எளிய தமிழில் VR/AR/MR 21. கலந்த மெய்ம்மை (Mixed Reality – MR)

ஊடாடும் மிகை மெய்ம்மை (AR) கலந்த மெய்ம்மை (MR) தொழில்நுட்பத்தின் முக்கிய சிறப்பியல்பு என்னவென்றால் நாம் கணினி உதவியுடன் உருவாக்கிய வடிவங்கள் மெய்யுலக சூழலில் உள்ள பொருட்களுடன் நிகழ்நேரத்தில் ஊடாட (interact) இயலும் என்று முன்னரே பார்த்தோம். இதற்கு மாறாக மிகை மெய்ம்மை (AR) தொழில்நுட்பத்தில் இம்மாதிரி ஊடாடல் இயலாது. ஆகவே கலந்த மெய்ம்மையை ஊடாடும் மிகை மெய்ம்மை என்றும் கூறலாம். மெய்யுலகமும் மெய்நிகர் வடிவங்களும் பின்னிப்பிணைந்தவை (intertwined) மெய்யுலகில் மெய்நிகர் பொருட்களை மேலடுக்காக (overlays) மிகை… Read More »

அஞ்சலி – இரா. கதிர்வேல்

    Link இரா. கதிர்வேல் தஞ்சையில் உள்ள பேராவூரணி, சித்தாதிக்காடு ஊரைச் சேர்ந்தவர். இன்று காலை ஊரில் வீட்டின் அருகில் உள்ள, அறுந்த மின்கம்பியின் அருகே சென்ற, தன் குழந்தையை காப்பாற்றி , மின்சாரம் தாக்கி, உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு, பேரதிர்ச்சியில் உள்ளேன். 30 வயதுகளில் உள்ள இளைஞர். தானாகவே லினக்சு, பைதான் நுட்பங்களைப் படித்தவர். கணியம் தளத்தின் தொடக்கத்தில் இருந்தே பேராதரவு தந்தவர். தாம் கற்றவற்றை தமிழில் பிறர்க்கு பகிர்ந்தவர். கணியம் தளத்தில்… Read More »

காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்பு – 14-03-2021 – மாலை 4 மணி – இன்று

வணக்கம். காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்புக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம். ஒவ்வோரு ஞாயிற்றுக் கிழமை மாலையும் 4 மணி முதல் 5 மணி வரை இணைய வழியில் சந்தித்து, கட்டற்ற மென்பொருட்கள் பற்றி உரையாடுகிறோம். நிகழ்ச்சி நிரல் 1. பங்கு பெறுவோர் அறிமுகம் 2. இயந்திரவழிக் கற்றல் – ஒரு அறிமுகம் தரவுகளில் இருந்து தானாகவே கற்றுக்கொள்ளும் கருவிகளின் காலம் இது. இவை பங்களிக்காத துறைகளே இல்லை எனும் அளவிற்கு எல்லாத் துறைகளிலும், கற்கும் கருவிகள்… Read More »

Cryptomator எனும் கட்டற்ற கட்டணமற்ற பயன்பாடுஒரு அறிமுகம்

இது ஒரு கட்டற்ற கட்டணமற்ற பயன்பாடாகும், இது மேகக்கணி யில் நம்முடைய கோப்புகளுக்கு பல்வேறு-தளத்தையும், வெளிப்படையான வாடிக்கையாளர் பக்க குறியாக்கத்தையும் வழங்குகிறது. இது எந்தவொரு மேகக்கணி சேமிப்பக சேவையுடனும் ஒருங்கிணைந்து செயல்படுகிறது. இதுமுற்றிலும் வெளிப்படையானது, எனவே நாம் வழக்கமான அனைத்து கோப்புகளுடன் பணிபுரியலாம். மேலும் . வெவ்வேறு கணக்குகள், முக்கியமாக மேலாண்மை, மேகக்கணி அணுகல் வசதிகள் அல்லது cipher உள்ளமைவுகள் ஆகியவையில்லாமல் செயல்படுத்தவும் பயன்படுத்தவும் இது எளிதானது. இதனுடைய முக்கிய வசதி வாய்ப்புகள் இது Dropbox, Google… Read More »

Web Development Fundamentals – இணைய வழிப் பயிற்சி

அன்புடையீர் அனைவருக்கும் வணக்கம், எதிர்வரும் தொழில்நுட்ப உலகம் இணையம் மற்றும் தொடர்பியல் சார்ந்து பல வளர்ச்சிகளை கட்டமைக்கவுள்ளது. அதற்கான மனிதவளங்களை மேம்படுத்திட பல அரங்கங்களும் தயாராகிவருகின்றன. நம் முன்னெ இருக்கும் இந்த தொழில்நுட்ப கற்றலுக்கான போட்டியில் உங்களையும் பங்கேற்கச் செய்ய வேண்டி நாங்கள் மேற்கொண்டுள்ள முயற்சியை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம். எங்களுடைய Chiguru Colab நிறுவனத்தின் கீழ் “Web Development Fundamentals” பயிற்சியை தமிழில் நடத்திட திட்டமிட்டுள்ளோம். இந்த பயிற்சியானது இணைய வழியாக (classmeet.chiguru.tech) நடைபெறவுள்ளது. இந்த… Read More »

எளிய தமிழில் VR/AR/MR 20. இடஞ்சார்ந்த ஒலி அமைவு (Spatial Audio)

VR/AR/MR க்கு இடஞ்சார்ந்த ஒலி அமைவு ஏன் முக்கியம்? மூழ்கவைக்கும் அனுபவத்துக்கு இடஞ்சார்ந்த ஒலி அமைவும் ஒரு முக்கிய அம்சம். முப்பரிமாணப் படம் அல்லது காணொளியை முன்னும் பின்னும், இடமும் வலமும், மேலும் கீழும் திரும்பி மற்றும் நகர்ந்து பார்க்கும்போது அதற்குத் தோதாகப் படமும் காணொளியும் திரும்புவது மற்றும் நகர்வது மூழ்கவைக்கும் அனுபவத்துக்கு மிக அவசியம் என்று முன்னர் பார்த்தோம். அதேபோல இடஞ்சார்ந்த ஒலி அமைவும் மிக அவசியம். இது நம்முடைய VR/AR காட்சிகளில் மூழ்கவைக்கும் அனுபவத்தை… Read More »

open-tamil சொற்பிழைத்திருத்தி பற்றிய உரைக்கு இரண்டாம் பரிசு

மார்ச் 12, 13, 14 2021 ல் நடைபெற்ற Tamil Computing – Tools and Applications Young Researchers’ Conference 2021 (TaCTA-YRC2021) மாநாட்டில் ‘Building Open Source SpellChecker for Tamil‘ என்ற தலைப்பில் கணியம் அறக்கட்டளை சார்பாக த. சீனிவாசன் “Open-Tamil” பைதான் நிரல் தொகுப்பு மூலம் நடைபெற்று வரும் சொற்பிழைத்திருத்தி முயற்சிகள் பற்றி உரையாற்றினார். பல்வேறு தலைப்புகளில் பல இளம் ஆய்வாளர்கள் உரையாற்றினர். நிகழ்ச்சி நிரல் www.infitt.org/tacta2021/program.html நிகழ்வின் காணொளிகள் நாள்… Read More »

AI / ML இல் காட்சிப்படுத்தலுக்கான பிரபலமான திறமூல கருவிகள்

காட்சிப்படுத்தலின் கருவிகளும் தொழில் நுட்பங்களும் நுண்ணறிவுகளை படமாகவரையவும் AI / ML செயல் ; செயல்திட்டங்களின் போக்குகள் வடிவங்கள் ஆகியவற்றைக் கண்டறியவும் உதவுகின்றன. மூல AI / ML தரவுகளை சக்திவாய்ந்த காட்சிப்படுத்தல்களாக மாற்றுவதற்காக பல்வேறு திற மூல கருவிகள் வசதியான குறைந்த விலை தீர்வுகளாக அமைகின்றன. இந்த கட்டுரை இந்த கருவிகளில் ஒருசிலவற்றை பட்டியலிடுகிறது. AI / ML செயல்திட்டங்களில் தரவுகளை காட்சிப்படுத்தல் முக்கிய பங்கு வகிக்கிறது, மேலும் எந்தவொரு இயந்திர கற்றல் மாதிரியின் பயன்பாட்டிற்கும்… Read More »

எளிய தமிழில் VR/AR/MR 19. கல்வி மற்றும் பயிற்சியில் AR

வகுப்பறையில் ஈர்க்கும் அனுபவத்துக்கு மிகை மெய்ம்மை (AR) தோற்ற மெய்ம்மையின் (VR) மூழ்க வைக்கும் அனுபவங்கள் (immersive experiences) மூலம் கற்றல் ஆழமாகப் பதிகிறது என்றும் பயில்வோர் ஈடுபாட்டுடன் கவனம் செலுத்துகின்றனர் என்றும் முன்னர் பார்த்தோம். VR காட்சிகளில் நாம் மெய்நிகர் உலகத்திலேயேதான் இருக்கமுடியும். ஆனால் AR தொழில்நுட்பம் காட்சிகளை நம்முடைய வகுப்பறைக்கே கொண்டுவருகிறது. இதன் விளைவாக, வகுப்புகள் மிகவும் ஊடாடும் அனுபவமாக ஆகின்றன. மாணவர்கள் தாங்கள் கற்றுக்கொண்ட தகவல்களை சிறப்பாக நினைவில் வைக்க AR உதவுகிறது.… Read More »

சி ++ எனும் கணினிமொழியில் கோப்புகளை எவ்வாறு படிப்பது எழுதுவது?

சி ++ இல், தாரையோட்ட(stream) இயக்கிகளான >> , << ஆகியவற்றுடன் I/O எனும் தாரை யோட்ட இனத்துடன் இணைத்து கோப்புகளைப் படித்திடுமாறும் எழுதிடுமாறும் செய்யலாம். கோப்புகளைப் படிக்கும்போது அல்லது எழுதும்போது, வன்தட்டில் ஒரு கோப்பைக் குறிக்கும் ஒரு இனத்தின் உதாரணத்திற்கு அந்த இயக்கிகள் பயன்படுத்தி கொள்ளப்படும். இந்த தாரை யோட்டத்தின்(stream) அடிப்படையிலான அணுகுமுறை ஒரு பெரிய நன்மையைக் கொண்டுள்ளது: ஒரு சி ++ கண்ணோட்டத்தில், நாம் எதைப் படிக்கின்றோம் அல்லது எழுதுகின்றோம் என்பது முக்கியமன்று, இது… Read More »