[தினம் ஒரு கட்டளை] uptime இயங்குநேரம்.

By | November 24, 2024

13ம் நாள்

uptime:

இந்த கட்டளை இயங்குதளம் துவங்கியதிலிருந்து எவ்வளவு நேரமாக இயங்குகிறது என காட்டுகிறது. மேலும் சராசரியாக எவ்வளவு பளுவை மையச்செயலகம்  தாங்குகிறது என்பதையும் கூறுகிறது.

இந்தக்கட்டளை காட்டும் விவரங்கள்:
1. தற்போதைய நேரம்.
2. இயங்கும் நேரம் நாட்களில் (1 நாள்களுக்குள் இயங்கும் நேரம் இருப்பின் மணிநேரங்கள் மற்றும் மணித்துளிகள் காட்டப்படும்)
3. மணிநேரங்கள் மற்றும் மணித்துளிகள் (நாட்கள் அல்லமல் இருக்கும் நேர விவரங்கள்)
4. தற்போது இயக்கத்தில் உள்ள பயனர்களின் எண்ணிக்கை
5. சராசரி மையசெயலக பளு (load average on cpu)

தொடரியல் :

hariharan@kaniyam: ~/odoc $ uptime

22:48:25 up 6:27, 1 user, load average: 2.11, 1.96, 2.08

தெரிவுகள் :

-p: இந்த தெரிவு இயங்குதளம் துவங்கியதிலிருந்து ஆகும் நேரத்தை மட்டும் வழங்குகிறது. பிறவிவரங்கள் ஏதும் தராது.

hariharan@kaniyam: ~/odoc $  uptime -p

up 6 hours, 29 minutes

-s: இந்த தெரிவு இயங்குதளம் துவங்கிய நேரத்தை yyyy-mm-dd HH:MM:SS நேரவடிவத்தில்  வழங்குகிறது.

hariharan@kaniyam : ~/odoc $  uptime -s

2024-11-24 16:20:48

நன்றி!

ஹரிஹரன் உமாபதி , மென்பொறியாளர்,
Programmer Life – programmerlife1.wordpress.com