[தினம் ஒரு கட்டளை] GREP தேடுதல் வேட்டையின் கருவி

இன்று 7ம் நாள்.

நாம் பார்க்கவிருக்கும் கட்டளை GREP – Global Regular Expression Print

ஒரு கோப்பிலோ அல்லது ஒரு திரையிலோ (ஒரு கட்டளையின் வெளியீடு) உள்ள உரையில் ஒரு உள்ளீடாக கொடுக்கப்பட்ட சொல் அல்லது காட்டுரு (pattern)க்கு பொருத்தமானவைகளை பட்டியலிடக்கூடிய ஒரு கட்டளை ஆகும்.

தொடரியல் :

hariharan@kaniyam: ~/odoc $ grep “pattern” filename

தெரிவுகள் :

-i எனும் தெரிவு ஆங்கில பெரிய மற்றும் சிறிய எழுத்து வேறுபடுகளை புறக்கணித்து பொருத்தங்களை அச்சிடுகிறது.

hariharan@kaniyam: ~/odoc $ grep -i “paTteRn” filename

-r எனும் தெரிவு ஒரு கோப்புறையில் உள்ள அனைத்து கோப்புகளிலும் தேடி பொருத்தங்களை அச்சிடுகிறது.

hariharan@kaniyam: ~/odoc $ grep -r “paTteRn” filename

-n எனும் தெரிவு பொருத்தங்களை அச்சிடும்போது வரிஎண்களையும் சேர்த்து அச்சிடுகிறது.

hariharan@kaniyam: ~/odoc $ grep -n “paTteRn” filename

நன்றி!

ஹரிஹரன் உமாபதி , மென்பொறியாளர்,
Programmer Life – programmerlife1.wordpress.com

About Author

hariharan
Freelance Consultant | PHP Developer | Codeigniter | Laravel | Customized Web Application development | Pythonista | Novice Linux Boy

%d bloggers like this: