க்னு/லினக்ஸ் கற்போம் – 3

யுனிக்ஸிலே பயன் படுத்துர புதிய சொற்களை இப்போ அறிமுகம் செஞ்சுடுவோம்.

யுனிக்சா இருக்கட்டும், வேற எந்த விஞ்ஞான விளக்கக்களிலே பல புதிய சொற்களைப் பயன் படுத்துவாங்க. மொதல்லே கேக்கரப்போ பயமா கூட இருக்கும். அது என்ன செய்யுதுன்னு புரிஞ்சுக்கிட்டா, அடே, இதையா புதிசா பேரெல்லாம் வச்சு நம்மளை பயமுறுத்துராங்கன்னு தோணும்.

மொத மொதல்லே, அதிகமான பயன்படுத்தர வார்த்தைகளைப் பார்ப்போம்.

ஃபைல் (File)   எல்லா ஆபீசுலேயும் பைலிலே அந்தக் காய்தங்களை வகைப் படுத்தி, ஒவ்வொரு வகையையும் ஒரு கோப்பாக , கோர்வையாக  சேமிச்சு வச்சுடுவாங்க. ஆங்கிலத்திலே அதை ஃபைல் என்று சொல்லுவாங்க. நாம கூட படிச்ச வாங்கின பட்டங்கள், சர்டிபிகேட், வேலைக்கான உத்தரவு, புரோமோஷன் லெட்டர் எல்லாத்தையும் , ஒண்ணா ஒரு ஃபைலிலே போட்டு வைக்கிறொம். வீடு பத்திரம் , பாங்குக் கணக்கு எல்லாத்துக்கும் தனியா ஒரு ஃபைல் போட்டு வைப்போம். ஒவ்வொரு ஃபைல் அட்டையில் ஒரு பேரு எழுதிவைப்போம். அப்பதான், தேடாம விரைவா கண்டுபிடிக்க முடியும்.முக்கிய செய்திகளை  காகிதங்களில் எழுதி , கம்ப்யூட்டர்லே உள்ள ஃபைல் கூட அப்படித்தான். எல்லா ஃபைலுக்கும் தனியான ஒரு பேரு கொடுப்போம். இந்த ஃபைல் எல்லாத்தையும் ஆபீசுலே ஒரு அலமாரிலே வச்சுடுவாங்க. ஒரு விதத்திலே, அலமாரி கூட ஒரு ஃபைல் தான்.  சில பெரிய ஆபீசுகளிலே பெரிய பெரிய அறைகளுக்குள்ளே பல அலமாரிகள் இருக்கும். இதை ரெக்கார்டு ரூம் என்று சொல்லுவாங்க.

அதையும் நாம ஒரு மிகப் பெரிய ஃபைலா மனசுலே நினைச்சுப் பார்க்கலாம்.

யுனிக்ஸ் மட்டுமில்லாம எல்லா ஆபரேட்டிங் சிஸ்டம்லேயும் அலமாரி, ரெக்கார்டு ரூம் எல்லாத்தையும் பொதுவா ஒரு ஃபோல்டர் (Folder). ஃபோல்டருக்குள், ஃபோல்டர் இருக்கலாம். ஃபைலும் இருக்கலாம், இல்லை இரண்டுமே இருக்கலாம்.

கம்ப்யூட்டர் ஃபைல் பொதுவா இரண்டு வகையா பிரிக்கலாம். ஒண்ணு புரோகிராம் (Program) ஃபைல், இரண்டாவது டேட்டா (Data) ஃபைல்.

ப்ரொக்ராம் ஃபைல் (Executable) கம்ப்யூட்டர்லே ஓடும். டேட்டா ஃபைல் ஓடாது. அதை ஓட்ட வேற ஓடுற புரோகிராம் (application program) வேணும். டேட்டா ஃபைல்லே பல வகைகள் இருக்கு,  அது பாட்டுக்கான (music) டேட்டாவா? படத்துக்கான  (picture) டேட்டாவா? இல்லை சினிமாமாதிரி (video) ஓடர வகையா, டாக்குமெண்ட் (Document)  வகையா?

இதை எப்படி கண்டு பிடிக்கறது. ஃபைல் ஒவ்வொண்ணுக்கும் பேரு வச்சோமில்லையா? அந்த பேரை வச்சே கண்டு பிடிக்கணும்.

பேரும் போட்டுவிடுவார்கள், புரொபசரோட மனசுலே மணியடிச்சுது.  நாமளும் ஃபைல் பேறோட அது என்ன தொழில் செய்யுதுன்னு சொல்லிடலாம் என்று ஃபைல் எக்ஸ்டென்ஷன் என்று மூணு  இல்லே   நாலு எழுத்து  கொடுத்தாக்க.

 

sh, py, rb, bin என்ற ஃபைல் பேரு பின்னாடி இருந்தா, அது ஒரு ஓடர வகை – புரோகிராம் ஃபைல் என்று தெரிஞ்சு போயிடும், இல்லையினா, doc  pdf  jpg  wav  .html tiffஎன்ற பேரெல்லாம் இருக்கும். இதெல்லாம் டேட்டா ஃபைல்

அடுத்ததா ஃபைல் சிஸ்டம் என்றால் என்ன என்று பார்க்கலாம்.

இங்கே கவனிக்க வேண்டிய ஒன்று:

நம்ம ஊருலே  எண்ணைய்  லிட்டர் அளவுலே தராங்க, புளி வெல்லாம் எல்லாம் கிலோடவிலே தராங்க. துணியை மீட்டர் கணக்கிலே தராங்க இல்லியா.  யுனிக்ஸ்லே ஒரு நல்ல வழக்கம் . இங்கே பேசரது எல்லாமே ஃபைல் தான். கொடுக்கறது ஒரு ஃபைல்லே, வாங்கரதும் ஒரு ஃபைல்.  கப்யூட்டர்லே பல (I / O devices) . விதமான பிரிண்டர், டிஸ்க் டிரைவ் , சீடி ரோம் டிரைவ் மோடம் எல்லாம் இணைச்சிருக்காங்கள்ளே இதை எல்லாத்தையுமே ஃபைல்களா பாக்குது.

அப்படின்னா என்ன?

ஒரு ஃபைல்லே என்ன எல்லாம் செய்யலாம்?

எந்த ஃபைலா இருந்தாலும்  ஒரு ஐந்து  கட்டளைக்குள்ளே அடங்கிடும். பொதுவா கவர்மெண்ட் ஆபீசுலே ஃபைலை வச்சு என்ன செய்வோம்?

 

ஃபைல் உள்ளே எதாவது எழுதணும்  இல்லைபடிக்கணும்  .படிக்கும் / எழுதும் முன்னாடி ஃபைலைத் திறக்கனும், வேலை முடிஞ்சப்புரம் ஃபைலை மூடிடணும். ஆக 4 கட்டளைகள் போதும். ஐந்தாவதா ஒரு கட்டளை – கண்ட்ரோல்.

குறிப்பிட்ட ஃபைலே திறக்கனும். அதுக்கப்புரம் படிக்கலாம் இல்லையினா எழுதலாம். எழுதினப்புரம் என்ன செய்யனும். ஃபைலை மூடனும்..

சில சமயம் படிக்கறது எழுதரது  இந்த  இரண்டும் இல்லாமே சில வேலைகள்  செய்யலாம்,  ஒரு பேப்பரை கிழிக்கலாமா, இல்லை கிழிஞ்சதை ஒட்டலாமா … இப்படி ஏதாவது ஒண்ணு. அதுக்கு ஒரு உபரியாக ஒரு கமாண்ட் அல்லது கட்டளை.

பிராசஸ்: இதை அடுத்ததா சொல்லப் போகிறேன்.

 

இப்போ வாசகர்களுக்கு ஒரு சின்ன வேலை :

எத்தனையோ வகையான ஃபைல் சிஸ்டம் பழக்கத்திலே இருக்கு. அதை எல்லாம் கூகுள் பண்ணித்தேடி ஒவ்வொண்ணைப்பத்தியும் மூணு நாலு வரிகள் விளக்கம் தரணும்.பிராசஸ் என்கிற பேருலே  யுனிக்ஸ்  உள்ளே எத்தனையோ இருக்கு.    நீங்களா என்னவெல்லாம்  தேடிக் கண்டுபிடிச்சு   ஒரு பட்டியல் தயார் செஞ்சு தரணும்..

அடுத்தமாதம் பாக்கலாமா?

 

 

 

 

 

 

நடராஜன் இவர் ஒரு மின்னணுவியல் அறிஞர். அரசு, தனியார், கல்வி துறைகளில் பெரும் அனுபவம் கொண்டவர். Scientist, Systems Engineer, Development engineer, Manager, General Manager, CEO, Consultant போன்ற பல பதவிகளை வகித்தவர். தனது வலைபதிவுகள் மூலம் தன் கல்வி பணிகளை தொடர்கிறார்.

 

மின்னஞ்சல் : natarajan.naga@gmail.com

வலை பதிவு : science-of-good-living.blogspot.com

education-a-pain.blogspot.com

science-of-spirituality.blogspot.com
sprituality-is-knowledge.blogspot.com

%d bloggers like this: