விண்டோஸ் XP-ஐ மறக்க செய்யும் 11 வழிகள் யாவை? – பகுதி 1

விண்டோஸ் XP-யின் வாழ்நாள் ஒருவேளை முடிவு கண்டிருக்கலாம். ஆனால் XP கால வன்பொருட்களும் அதனுடன் சேர்ந்து பயனற்று போக வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. லினக்ஸ் உலகில் அதற்கு நிறைய வழிகள் உள்ளன. LXLE அவற்றுள் ஒன்று.

அனுபவப்பூர்வமாக LXLE-ஐ உணர்ந்து கொள்ள தயாரா? எனில், தொடர்ந்து படியுங்கள். உங்கள் XP கணினி வன்பொருள் வேறு என்ன செய்ய வல்லது என அறிந்து கொள்ளுங்கள்.

1. எடை குறை ஆற்றல்

தற்போது புதிதாய் சந்தைக்கு வந்துள்ள LXLE 14.04, மிக எடை குறைவானதாய் இருப்பதுடன், தன்னகத்தே பல சிறப்பியல்புகளை கொண்டு விளங்குகிறது. இது வேகமாக செயல்பட வல்லது. XP mode மற்றும் வேறு பல desktop தேர்வுகளைக் கொண்ட இது, துவங்கி செயல்படுவதற்கு ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தையே எடுத்துக்கொள்கிறது.

இதனை விண்டோஸ் கணினியில் முயற்சிக்காதீர்கள் :).

1

2. நெடுநாள் சேவை
LXLE14.04 உபுண்டுவின் நீண்ட ஆயுள் பதிப்பை (Long Term Support (LTS)) மையமாகக் (maximum longevity) கொண்டு அமைக்க ப்பட்டது. இது கடந்த (2014) ஏப்ரல் மாதம் வெளியான Ubuntu 14.04 ‘Trusty Tahr’ பதிப்பினைத் தன் அடித்தளமாக கொண்டுள்ளது. இந்த உபுண்டு பதிப்பிற்கு 2019-ம் ஆண்டு வரை சேவை அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

2

மிகக் குறிப்பாக சொல்லப் போனால் LXLE, உபுண்டுவின் லுபுண்டு வகையை சார்ந்தது. இது LXLE desktop – ஐ கொண்டுள்ளது. தன் தாய் பதிப்பான லுபுண்டுவை விட எடை குறைவானது ஆகும். 32 bit மற்றும் 64 bit வகைகளும் இவற்றில் உள்ளன. இதன் 64 bit iso கோப்பு 1.49GB அளவையே கொண்டது ஆகும்.

3. விண்டோஸ் XP தோற்றம்
LXLE ஆனது, உகப்பாக்கப்பட்ட (optimized) LXDE பயனர் இடைமுகத்தைப் (user interface) பயன்படுத்துகிறது. இது லுபுண்டு லினக்ஸ் வகை ஆகும். இது இன்னும் பல desktop வகைகளை கொண்டதாயினும் அவை அனைத்துமே 14.04 பதிப்பிற்கு மேம்படுத்தப்பட்டது. கணினியை இயக்கி புகுபதிகை (login) செய்யும் போது தேவையான desktop வகையை தேர்வு செய்து கொள்ளலாம்.

3

இங்கே படத்தில் காட்டப்படுவது, விண்டோஸ் XP கருத்தியல் (paradigm) ஆகும். இது மைக்ரோசாப்டின் பழம்பெரும் இயங்குதளத்தை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டது. இதனை உருவாக்கிய குழு “LXLE, பயனர்களுக்கு Windows XP/Vista/7 starter/Basic போன்ற இயங்குதளத்திற்கு மாற்றாக விளங்குகிறது” என தெரிவிக்கிறது. இதில் Windows XP-க்கு மாற்றான NoteBook கருத்தியலும் (paradigm) இடம் பெற்றுள்ளது.

4. இயல்பான லினக்ஸ் தேர்வு
விண்டோஸ் XP -யில் பெரிதாக ஆர்வம் இல்லாதவர்களுக்காக, இயல்பான லினக்ஸ் desktop தேர்வையும் LXLE வழங்குகிறது. இந்த தேர்வு GNOME2 ஆகும். காரணம், GNOME2 பல பயனர்களால் விரும்பப்படுகிறது தான். இதன் காரணமாகவே UNITY மற்றும் GNOME3 வெளியான பிறகும் தற்போது வெளியான Linux Mint 17 -ல் GNOME2 -ஐ பயன்படுத்தியுள்ளனர்.

4

5. ஆப்பிள் தோற்றம்
LXLE தனது நெகிழ்தன்மையை(flexibility) மேலும் விரிவுபடுத்தி Mac OS X கருத்தியலையும் (paradigm) வழங்குகிறது. இது ஆப்பிள் desktop போன்ற தோற்றத்தை அளிக்கிறது. LXLE-ன் அகத்தே உள்ள கோட்பாடு எதுவெனில், “மேம்பட்ட செயல்திறம் மற்றும் இயக்கம், நல்தோற்றம் போன்றவற்றைச் சேர்த்து தன்னுள் புகுத்துவது ஆகும்”, என இதன் குழு தெரிவிக்கிறது. மேலும் அழகான புதுத் தன்மையை உடைய desktop-களை உருவாக்கி அனைவரும் எளிதில் பயன்படுத்தும் படியாய் ஆக்குவதும், கணினி வளங்களைச் சேமித்து நல்ல செயலிகளுக்கு பயன் படுத்துவதும் இதன் இலக்கு ஆகும்.

5

6. போட்டியிடும் உபுண்டுவின் யூனிடி

LXLE தனது பயனர்களுக்கு மேலும் ஒரு தேர்வாக உபுண்டுவின் யூனிடி இடைமுகப்பை (unity interface) வழங்குகிறது. யூனிடி தன் தொடக்க நாட்க்ளில் சொதப்பியிருந்தாலும், பின் நாட்களில் அது மேலும் மெருகேற்றப்பட்டு தற்போது பல விரும்பிகளை கொண்டுள்ளது. செங்குத்தான செயலி தேர்வை (vertical application switcher) கொண்டுள்ள இது, தற்போது இயல்பு இடைமுகம் ஆகும்.

6

தொடரும்….

ஆசிரியர்: கேதரின் நோயெஸ்
மூல கட்டுரை: 11 ways LXLE Linux will make you forget all about XP

%d bloggers like this: