Linux Kernel 7.0: எனும்பதிப்பு உண்மையில் முக்கியமா?

Linuxஇன் kernel பதிப்புகள் அதன் தொடர்ச்சியான பரிணாம வளர்ச்சியின் அடையாளங்களாகும்; அவை நுட்பமான , நிலையான மேம்பாடுகளைக் கொண்டு வருகின்றன.

Linux kernelஇன் பதிப்பு 6.x-லிருந்து 7.0-க்கு மாறும்போது, ​​அது இயல்பாகவே அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது. ஒரு புதிய முக்கிய பதிப்பு  என்பது பெரும்பாலும் ஒரு பெரிய பாய்ச்சலாகத் தோன்றலாம். ஆனால் Linux உலகில், பதிப்பு எண்கள் எப்போதும் முழுமையான நிலையை உணர்த்துவதில்லை.  2026-ல், அடுத்த Linuxஇன் kernel வெளியீடு 7.0-ஆக இருக்கலாம் என்றும், வழக்கமான வெளியீட்டு கால அட்டவணையின்படி அது விரைவில் வரக்கூடும் என்றும் Linus Torvalds குறிப்பிட்டார். இத்தகைய பதிப்பு மாற்றம் நிகழும்போது, ​​நமக்குஒரு பொதுவான கேள்வி எழுகிறது: இது ஒரு முக்கிய திருப்புமுனையா அல்லது வழக்கமான ஒரு மேம்படுத்தல் மட்டும்தானா?

பல ஆண்டுகளாகkernelஇன் மாற்றங்களுடன் நெருக்கமாகப் பணியாற்றியுள்ள நமக்கு, இந்தக் கேள்வி சுவாராசியமாகத் தோன்றுகிறது; அதற்குக் காரணம் அந்த எண் மட்டுமல்ல, பொதுமக்கள் அது எதைக் குறிப்பதாகக் கருதுகிறார்கள் என்பதுதான் மிக முக்கியமாகும்.

kernel பதிப்பு முறையின் ஒரு கண்ணோட்டம்

Linux இன் kernel ஆனது ஒருபோதும் சந்தைப்படுத்தல் நோக்கிலான கடுமையான பதிப்பு முறையைப் பின்பற்றியதில்லை. அதன் பதிப்புஎண் முறை என்பது முக்கிய மைல்கற்களைக் குறிப்பதன்று, மாறாக பரிணாம வளர்ச்சியையே பிரதிபலிக்கிறது. 1990-களின் தொடக்கத்தில், Linux ஒரு சிறிய செயல் திட்டமாகவே தொடங்கியது. 1994-ல் வெளியிடப்பட்ட பதிப்பு 1.0, அது பரவலான பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் நிலையானதாக மாறியதைக் குறிக்கும் ஒரு புள்ளியாக அமைந்திருந்தது.

நீண்ட கால 2.x தொடர் (1996–2011) மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டது; இதில் SMP அமைப்புகளுக்கான ஆதரவு, மேம்படுத்தப்பட்ட வலைபின்னல், ext3/ext4 போன்ற கோப்பு முறைமைகளின் (filesystems) வளர்ச்சி ஆகியவை அடங்கும். சுவாராசியமாக, இவை அனைத்தும் முக்கிய பதிப்பு எண்ணில் அடிக்கடி மாற்றங்கள் ஏதுமின்றி நிகழ்ந்தன. 2011-க்குப் பிறகு நிலைமை எளிமையானது. பதிப்பு எண் 2.6.39-ஐ எட்டியபோது, ​​அது 3.0 என மாற்றியமைக்கப்பட்டது. அப்போது பெரிய அளவிலான மறுவடிவமைப்பு எதுவும் செய்யப்படவில்லை; மாறாக, பதிப்புஎண் முறையை எளிதாகக் கையாளும் வகையிலான ஒரு நடைமுறை முடிவாகவே அது அமைந்தது.

அதே பாணியில் தொடர்ந்தது:

3.x என்பது 4.0-ஆக மாறியது

4.x என்பது 5.0-ஆக மாறியது

5.x என்பது 6.0-ஆக மாறியது

ஒவ்வொரு மாற்றமும் தொடர்ச்சியைப் பிரதிபலித்ததே தவிர, பெரிய இடையூறுகளை ஏற்படுத்தவில்லை.

அப்படியானால், பதிப்புஎண்7.0 எதைக் குறிக்கிறது? சுருக்கமாக கூறுவதெனில், பொதுமக்கள் நினைப்பது போன்ற பெரிய மாற்றத்தையன்று. Linux இன்kernel ஆனது, பழைய அமைப்பைச் சிதைக்கும் வகையிலான மாற்றங்களையோ (breaking changes) அல்லது முழுமையாக மறுபடியும் எழுதியவைகளையோ (major rewrites) குறிக்கப் பதிப்பு எண்களைப் பயன்படுத்துவதில்லை. 6.x-லிருந்து 7.0-க்கு மாறுவது என்பது நிலையற்ற தன்மையையோ அல்லது பொருந்தாத தன்மையையோ குறிப்பதில்லை. நடைமுறையில், இது ஒரு வெளியீட்டிலிருந்து அடுத்த வெளியீட்டிற்கு மாறுவதைப் போன்றதே ஆகும். உண்மையான பணி ஒவ்வொரு சுழற்சியிலும், ஒவ்வொரு ‘ஒட்டுப்பட்டை(patch)’  , துணை அமைப்பின் (subsystem) அளவிலும் நடைபெறுகிறது.

இதை இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ள,Linux kernel இன் பதிப்பு முறை எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பார்ப்பது பயனுள்ளதாக இருக்கும்.

லினக்ஸ் கர்னல் பதிப்புகள் x.y.z ஆகிய வடிவத்தைப் பின்பற்றுகின்றன.

x (முக்கியப் பதிப்பு): இதுதான் 6.x இலிருந்து 7.0 க்கு மாறும் மாற்றமாகும். உண்மையில், இது ஒரு பெரிய கட்டமைப்பு மாற்றத்திற்கான அறிகுறியாக இல்லாமல், பெரும்பாலும் ஒரு நடைமுறை மீட்டமைப்பாகும்.

y (துணைப் பதிப்பு): இங்குதான் பெரும்பாலான மேம்பாடுகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு அதிகரிப்பும் (6.6 → 6.7 → 6.8) புதிய வசதிகள், மேம்பாடுகள் , உள்ளக மாற்றங்கள் ஆகியவற்றினை கொண்டுவருகிறது.

z (நிலையான/ ஒட்டுப்பட்டையின்(patch) பதிப்பு): இவை பிழைத் திருத்தங்கள், பாதுகாப்புப் புதுப்பிப்புகள் (6.6.1, 6.6.2), இவை நிலைத்தன்மையை உறுதி செய்கின்றன.

பல மென்பொருள் சூழல்களைப் போன்றில்லாமல், ஒரு முக்கியப் பதிப்பு உயர்வு என்பது பழைய பதிப்பிலிருந்து முறிவு ஏற்படுத்தும் மாற்றங்களைக் குறிக்காது. லினஸ் டோர்வால்ட்ஸ் அடிக்கடி சுட்டிக்காட்டியது போன்று, பதிப்பு எண்களை நிர்வகிக்கக்கூடியதாக வைத்திருக்கவே சில நேரங்களில் அவை அதிகரிக்கப்படுகின்றன.

லினக்ஸ் கெர்னல் 7.0 உண்மையில் என்ன கொண்டுவருகிறது?

வன்பொருளின் செயலாக்கத்தை கொண்டுவருகின்றது. மேலும் நவீன வன்பொருளை ஆதரிப்பதில் கெர்னலின் வலுவான கவனத்தைத் தொடர்ந்து தக்கவைக்கிறது: அதாவது வரவிருக்கும் Intel , AMD கட்டமைப்புகளுக்கான தொடக்கநிலை ஆதரவு.Qualcomm Snapdragon  உட்பட, ARM  தளங்களுக்கான தொடர்ச்சியான மேம்பாடுகள்  Appleஇன் Silicon  ஆதரவில் தொடர்ச்சியான முன்னேற்றம் .செயல்திறன் , கோப்பு முறைமை மேம்பாடுகள் ஆகியன.

செயல்திறன் சரிசெய்தல் ஒரு தொடர்ச்சியான முயற்சியாக உள்ளது:

ext4 ,Btrfs போன்ற கோப்பு முறைமைகளில் மேம்பாடுகள்.ஒரே நேரத்தில் நிகழும் உள்ளீட்டு/வெளியீட்டுப் பணிச்சுமைகளைச் சிறப்பாகக் கையாளுதல், தரவுத்தளங்கள் , அதிக சேமிப்பகம் தேவைப்படும் செயலிகளுக்கான மேம்படுத்தப்பட்ட செயல்திறன் ஆகியன.

கெர்னலில் Rust 

லினக்ஸ் கெர்னல் 7.0 ஒரு முக்கியமான படியைக் குறிக்கிறது, இதில் கெர்னலில் Rust  தொடர்ந்து முதிர்ச்சியடைந்து, படிப்படியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, கெர்னல் உருவாக்கத்தின் ஒரு வழக்கமான பகுதியாக மாறி வருகிறது, குறிப்பாக நினைவகப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான இயக்கிகளில் இது முக்கியத்துவம் பெறுகிறது.

பாதுகாப்பு, மைய மேம்பாடுகள் மைய துணை அமைப்புகள் முழுவதும் தொடர்ச்சியான செம்மைப்படுத்துதல்கள் நடைபெறுகின்றன:

சிறந்த பதிலளிப்புத்திறனுக்கான திட்டமிடுபவர்களின் மேம்பாடுகள்

CPU , கெர்னல் ஆகிய செயல்பாட்டில் பாதுகாப்பு தொடர்பான மேம்பாடுகள்

உள்ளக கூறுகளின் தொடர்ச்சியான வலுப்படுத்துதல்

பதிப்பு எண்களில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, பின்வருவனவற்றைக் கவனிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்:

மைய துணை அமைப்பு மாற்றங்கள் (நினைவக மேலாண்மை, திட்டமிடுபவர், VFS, வலையமைப்பு),கோப்பு முறைமை , சேமிப்பக அடுக்கு மேம்பாடுகள்,பாதுகாப்பு மேம்பாடுகள்,வன்பொருள் செயலாக்கம்

இவைதான் நடப்பு உலகப் பயன்பாட்டை நேரடியாகப் பாதிக்கும் காரணிகளாகும். சமீபத்திய கெர்னல் சுழற்சிகள், நினைவகத்தைக் கையாளுதல், பாதுகாப்பு , சேமிப்பக அடுக்குகளில் அர்த்தமுள்ள மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளன—பெரும்பாலும் பதிப்பு எண்ணை விட மிக அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

லினக்ஸ் கெர்னலின் வரையறுக்கும் பலங்களில் ஒன்று அதன் மேம்பாட்டு மாதிரி. திடீர், சீர்குலைக்கும் பாய்ச்சல்கள் இல்லை. ‘முழுமையாக அல்லது ஒன்றுமில்லை’ என்ற மேம்படுத்தல்கள் இல்லை. மாறாக, உலகம் முழுவதிலுமிருந்து வரும் பங்களிப்புகளுடன் இந்த அமைப்பு தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டு உருவாகிறது. இந்த அணுகுமுறை, சிக்கலான மாற்றங்களைக் கூட படிப்படியாக அறிமுகப்படுத்த அனுமதிக்கிறது, இதன் மூலம் சூழல் அமைப்பை நிலையானதாகவும் கணிக்கக்கூடியதாகவும் வைத்திருக்கிறது.

லினக்ஸ் கெர்னல் 7.0 ஒரு புரட்சி அன்று—அப்படி இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. இது சீரான, படிப்படியான முன்னேற்றத்தின் நீண்ட பயணத்தில் மற்றொரு படியைக் குறிக்கிறது. பதிப்புஎண் மாறலாம், ஆனால் அடிப்படை அணுகுமுறை அப்படியே இருக்கிறது.

பயனர்கள், உருவாக்குநர்கள் , நிறுவனங்கள் ஆகிய அனைவருக்கும் இதிலிருந்து கிடைக்கும் பாடம் எளிமையானது: முக்கியமானது பதிப்பு எண் அன்று, மாறாக அது அமைதியாகக் கொண்டுவரும் மேம்பாடுகளேயாகும்.

One thought on “Linux Kernel 7.0: எனும்பதிப்பு உண்மையில் முக்கியமா?

Leave a Reply