லேங்க்ஸ்கேப், பயிலகம், கணியம் இணைந்து நடத்தும் வெப் டிசைனிங் இலவச இணையவழிப் பயிற்சிகள்

மொழிபெயர்ப்புத் துறை முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான லேங்ஸ்கேப்(Langscape) நிறுவனம், பயிலகம், கணியம் ஆகியவற்றுடன் இணைந்து வெப் டிசைனிங் (HTML, CSS,JS, Canvas) பயிற்சிகளை இலவசமாக நடத்த முன்வந்துள்ளது. பயிற்சி இணையவழியே ஆறு (கூடினால் எட்டு) வாரங்கள் நடத்தப்படும். பயிற்சி ஒவ்வொரு நாளும் ஒரு மணிநேரத்தில் இருந்து ஒன்றரை மணிநேரம் வரை இருக்கும்.

பயிற்சியில் கலந்து கொள்ள:
1) ஏதாவது ஒரு நிரல்மொழி(programming) அடிப்படைகள் தெரிந்திருக்க வேண்டும்.
2) ஒவ்வொரு நாளும் பயிற்சி நேரம் தவிர, ஓரிரு மணிநேரங்கள் பயிற்சிக்குக் கட்டாயம் ஒதுக்க வேண்டும்.
3) இணைய வசதியுடன் கூடிய கணினி / மடிக்கணினி வைத்திருக்க வேண்டும்.
4) முழுமையாகப் பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும்.
5) பயிற்சி லினக்ஸ் இயங்குதளத்தில் நடத்தப்படும்.

பயிற்சியில் கலந்து கொண்டு, சிறப்பிடம் பிடிப்போர்க்கு லேங்ஸ்கேப் நிறுவனம் நேர்காணல் நடத்திப் பணிவாய்ப்புக் கொடுக்க முன்வந்துள்ளது.

பயிற்சி தொடங்கும் நாள்: ஜூன் 3, 2022
நேரம்: பிற்பகல் 2 – 3.30 இந்திய நேரம்

பயிற்சிக்கு முன்பதிய: forms.gle/CzZJ24MqUqiyb3h37

Leave a Reply