லினக்ஸ் கட்டளைகள் – தமிழ் விளக்கம்

தனசேகர்

<tkdhanasekar@gmail.com>

கட்டளை

விளக்கம்

1 vmstat விர்சுவல் நினைவகம் (virtual memory) பற்றிய புள்ளி விவரங்களை அளிக்கும்
2 iostat சாதனங்கள் (devices) மற்றும் கடின வட்டு பகிர்வுகளுக்கான (Hard disk partitions) சிபியூ மற்றும் உள்ளீடு வெளியீடு I/O புள்ளி விவரங்களை அளிக்கும்
3 sar கணினி செயல்பாடுகள் பற்றிய அறிக்கை அளிக்கும்
4 ps கணினியில் தற்போது செயல்பட்டு கொண்டிருக்கும் ப்ராசஸ் (process) பற்றிய விவரங்களை அளிக்கும்
5 free கணிணியில் உள்ள பயன்படுத்தப்பட்ட மற்றும் மீதம் உள்ள நினைவகம் (memory) பற்றி தெரிவிக்கும்.
6 top லினக்ஸ் கணிணியில் நடந்து கொண்டிருகும் பணிகள் பற்றி தெரிவிக்கும்
7 compgen கணிணியில் கிடைக்கக்கூடிய அனைத்து கட்டளைகள், உள்ளமைந்த (built-in) கட்டளைகள், அலைஸ்(alias) கட்டளைகள், பாஷ் முக்கிய சொற்கள் (bash keywords), பன்க்ஷன் -களை(functions) தெரிவிக்கும்.
8 uname லினக்ஸ் கணிணி பற்றிய தகவல்களை தரும்.
9 ifconfig நெட்வர்க் இடைமுகம்(interface) கட்டமைக்கும்.
10 reboot கணிணியை மீண்டும் துவக்க, நிறுத்த பயன்படும்.
11 wc ஒவ்வொரு கோப்பிலும் உள்ள புதிய வரிகள், வார்த்தைகள், மற்றும் பைட் எண்ணிக்கை பற்றி தெரிவிக்கும்.
12 nice முன்னுரிமை மாற்றும் திட்டமிடலுடன் ஒரு நிரலை செயல்படுத்துதல்.
13 renice செயல்பட்டு கொண்டிருக்கும் ப்ராசஸ்களின் முன்னுரிமைகளை மாற்றுவதற்கு பயன்படும்.
14 tee நிலையான உள்ளீடுலிருந்து (Input) படித்து, நிலையான வெளியீடு(output) மற்றும் கோப்புகளில் எழுதும்.
15 which ஒரு கட்டளையின் இருப்பிடத்தை கண்டுபிடிகும்.
16 stat கோப்பு மற்றும் கோப்புகளின் கட்டமைப்புகள் நிலை பற்றி தெரிவிக்கும்.
17 uptime கணிணி எவ்வளவு நேரம் செயல்பட்டுக் கொண்டிருகிறது என்பதை தெரிவிக்கும்.
18 w கணினியில் யார் உள்நுழைந்து இருக்கிறார்கள்? என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? என்பதை தெரிவிக்கும்.
19 service சிஸ்டம் V இனிட் ஸ்கிரிப்ட் செயல்படுத்தும்.
20 netstat நெட்வொர்க் இணைப்புகள், றௌடிங் அட்டவணைகள், இடைமுக (interface) புள்ளிவிவரங்கள், masquerade இணைப்புகள் , முல்டிகாஸ்ட் உறுபினர்கள்(multicast membership) பற்றி தெரிவிக்கும்.
21 alias நீண்ட மற்றும் அடிக்கடி பயன்படுத்தப்படும் கட்டளைகளுக்கு குறுகிய வடிவம் அளிக்க பயன்படும்.
22 unalias கட்டளைகளுக்கான குறுகிய வடிவ பெயர்களை (alias) நீக்க பயன்படும்.
23 df கோப்பு அமைப்புகள் வட்டில் இட பயன்பாடு பற்றி தெரிவிக்கும்.
24 du கோப்புகளின் இட பயன்பாடு பற்றி தெரிவிக்கும்.
25 setenforce செக்யூரிட்டி என்ஹன்செடு லினக்ஸ் (selinux) செயல்படும் முறையை மாற்றுவதற்கு பயன்படும்

 

About Author

ஓஜஸ்
உங்களுள் ஒருவன். உங்களைப் போல் ஒருவன்!!! http://bit.ly/ojas9 | http://bit.ly/isaai

%d bloggers like this: