திறந்த நிலை பயன்பாட்டிற்கு சிறந்த ஒரு எடுத்துக்காட்டாக விளங்குவது தான், லிபரி ஆபீஸ். இன்றைக்கு, நம்மில் பலரும் பயன்படுத்தக்கூடிய சிறந்த திறந்த நிலை ஆபீஸ் இயங்குதளம்மாக இது வழங்குகிறது.
உங்கள் அலுவலக பணிகள் அனைத்தையும், ஒரே செயலில் இலவசமாக செய்ய முடிகிறது.
இது முழுக்க முழுக்க ஒரு திறந்த நிலை பயன்பாடு என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், லிப்ரி ஆபீஸ் உடைய வருங்காலம் குறித்து விவாதிப்பதற்காகவும் மேலும் பல திறந்த நிலை தரவுகள் குறித்து விவாதிப்பதற்காகவும் Luxembourg நாட்டில் வைத்து ஒரு மாநாடுக்கு ஏற்பாடு செய்திருக்கிறது, லிபரி ஆபிஸ் குழு.
வெறும், லிபிரி ஆபீஸ் குறித்து மட்டும் விவாதிக்காமல், திறந்த நிலை பயன்பாடுகளை உருவாக்கக் கூடிய ஒவ்வொரு நபரையும், ஒவ்வொரு குழுவையும் ஊக்குவிக்கும் விதமாக இந்த மாநாடு நடத்தப்படவிருக்கிறது.
அக்டோபர் 10ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை இந்த மாநாடு நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
Belval, Esch-sur-Alzette, Luxembourg என் முகவரியில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.
இந்த மாநாட்டில் பங்கேற்க விரும்புவர்கள், கீழே வழங்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம்.
மேலும் இந்த மாநாட்டின் சில முக்கியமான குறிக்கோள்கள் குறித்து பார்த்து விடலாம்.
- திறந்த நிலை பயன்பாடுகளை ஊக்கு வித்தல்
- தொழில்நுட்ப தன்னாட்சி நிலையை அடைதல்
- லிபரி ஆபீஸ் ODF தரவு முறை குறித்து விவாதித்தல்
- Libre office edunet குறித்து விவாதித்தல்
எப்படி இந்த நிகழ்வு குறித்து முழுமையாக அறிந்து கொள்ள விரும்பினால், கீழே வழங்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி பார்வை இடவும்.
conference.libreoffice.org/2024/
கட்டுரையாளர்:-
ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
( தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி,
நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின் மடல் : srikaleeswarar@myyahoo.com
இணையம் : ssktamil.wordpress.com