கட்டளை வரியிலிருந்துகூட லிபர்ஆஃபிஸ் பயன்பாடுகளை செயற்படுத்தி பயன்பெறமுடியும்

வரைகலை பயனாளர் இடைமுகப்பிற்கு(GUI) பதிலாக கட்டளை வரியிலிருந்து கூட நாம் நேரடியாக நம்முடைய கோப்புகளை மாற்றியமைத்திடுதல், அச்சிடுதல், சேமித்தல் என்பன போன்ற நாம் விரும்பும் திறனுடைய பல்வேறு பணிகளை செயல்படுத்திடுவதற்கான.வசதிகளையும் வாய்ப்புகளையும் லிபர் ஆபிஸ் ஆனது கொண்டுள்ளது, இது மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் அல்லது Google Suite இற்கான பிரபலமான திறமூல மாற்றாக அமைகிறது. கட்டளை வரியிலிருந்து செயல்படும் திறன் லிபர் ஆஃபிஸின் திறன்களில் ஒன்றாகும். எடுத்துக்காட்டாக, பல்வேறு கோப்புகளை DOCX இலிருந்து EPUB க்கு LibreOffice உடன்… Read More »

மோசில்லா பொதுக்குரல் திருவிழா – ஏப்ரல் 14 2021 – நாள் முழுதும்

உங்களது குரலை “Mozilla பொதுக்குரல் திட்டத்திற்கு” கொடையளியுங்கள்… நாள் : 14-ஏப்ரல்-2021 இடம் : எந்த இடத்தில் இருந்தும்… commonvoice.mozilla.org/ta எப்படி பங்களிக்கலாம்? திரையில் காட்டப்படும் சொற்களை படித்து பதிவு செய்யலாம். அல்லது பிறர் படித்தவற்றைக் கேட்டு சரியா தவறா என சொல்லலாம்.   என்ன கருவி வேண்டும்? இணைய இணைப்பு, கணினி, மோசில்லா உலாவி அல்லது மொபைல் கருவி, மோசில்லா உலாவி   காணொளி பாடங்கள்: www.youtube.com/watch?v=uzIvQJfp2Zs www.youtube.com/watch?v=Ne1wnOnZWcI www.youtube.com/watch?v=XSI57bFq3yk   அறிமுக நிகழ்வு :… Read More »

எளிய தமிழில் VR/AR/MR 15. விடுநிலைகள் (Degrees of freedom – DoF)

மூழ்கவைக்கும் அனுபவமும் விடுநிலைகளும் மூழ்கவைக்கும் அனுபவத்தை அடைய பார்வைப் புலம் (Field of View – FoV) என்ற கருத்துருவை முன்னர் பார்த்தோம். நாம் நகர்ந்தாலும், திரும்பினாலும் நாம் பார்க்கும் காட்சி அதற்கேற்றாற்போல் நகரவேண்டும் மற்றும் திரும்பவேண்டும். அதாவது பெயர்ச்சிக்கான (translation) இடநிலை பின்தொடர்தல் (positional tracking) மற்றும் சுழற்சிக்கான (rotation) நோக்குநிலை பின்தொடர்தல் (orientation tracking) இரண்டுமே மூழ்கவைக்கும் அனுபவத்தை அடைய அவசியம் தேவை. இவற்றைப் புரிந்துகொள்ள நாம் விடுநிலைகள் என்ற கருத்துருவைப் புரிந்துகொள்ள வேண்டும்.… Read More »

WebAssembly எனும் இணையதொகுப்பில் ‘அனைவருக்கும் வணக்கம்’ எனும் நம்முடைய முதல் பயன்பாட்டை எவ்வாறு உருவாக்குவது

இணையதொகுப்பு(WebAssembly) என்பது ஒரு எண்மிகுறிமுறை வடிவமைப்பாகும், இதன்உதவியுடன் ஒவ்வொரு இணையஉலாவியும் அதன் புரவலர் கணினியில் இயந்திர குறிமுறைவரிகளை தொகுக்க முடியும். JavaScript , WebGL ஆகியவற்றுடன், இணைய உலாவியில் இயங்குதளத்தின்-சுதந்திரமான பயன்பாட்டிற்கான பயன்பாடுகளை புகுதல்(porting)செய்வதற்கான கோரிக்கையை இந்த WebAssembly ஆனது பூர்த்தி செய்கின்றது. சி ++ ,Rust ஆகியகணினிமொழிகளுக்கான தொகுப்புகளின் இலக்காக, இந்த இணையதொகுப்பானது இணைய உலாவிகள் குறிமுறைவரிகளை சுயமாக இயக்க உதவுகிறது. பொதுவாக ஒரு இணைய தொகுப்பிற்கான, பயன்பாடு பற்றி விவாதிக்கும்போது, அதனுடைய மூன்று நிலைகளை… Read More »

எளிய தமிழில் VR/AR/MR 14. மிகை மெய்ம்மை (AR) வகைகள்

குறிப்பி (marker) அடிப்படையிலான மிகை மெய்ம்மை (AR) குறிப்பி அடிப்படையிலான (Marker-based) மிகை மெய்ம்மை அனுபவங்களுக்கு ஒரு தொடக்கல் (triggering) படம் தேவைப்படுகிறது. குறிப்பி என்பது QR குறியீடு போலவேதான், ஆனால் இன்னும் எளிமையாக இருக்கும். இதை ஒருவர் தங்கள் திறன்பேசியைப் பயன்படுத்தி AR செயலியின் மூலம் வருடலாம் (scan). படம் ஒத்திருந்தால் முன்கூட்டியே தயாரித்த AR காணொளி அல்லது அசைவூட்டத்தைக் காட்டலாம். குறிப்பி அடையாளம் காணல் வேலையை சாதனத்திலேயே செய்யலாம். அல்லது இணைய வழியாக மேகக்கணிமைக்கும்… Read More »

விண்டோஇயக்கமுறைமை செயல்படும் கணினிகளில் லினக்ஸ் பயன்பாடுகளை உருவாக்க WSL ஐப் பயன்படுத்துதல்-

தற்போதுநம்மெல்லோருக்கும் விண்டோ இயக்கமுறைமை செயல்படும் கணினியில் லினக்ஸ் மேம்பாட்டு சூழலை நிறுவுகை செய்வது என்பது மிகவும் எளிதான செயலாகும், அவ்வாறான சூழலில் இதற்காக மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கும் லினக்ஸிற்கான விண்டோவின் துனைஅமைவு (Windows Subsystem for Linux (WSL)) எனும் வசதி மிகப்பெரும் உதவியாகும். பல்வேறு லினக்ஸ் பயன்பாட்டு மேம்டுத்துநர்கள் விண்டோஇயக்கமுறைமை செயல்படும் கணினிகளைக் கொண்டுள்ளனர் மேலும் SSH இன்(விண்டோவில் PuTTY எனும் மென்பொருளை நிறுவுகைசெய்வது போன்று) வாயிலாக இணைப்பதன் மூலம் தொலைநிலையில் லினக்ஸ் சேவையகங்களைப் பயன்படுத்துகின்றனர்… Read More »

எளிய தமிழில் VR/AR/MR 13. மிகை மெய்ம்மை (Augmented Reality – AR)

VR இல் நாம் முழுவதும் மெய்நிகர் உலகத்திலேயே சஞ்சரித்தோம். அது கல்விக்கும், பயிற்சிக்கும், உட்புற வடிவமைப்புக்கும் மற்றும் பல வேலைகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறதென்று பார்த்தோம். இருப்பினும் நம்மைச் சுற்றியுள்ள மெய்யான உலகை எடுத்து அதன்மேல் தேவையைப் பொருத்து சில மெய்நிகர் உருவங்களையும், வரைபடங்களையும், உரைகளையும் காட்ட இயன்றால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். இதுதான் மிகைப்படுத்திய அல்லது மிகை மெய்ம்மை. இது மேலும் பல வேலைகளுக்குப் பயன்படுமல்லவா? போக்கிமான் கோ (Pokemon Go) என்ற… Read More »

ஜாவாவுடன் தரவுகளைஉள்ளிடுதலும் வெளியிடுதலும்

இந்த கட்டுரையில் ஜாவா எனும் கணினிமொழியானது தரவுகளை எவ்வாறுபடிப்பதையும் எழுதுவதையும் கையாளுகின்றது என்பதை அறிந்து கொள்ளமுடியும். பொதுவாக எந்தவொரு நிரலாளரும் தாம் உருவாக்கிடுகின்ற எந்தவொருபுதியபயன்பாட்டிற்கான நிரலாக்கத்தினை எழுதும்போதும், அந்த பயன்பாடானது பயனாளரின் கணினியில் சேமிக்கப்பட்ட கோப்புகளிலிருந்து தரவுகளை எவ்வாறு படிப்பதற்காகவும் எழுதுவதற்காகவும் செயல்படச்செய்யவேண்டும் என்பதே அடிப்படை தேவையாகும். உள்ளமைவு விருப்பங்களை பதிவேற்ற அல்லது சேமிக்க விரும்பும் சூழ்நிலைகளில் இது பொதுவான செயலாகும், ஆயினும் தரவுகளை பதிவுசெய்திடும் கோப்புகளை உருவாக்குதல் அல்லது பின்னர் பயனாளர் ஒருவர் தாம் செய்த… Read More »

எளிய தமிழில் VR/AR/MR 12. VR மற்ற சில பயன்பாடுகள்

உற்பத்தி (Manufacturing) வானூர்தியில் இருக்கும் இடத்தைத் திறம்படப் பயன்படுத்த வேண்டும். பயணிகளுக்கும் சௌகரியமாக இருக்க வேண்டும், அதே நேரத்தில் இடத்தையும் வீணாக்கக் கூடாது. ஆகவே இருக்கும் தளவமைப்பில் (layout) சிறு மாற்றங்கள் செய்வதும் மிகக் கடினம். இந்த வேலைக்கு VR காட்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. பயணிகள் இருக்கை தளவமைப்பு தோற்ற மெய்ம்மை (VR) மாதிரியில் (model) தேவையான மாற்றங்களை செய்து பல கோணங்களிலிருந்தும் ஆராய்ந்து பார்க்கலாம். மூச்சுக்குழாய் முகவணி (oxygen mask) கீழே தொங்கினால் எட்டிப்… Read More »