முந்தைய MEPIS எனும்குழுவினரும் antiX உம் கூட்டாக சேர்ந்து இவ்விரண்டில்உள்ள சிறந்த கருவிகளையும் தந்திரவழிகளையும் பயன்படுத்தி அதனடிப்படையில் உருவாக்கி வெளியிடப்பட்டதொரு புதியவகை லினக்ஸ்இயக்கமுறைமையே MX லினக்ஸாகும் இது ஒரு நேர்த்தியானதும் திறமையானதுமான மேஜைக்கணினியை எளிய கட்டமைப்பு, உயர் நிலைத்தன்மை, திடமான செயல்திறன் நடுத்தர அளவிலான தடம் ஆகியவற்றுடன் இணைப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு இடைநிலை இயக்கமுறைமையாகும். நம்முடைய பென்ட்ரைவிலிருந்து கூட இயக்ககூடிய கையடக்க இயக்கமுறைமையாகஇது கட்டமைக்கப் பட்டுள்ளது
இதில் இயல்புநிலை இணையஉலாவியாக Firefox 64.0 கானொளி படங்கள் செயல்படுவதற்காக VLC 3.0.3 இசைகளை இயக்கி கேட்பதற்கு Clementine1.3.1மின்னஞ்சல்களை கையாளுவதற்காக Thund erbird 52.9.1 அலுவலகபயன்பாடாகLibreOffice6.0.1 (x64) கோப்புகளை அவ்வப்போது பிற்காப்பு செய்துகொள்வதற்காக
LuckyBackup0.4.9-1 ஆகிய பல்வேறு கட்டற்ற பயன்பாடுகளுடன் உடனிணைத்து வெளியிடப்பட்டுள்ளது
இதுநிலையான, எளிதான நெகிழ்வான நிறுவுகை வழிமுறைகளை கொண்டுள்ளது, சிறந்த வன்பொருள் அங்கீகாரம், பெரும்பாலான பயனர்களுக்கான தானியங்கியான உள்ளமைவு, பலக காட்சியின் இயல்புநிலை கருப்பொருளில் ஒரேயொரு சொடுக்குதலில் மாற்றம், செய்து கொள்ளுதல் நிகழ்வு ஒலிகோப்புகளை அல்லது இசைகளை இயக்குவதில்ஒரேயொரு சொடுக்குதலில் மாற்றம், செய்து கொள்ளுதல்ம், இயல்புநிலையாக குழுஉறுப்பினர்களால் தவறாமல் புதுப்பிக்கப்படும் முக்கியமான பயன்பாடுகள், ஆகிய குறிப்பிடத்தக்கவை களாக விளங்குகின்றன. MX கருவிகளுக்கான மேம்படுத்தல்கள், பல மொழிகளில் MX பயன்பாடுகளுக்கான உள்ளூர்மயமாக்கல், வீடியோ தொகுப்பு மூலம் சிறந்த உதவிகளை வழங்குதல், முழு பயனர்களின் கையேடு, சிறந்த ஆதரவாளர்காலாக எப்போதும் உதவிக்குகாத்திருக்கும் நண்பர்களின் குழு ஆகியவைஇதன் சிறப்பம்சமாகும்
பொதுவான பணிகளை எளிதாக்குவதற்கானபல்வேறு கருவிகள் குறிப்பாக MX க்காக உருவாக்கப்பட்டன, சில ஏற்கனவே இருக்கும் ஆன்டிஎக்ஸ் பயன்பாடுகளிலிருந்து விலக்கப்பட்ட அல்லது ஏற்கனவே உள்ள ஆன்டிஎக்ஸ் பயன்பாடுகளாகும்; ஒரு ஜோடி வெளி மூலங்களின் அனுமதியுடன் இறக்குமதி செய்யப்பட்டது. மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம்செய்து கொள்ளவும் mxlinux.org/ எனும் இணையதளபக்கத்திற்கு செல்க