Microsoft Access இற்கு மாற்றான கட்டற்ற பயன்பாட்டு மென்பொருட்கள்

  சிறியவியாபாரநிறுவனங்கள் சிறிய குழுவான இயக்கங்கள் ஆகியவை பெரிய நிறுவனங்கள்போன்று அதிக செலவிட்டு தரவுதளங்களை பராமரிக்க இயலாத சூழலில் தங்களுடை தரவுதள பணிகளுக்காக Microsoft Access எனும் தரவுதள பயன்பாட்டினை பயன்படுத்தி கொள்வார்கள் ஆயினும் இதுஒரு தனியுடைமை பயன்பாடாக இருப்பதால்இதனை குறிப்பிட்ட கட்டணம் செலுத்திய பிறகே பயன்படுத்தி கொள்ளமுடியும்அவ்வாறான நிறுவனங்கள் கட்டணமில்லாமல் பயன்படுத்தி கொள்வதற்காக பல கட்டற்ற பயன்பாடுகளும் தற்போது கிடைக்கின்றன அவைகளை பற்றிய ஒரு பறவை பார்வை பின்வருமாறு

1.LibreOffice Base என்பதில் வேறு எந்தவொரு தரவுதள பயன்பாட்டு கோப்பினையும் திறந்து பயன்படுத்தி பயன்படுத்தி கொள்ளமுடியும் அவ்வாறே எந்தவகை கோப்பாகவும் சேமித்துகொள்ளலாம் அதாவது இதில் தரவுகளை எளிதாக பதிவிறக்கம் செய்திடவும் பதிவேற்றம் செய்திடவும்முடியும் இது Microsoft Access கோப்புடன் ஒருங்கிணைந்து செயல்படுகின்றது அவ்வாறே financial reports, mail merges, charts ஆகிய பல்வேறு வகைகளில் நாம் விரும்பியவாறான அறிக்கைகளை தயார்செய்து கொள்ளமுடியும் MySQL, MariaDB, PostgreSQL Access other JDBC ,ODBC ஆகிய வகைகளையும் இது ஆதரிக்கின்றது இதனுடைய முன்கூட்டியே கட்டமைக்கப்பட்ட wizards , table ஆகியவற்றை கொண்டு புதியவர்கள் எளிதாக அட்டவணைகளை உருவாக்குதல், வினாக்களை உருவாக்குதல், படிவங்களை உருவாக்குதல் , அறிக்கைகளை உருவாக்குதல் (விற்பணைபட்டியல்கள், விற்பணைஅறிக்கைகள், வாடிக்கையாளர்களின் பட்டியல்கள் போன்றவைகளை) ஆகிய பணிகளுக்காக பயன்படுத்தி கொள்ளமுடியும் கணினியில் இதனை நிறுவுகை செய்திடாமல் நம்முடைய பென்ட்ரைவ் வாயிலாக கூட இதனை செயல்படுத்தி பயன்படுத்தி கொள்ளமுடியும் இது லினக்ஸ் மேக்,விண்டோ ஆகிய அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்கொண்டது இது Mozilla Public License v2 எனும் அனுமதியின் அடிப்படையில் பயன்படுத்திட கிடைக்கின்றது மேலும் விவரங்களுக்கும் பயன்படுத்தி கொள்ளவும் documentation.libreoffice.org/en/english-documentation/base/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க

2.DB Browser for SQLite என்பது சிக்கலான SQL கட்டளைகளை பற்றிதெரியாத புதியவர்கள் கூட எளிதாக SQLite தரவுதள கோப்பினை உருவாக்கி பயன்படுத்தி கொள்வதற்காக உதவுகின்றது இது முன்கூட்டியே கட்டமைக்கப்பட்ட wizards களை கொண்டு புதியவர்கள்கூட எளிதாக திறன்மிகுந்த தரவுதள ஜாம்பவான் போன்று பணிபுரியும் திறனை இது வழங்குகின்றது இது லினக்ஸ் மேக்,விண்டோ ஆகிய அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்கொண்ட இது Mozilla Public License V2, GNU General Public License V3 ஆகிய இருஅனுமதிகளின் அடிப்படையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கிடைக்கின்றது. மேலும் விவரங்களுக்கும் பயன்படுத்தி கொள்ளவும்sqlitebrowser.org/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க

3.Kexi என்பது KDE Plasma இற்காக உருவாக்கப்பட்டாலும் KDE இன் பயன்பாட்டாளர்களுக்கு மட்டும் என கட்டுபடுத்திடாமல் அனைவருக்கும் பயன்படுமாறு வெளியிடப்பட்டுள்ளது தரவுதளத்தினை வடிவமைத்தல், தரவுகளை சேமித்து வைத்தல், வினாவினை செயல்படுத்துதல், தரவுகளை கணக்கிட்டு செயல்படுத்துதல் போன்ற பல்வேறு தரவுதள பணிகளை தரவுதள செந்தரத்துடன் செயல்படுத்திடுமாறு இதுதிகழ்கின்றது போதுமானதிறனுடன் செலவேயில்லாமல் திறந்த செந்தர கையடக்க இயக்கியாக எந்தவொரு வன்பொருள் தளத்திலும் எந்தவொரு இயக்கமுறைகளிலும் செயல்படும் திறன்கொண்டதாக இதுஉள்ளது மேலும் தரவுதளத்திற்கான மிகவிரைவான பயன்பாட்டினைமேம்படுத்திடும் கருவியாக இது விளங்குகின்றது அதுமட்டுமல்லாது இது வேர்டு எக்செல் பிரசன்டேஸன் ஆகிய எந்தவொரு பயன்பாடுகளுடனும் ஒருங்கிணைந்து செயல்படும் திறன் கொண்டது. இது LGPL எனும் அனுமதியின் அடிப்படையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கிடைக்கின்றதுமேலும் விவரங்களுக்கும் பயன்படுத்தி கொள்ளவும்www.calligra.org/kexi/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க

4.nuBuilder Forte என்பது இணையத்தின் அடிப்படையிலான தரவுதளபயன்பாட்டிற்கான இணையஉலாவியின் அடிப்படையிலான கருவியாகும் அதனால் இணையத்தின் அடிப்படையில் பொதுமக்கள் எளிதாக விரைவாக தரவுதளத்தினை உலகில் எங்கிருந்தும் தம்முடைய இணைய உலாவியில் தரவுதளத்தினை உருவாக்கி பயன்படுத்தி கொள்ளமுடியும்.தெளிவான இடைமுகத்துடனும் குறைந்த குறிமுறைவரிகளுடைய கருவியாக இது விளங்குவதால் பயனாளர்கள் மிகவிரைவாக தாம் விரும்பும் வகையில் தரவுதளத்தினை உருவாக்கி கொள்ளமுடியும் HTML, PHP, JavaScript, SQL ஆகிய தொழில்துறை செந்தர குறிமுறைவரிகளை இது கொணடுள்ளதால் நிரலாளர்கள் எளிதாக தாம்விரும்பியவாறு தரவுதளத்தினை உருவாக்கி கொள்ளமுடியும் இது லினக்ஸ் மேக்,விண்டோ ஆகிய அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்கொண்டஇது GPLv3.0 எனும் அனுமதியின் அடிப்படையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கிடைக்கின்றதுமேலும் விவரங்களுக்கும் பயன்படுத்தி கொள்ளவும்www.nubuilder.com/videos, www.nubuilder.com/wiki ஆகிய இணையதளமுகவரிகளுக்கு செல்க

%d bloggers like this: