கட்டற்ற ஆண்ட்ராய்டு கணிப்பான்

ஆண்ட்ராய்டு கருவிகளுக்கான, கணிப்பான்(calculator) செயலிகளை நாம் அடிக்கடி பயன்படுத்துகிறோம்.

தற்காலத்தில், பிரத்தியேகமாக கணிப்பான்களை வாங்கும் பழக்கம் மிகவும் குறைந்துவிட்டது. ஓரளவுக்கு கல்லூரி மாணவர்கள், வயதானவர்கள் மற்றும் சில கடைகளில் மட்டுமே கணிப்பான்களை பார்க்க முடிகிறது.

பெரும்பாலானவர்கள், மொபைல் ஃபோன்களில் இருக்கக்கூடிய கணிப்பான்களையே பயன்படுத்துகின்றனர்.

ஆனால், உங்களுக்கு மொபைல் போன்களில் இயல்பாக இருக்கக்கூடிய கணிப்பான்கள் அவ்வளவு சிறப்பாக பணியாற்றுவதில்லை.

நீங்கள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து வேறு கணிப்பான்களை நிறுவினாலும்! அதில் நிமிடத்திற்கு நிமிடம் விளம்பரங்களை பார்க்க வேண்டிய தலைவலி இருக்கிறது.

மேலும், கணிப்பான் போன்ற செயலிகளில் வைரஸ்களை புகுத்தி உங்களுடைய தரவுகளை திருடும் போக்கு சமீப காலத்தில் மிகவும் அதிகமாக இருக்கிறது.

அதையும் கடந்து பல திறந்த நிலை கட்டற்ற செயலிகளை பயன்படுத்த விரும்பும் பிரியர்களுக்கு, மொபைல் போனில் ஒரு கட்டற்ற கணிப்பான்(ஓபன் சோர்ஸ் calculator) இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று தோன்றும்.

உங்களுடைய அனைத்து தேவைகளுக்கும் ஒரு தீர்வாக வருகிறது F droid ஆப் ஸ்டோரில் கிடைக்கக்கூடிய கணிப்பான்.

நான் தனிப்பட்ட முறையில் இரண்டு கணிப்பான் செய்திகளை பயன்படுத்தி பார்த்தேன்.இதுவரை, கூகுள் பிளே ஸ்டோரில் பயன்படுத்திய பல செயலிகளை காட்டிலும், மிகவும் சிறப்பாக பணியாற்றுகிறது இந்த இரண்டு செயலிகளும்.

இவை இரண்டிலும், மிகவும் எளிமையாக கணக்கீடுகளை செய்ய முடிகிறது. விடைகள் அதிகத் துல்லிய தன்மையோடு இருப்பதை கவனிக்க முடிகிறது.

மேலும் கூடுதலாக இவற்றில் எந்த வித விளம்பரங்களும் இல்லை.

முழுக்க முழுக்க திறந்த நிலை பயன்பாடுகளாக கட்டற்ற முறையில் தயாரிக்கப்பட்டு இருக்கின்றன.

இதன்மூலம் நம்முடைய தரவுகளும் பாதுகாப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

அதிலும் நான் குறிப்பாக கவனித்த calc you எனும் கணிப்பான் செயலியில், உங்களால் கணிதவியல் சூத்திரங்களை எழுதி வைத்துக் கொள்ள முடியும் மேலும் அதைக் கொண்டு கணக்கீடுகளை செய்ய முடியும்.

ஒரு கணிப்பான் செய்தி குறித்து இந்த அளவிற்கு விவரிக்க வேண்டிய தேவை இருக்காது என்று நம்புகிறேன்.

எனவே இந்த இரண்டு செயலிகளையும் உங்களுடைய ஆண்ட்ராய்டு மொபைல் கருவிகளில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தி பாருங்கள்.

கட்டற்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கு கணினி மட்டுமல்ல மொபைல் போனும் உகந்த இடம் தான் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.

மொபைல் போன்களில் கட்டற்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தக்கூடிய முறைகள் குறித்து கட்டுரைகளை எழுதி வருகிறேன் அதில் இரண்டாவது கட்டுரை இது.

F droid பற்றிய, என்னுடைய முந்தைய கட்டுரையை நீங்கள் படிக்கவில்லை என்றால் அதையும் பார்வையிடவும்.

F droid article:

F-droid என்றால் என்ன?

இரண்டு செய்திகளின் இணைப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

வெறும் இரண்டு எம்பிகளுக்கு உள்ளாக இந்த செயல்களை உங்களால் நிறுவ முடியும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

Calcyou : Calc you at f-droid

You calculator : f-droid.org/en/packages/com.marktka.calculatorYou/

கட்டுரையாளர்:-

ஸ்ரீ காளீஸ்வரர் செ,

இளங்கலை இயற்பியல் மாணவர்,

( தென் திருவிதாங்கூர் இந்து கல்லூரி,

நாகர்கோவில் – 02)

இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,

கணியம் அறக்கட்டளை.

மின்மடல் முகவரி: srikaleeswarar@myyahoo.com

வலைதளம்: ssktamil.wordpress.com

%d bloggers like this: