a Reply