எளிய தமிழில் VR/AR/MR 22. MR தலையணி (headset) வகைகள்

கலந்த மெய்ம்மை (MR) தலையணிகள் அடிப்படையில் AR போலவே மெய்யுலகத்தில் மெய்நிகர் உருவங்களைச் சேர்க்கவேண்டும். ஆகவே நாம் முந்தைய AR கட்டுரையில் பார்த்த இரண்டு வழிமுறைகளைத் திரும்பப் பார்ப்போம். படத்தில் இடதுபுறம் இருப்பது தோற்ற மெய்ம்மை (VR). மெய்யுலகம் தெரியாது. நாம் முற்றிலும் மெய்நிகர் உலகிலேயே இருப்போம். ஒப்பீடு செய்ய மட்டுமே இதைக் காட்டுகிறோம். ஒளியியல் வழி ஊடுருவும் காட்சி (Optical see through) படத்தில் நடுவில் கண்ணாடி வழியாக வெளியுலகம் தெரியும். கண்ணாடியின்மேல் நாம் மெய்நிகர்… Read More »

விண்டோஇயக்கமுறைமைஅமைவின்நிருவாகி க்கான திறமூல கருவிகள்

கணினி நிருவாகிகளின் அல்லது கணினி அமைவுநிருவாகிகளின் மென்பொருட்களானவை உள்ளமைவுகள், நிருவாகப் பணிகள், பாதுகாப்பை மேம்படுத்துதல், தொழில்நுட்ப ஆதரவு போன்றவற்றில் முக்கிய பங்கு வகிக்கின்றன, குறிப்பாக வலைபின்னலில் இணைக்கப்பட்ட கணினி அமைப்புகளில். திறமூல கருவிகள் அமைவுநிருவாகிகளின் பணியை எளிதாக்குகின்றன, அவைகளுள் ஒரு சில சிறந்தவை பின்வருமாறு. 1.PowerShell மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வெளியிடப்பட்டஇது முதன்முதல் கருத்தில் கொள்ளும் கருவிகளில் ஒன்றாகும். இது கட்டமைப்பு மேலாண்மை , தானியங்கிபணி (குறுக்கு-தளம்) க்கான ஒரு கட்டமைப்பாகும், இது உரைநிரலாக்க மொழியையும் கட்டளை வரி… Read More »

காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்பு – 23-03-2021 – மாலை 4 மணி – இன்று – Jupyter Notebook

வணக்கம். காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்புக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம். ஒவ்வோரு ஞாயிற்றுக் கிழமை மாலையும் 4 மணி முதல் 5 மணி வரை இணைய வழியில் சந்தித்து, கட்டற்ற மென்பொருட்கள் பற்றி உரையாடுகிறோம். நிகழ்ச்சி நிரல் 1. பங்கு பெறுவோர் அறிமுகம் 2. Jupyter Notebook மூலம் பைதான் மொழி கற்றல் – ஒரு அறிமுகம் Jupyter Notebook என்பது பைதான் நிரல் எழுதுவதற்கான ஒரு மென்பொருள் ஆகும். இதன் மூலம் Apache Spark,… Read More »

Shogun- எனும் இயந்திர கற்றலிற்கான மென்பொருள் நூலகம் ஒரு அறிமுகம்

இயந்திர கற்றல் (ML) என்பது சக்தி வாய்ந்தது. கடந்த இரண்டு தசாப்தங்களாக, ஒரு வழக்கத்திற்கு மாறான கல்வித் துறையிலிருந்து நாம் வாழும் முறையை மாற்றிடுமாறு உருவாகியுள்ளது. அதன் வழிமுறைகள் சமுதாயத்தை பாதிக்கின்றன மேலும் அதன் கருவிகள் உலகப் பொருளாதாரத்தில் ஒரு பில்லியன் டாலர் செல்வாக்கைக் கொண்டுள்ளன. இவ்வாறான சூழலில் Shogun எனும் இயந்திர கற்றலிற்கான மென்பொருள் நூலக மேம்படுத்துநர்கள் இது முதன்மை வழிமுறைகளுடனும் பயனாளரின் நட்புடன்கூடிய , அணுகக்கூடியது என்பதை உறுதிப்படுத்த விரும்புகின்றார்கள். அறிவியலறிஞர்கள், தரவுகளின் ஆர்வலர்கள்,… Read More »

எளிய தமிழில் VR/AR/MR 21. கலந்த மெய்ம்மை (Mixed Reality – MR)

ஊடாடும் மிகை மெய்ம்மை (AR) கலந்த மெய்ம்மை (MR) தொழில்நுட்பத்தின் முக்கிய சிறப்பியல்பு என்னவென்றால் நாம் கணினி உதவியுடன் உருவாக்கிய வடிவங்கள் மெய்யுலக சூழலில் உள்ள பொருட்களுடன் நிகழ்நேரத்தில் ஊடாட (interact) இயலும் என்று முன்னரே பார்த்தோம். இதற்கு மாறாக மிகை மெய்ம்மை (AR) தொழில்நுட்பத்தில் இம்மாதிரி ஊடாடல் இயலாது. ஆகவே கலந்த மெய்ம்மையை ஊடாடும் மிகை மெய்ம்மை என்றும் கூறலாம். மெய்யுலகமும் மெய்நிகர் வடிவங்களும் பின்னிப்பிணைந்தவை (intertwined) மெய்யுலகில் மெய்நிகர் பொருட்களை மேலடுக்காக (overlays) மிகை… Read More »

அஞ்சலி – இரா. கதிர்வேல்

    Link இரா. கதிர்வேல் தஞ்சையில் உள்ள பேராவூரணி, சித்தாதிக்காடு ஊரைச் சேர்ந்தவர். இன்று காலை ஊரில் வீட்டின் அருகில் உள்ள, அறுந்த மின்கம்பியின் அருகே சென்ற, தன் குழந்தையை காப்பாற்றி , மின்சாரம் தாக்கி, உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு, பேரதிர்ச்சியில் உள்ளேன். 30 வயதுகளில் உள்ள இளைஞர். தானாகவே லினக்சு, பைதான் நுட்பங்களைப் படித்தவர். கணியம் தளத்தின் தொடக்கத்தில் இருந்தே பேராதரவு தந்தவர். தாம் கற்றவற்றை தமிழில் பிறர்க்கு பகிர்ந்தவர். கணியம் தளத்தில்… Read More »

காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்பு – 14-03-2021 – மாலை 4 மணி – இன்று

வணக்கம். காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்புக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம். ஒவ்வோரு ஞாயிற்றுக் கிழமை மாலையும் 4 மணி முதல் 5 மணி வரை இணைய வழியில் சந்தித்து, கட்டற்ற மென்பொருட்கள் பற்றி உரையாடுகிறோம். நிகழ்ச்சி நிரல் 1. பங்கு பெறுவோர் அறிமுகம் 2. இயந்திரவழிக் கற்றல் – ஒரு அறிமுகம் தரவுகளில் இருந்து தானாகவே கற்றுக்கொள்ளும் கருவிகளின் காலம் இது. இவை பங்களிக்காத துறைகளே இல்லை எனும் அளவிற்கு எல்லாத் துறைகளிலும், கற்கும் கருவிகள்… Read More »

Cryptomator எனும் கட்டற்ற கட்டணமற்ற பயன்பாடுஒரு அறிமுகம்

இது ஒரு கட்டற்ற கட்டணமற்ற பயன்பாடாகும், இது மேகக்கணி யில் நம்முடைய கோப்புகளுக்கு பல்வேறு-தளத்தையும், வெளிப்படையான வாடிக்கையாளர் பக்க குறியாக்கத்தையும் வழங்குகிறது. இது எந்தவொரு மேகக்கணி சேமிப்பக சேவையுடனும் ஒருங்கிணைந்து செயல்படுகிறது. இதுமுற்றிலும் வெளிப்படையானது, எனவே நாம் வழக்கமான அனைத்து கோப்புகளுடன் பணிபுரியலாம். மேலும் . வெவ்வேறு கணக்குகள், முக்கியமாக மேலாண்மை, மேகக்கணி அணுகல் வசதிகள் அல்லது cipher உள்ளமைவுகள் ஆகியவையில்லாமல் செயல்படுத்தவும் பயன்படுத்தவும் இது எளிதானது. இதனுடைய முக்கிய வசதி வாய்ப்புகள் இது Dropbox, Google… Read More »

Web Development Fundamentals – இணைய வழிப் பயிற்சி

அன்புடையீர் அனைவருக்கும் வணக்கம், எதிர்வரும் தொழில்நுட்ப உலகம் இணையம் மற்றும் தொடர்பியல் சார்ந்து பல வளர்ச்சிகளை கட்டமைக்கவுள்ளது. அதற்கான மனிதவளங்களை மேம்படுத்திட பல அரங்கங்களும் தயாராகிவருகின்றன. நம் முன்னெ இருக்கும் இந்த தொழில்நுட்ப கற்றலுக்கான போட்டியில் உங்களையும் பங்கேற்கச் செய்ய வேண்டி நாங்கள் மேற்கொண்டுள்ள முயற்சியை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம். எங்களுடைய Chiguru Colab நிறுவனத்தின் கீழ் “Web Development Fundamentals” பயிற்சியை தமிழில் நடத்திட திட்டமிட்டுள்ளோம். இந்த பயிற்சியானது இணைய வழியாக (classmeet.chiguru.tech) நடைபெறவுள்ளது. இந்த… Read More »

எளிய தமிழில் VR/AR/MR 20. இடஞ்சார்ந்த ஒலி அமைவு (Spatial Audio)

VR/AR/MR க்கு இடஞ்சார்ந்த ஒலி அமைவு ஏன் முக்கியம்? மூழ்கவைக்கும் அனுபவத்துக்கு இடஞ்சார்ந்த ஒலி அமைவும் ஒரு முக்கிய அம்சம். முப்பரிமாணப் படம் அல்லது காணொளியை முன்னும் பின்னும், இடமும் வலமும், மேலும் கீழும் திரும்பி மற்றும் நகர்ந்து பார்க்கும்போது அதற்குத் தோதாகப் படமும் காணொளியும் திரும்புவது மற்றும் நகர்வது மூழ்கவைக்கும் அனுபவத்துக்கு மிக அவசியம் என்று முன்னர் பார்த்தோம். அதேபோல இடஞ்சார்ந்த ஒலி அமைவும் மிக அவசியம். இது நம்முடைய VR/AR காட்சிகளில் மூழ்கவைக்கும் அனுபவத்தை… Read More »