நண்பரே, வணக்கம்.
கட்டற்றத் திறவுற்று மென்பொருட்களில் லிப்ரெஓபிஸ் ஒரு முக்கிய இடத்தை வகிக்கின்றது. அதனைத் தமிழாக்கும் பணியை 2011 ஆண்டு முதற்கொண்டு நாம் மெற்கொண்டு வருகின்றோம். கடந்த ஆண்டு லிப்ரெஓபிஸ் முழுமையாக தமிழாக்கப்பட்டு வெளியிடப்பட்டது.
இவ்வாண்டு, லிப்ரெஓபிஸின் புதிய வெளியீடுகள் வெளிவந்துள்ளன. அடுத்த மாதம் 22 ஆம் திகதி லிப்ரெஓபிஸ் 4.3 வெளிவரவிருக்கிறது. அப்பதிப்பும் முழுமையாக தமிழில் இருக்க வேண்டும் என விரும்புகிறோம். இதுவரை அதன் ஒரு இலட்சம் சொற்களில் 88 ஆயிரத்தை தமிழுக்கு மொழிபெயர்த்து விட்டோம். இன்னும் 11,767 சொற்கள் மீதமுள்ளன.
அதனைத் தமிழாக்குவதற்கு உங்கள் உதவி தேவை. அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அனைத்து சொற்களையும் மொழிபெயர்த்தாக வேண்டும். ஆர்வமிருந்தால், இங்கு செல்லுங்கள்: translations.documentfoundation.org/ta/.
இதற்கிடையில் ஒரு மகிழ்ச்சிதரும் மேம்பாட்டையும் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இத்துணை காலமும் தமிழ் லிப்ரெஓபிஸுக்கென்று ஒரு வலைத்தளம் இருந்ததில்லை. இப்போது ஒரு உருவாகிக்கொண்டிருக்கிறது. அதன் தொடுப்பு: ta.libreoffice.org/. தளத்தின் மொழிநடை ஏற்புடையதாக இருக்கிறதா என்று உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்.
தமிழ் லிப்ரெஓபிஸை முன்னெடுத்துச் செல்வதற்கானத் திட்டமொன்றையும் நாம் இப்போது தீட்டியுள்ளோம். அதனை விரைவில் உங்கள் முன் வைக்கிறேன்.
இக்கண்,
வே. இளஞ்செழியன்
மின்னஞ்சல்: tamiliam AT gmail DOT com