[தினம் ஒரு கட்டளை] nice அருமை!

By | December 3, 2024

நாள் 22: nice

nice மதிப்புகள்:

0 : இயல்புநிலை
-20 : அதிக முன்னுரிமை
19 : குறைந்த முன்னுரிமை

=====================================

nice : இந்த கட்டளை ஒரு செயல்பாட்டினை தொடங்கும்போது அதற்கான செயல்பாட்டு முன்னுரிமையை அளிக்க வகைசெய்கிறது. பின்வரும் எடுத்துகாட்டில் இயல்புநிலை nice மதிப்பு கொண்டு கட்டளையை எப்படி இயக்குவது என பார்ப்போம்.

(எ.கா)

hariharan@kaniyam :~/odoc/ $ nice ls

தொடரியல்:
hariharan@kaniyam :~/odoc/ $ nice commandname

தெரிவுகள்:

nice -n: இந்த தெரிவினை பயன்படுத்தி நாம் எந்த ஒரு கட்டளைக்கு வேண்டுமானாலாலும் ஒரு குறிப்பிட்ட nice மதிப்பை அளிக்க இயலும்.

செயல்பாடுகளுக்கு அதிக முன்னுரிமை அளிக்க முற்படும்போது sudo (அ) root தேவைப்படும்..

ஒரு சாதாரண பயனர் குறைந்த முன்னுரிமை கொண்ட nice மதிப்புகளையே பயன்படுத்துகின்றனர்.

(எ.கா)

nice -n 15 commandname
sudo nice -n -5 commandname

நன்றி!

ஹரிஹரன் உமாபதி , மென்பொறியாளர்,
Programmer Life – programmerlife1.wordpress.com