எளிய தமிழில் VR/AR/MR 14. மிகை மெய்ம்மை (AR) வகைகள்

குறிப்பி (marker) அடிப்படையிலான மிகை மெய்ம்மை (AR) குறிப்பி அடிப்படையிலான (Marker-based) மிகை மெய்ம்மை அனுபவங்களுக்கு ஒரு தொடக்கல் (triggering) படம் தேவைப்படுகிறது. குறிப்பி என்பது QR குறியீடு போலவேதான், ஆனால் இன்னும் எளிமையாக இருக்கும். இதை ஒருவர் தங்கள் திறன்பேசியைப் பயன்படுத்தி AR செயலியின் மூலம் வருடலாம் (scan). படம் ஒத்திருந்தால் முன்கூட்டியே தயாரித்த AR காணொளி அல்லது அசைவூட்டத்தைக் காட்டலாம். குறிப்பி அடையாளம் காணல் வேலையை சாதனத்திலேயே செய்யலாம். அல்லது இணைய வழியாக மேகக்கணிமைக்கும்… Read More »

விண்டோஇயக்கமுறைமை செயல்படும் கணினிகளில் லினக்ஸ் பயன்பாடுகளை உருவாக்க WSL ஐப் பயன்படுத்துதல்-

தற்போதுநம்மெல்லோருக்கும் விண்டோ இயக்கமுறைமை செயல்படும் கணினியில் லினக்ஸ் மேம்பாட்டு சூழலை நிறுவுகை செய்வது என்பது மிகவும் எளிதான செயலாகும், அவ்வாறான சூழலில் இதற்காக மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கும் லினக்ஸிற்கான விண்டோவின் துனைஅமைவு (Windows Subsystem for Linux (WSL)) எனும் வசதி மிகப்பெரும் உதவியாகும். பல்வேறு லினக்ஸ் பயன்பாட்டு மேம்டுத்துநர்கள் விண்டோஇயக்கமுறைமை செயல்படும் கணினிகளைக் கொண்டுள்ளனர் மேலும் SSH இன்(விண்டோவில் PuTTY எனும் மென்பொருளை நிறுவுகைசெய்வது போன்று) வாயிலாக இணைப்பதன் மூலம் தொலைநிலையில் லினக்ஸ் சேவையகங்களைப் பயன்படுத்துகின்றனர்… Read More »

எளிய தமிழில் VR/AR/MR 13. மிகை மெய்ம்மை (Augmented Reality – AR)

VR இல் நாம் முழுவதும் மெய்நிகர் உலகத்திலேயே சஞ்சரித்தோம். அது கல்விக்கும், பயிற்சிக்கும், உட்புற வடிவமைப்புக்கும் மற்றும் பல வேலைகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறதென்று பார்த்தோம். இருப்பினும் நம்மைச் சுற்றியுள்ள மெய்யான உலகை எடுத்து அதன்மேல் தேவையைப் பொருத்து சில மெய்நிகர் உருவங்களையும், வரைபடங்களையும், உரைகளையும் காட்ட இயன்றால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். இதுதான் மிகைப்படுத்திய அல்லது மிகை மெய்ம்மை. இது மேலும் பல வேலைகளுக்குப் பயன்படுமல்லவா? போக்கிமான் கோ (Pokemon Go) என்ற… Read More »

ஜாவாவுடன் தரவுகளைஉள்ளிடுதலும் வெளியிடுதலும்

இந்த கட்டுரையில் ஜாவா எனும் கணினிமொழியானது தரவுகளை எவ்வாறுபடிப்பதையும் எழுதுவதையும் கையாளுகின்றது என்பதை அறிந்து கொள்ளமுடியும். பொதுவாக எந்தவொரு நிரலாளரும் தாம் உருவாக்கிடுகின்ற எந்தவொருபுதியபயன்பாட்டிற்கான நிரலாக்கத்தினை எழுதும்போதும், அந்த பயன்பாடானது பயனாளரின் கணினியில் சேமிக்கப்பட்ட கோப்புகளிலிருந்து தரவுகளை எவ்வாறு படிப்பதற்காகவும் எழுதுவதற்காகவும் செயல்படச்செய்யவேண்டும் என்பதே அடிப்படை தேவையாகும். உள்ளமைவு விருப்பங்களை பதிவேற்ற அல்லது சேமிக்க விரும்பும் சூழ்நிலைகளில் இது பொதுவான செயலாகும், ஆயினும் தரவுகளை பதிவுசெய்திடும் கோப்புகளை உருவாக்குதல் அல்லது பின்னர் பயனாளர் ஒருவர் தாம் செய்த… Read More »

எளிய தமிழில் VR/AR/MR 12. VR மற்ற சில பயன்பாடுகள்

உற்பத்தி (Manufacturing) வானூர்தியில் இருக்கும் இடத்தைத் திறம்படப் பயன்படுத்த வேண்டும். பயணிகளுக்கும் சௌகரியமாக இருக்க வேண்டும், அதே நேரத்தில் இடத்தையும் வீணாக்கக் கூடாது. ஆகவே இருக்கும் தளவமைப்பில் (layout) சிறு மாற்றங்கள் செய்வதும் மிகக் கடினம். இந்த வேலைக்கு VR காட்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. பயணிகள் இருக்கை தளவமைப்பு தோற்ற மெய்ம்மை (VR) மாதிரியில் (model) தேவையான மாற்றங்களை செய்து பல கோணங்களிலிருந்தும் ஆராய்ந்து பார்க்கலாம். மூச்சுக்குழாய் முகவணி (oxygen mask) கீழே தொங்கினால் எட்டிப்… Read More »

இணைய வழி கல்விகற்பதை ஊக்குவிப்பதற்கான கூடுதல்வசதிவாய்ப்புகள்

உலகெங்கிலும் கொரானா பரவியுள்ள தற்போதைய சூழ்நிலையில் மாணவர்கள் எவரும் எங்கிருந்தும் கல்விகற்பதற்கான மிகவும் வசதியான சூழலை வழங்குவதில் ஒரு நல்ல இணையவழிகற்றல் தளமானதுமிக முக்கிய பங்காற்றுகின்றது. கல்வி கற்பிப்பதற்காக நேரடியாக வகுப்புகளை நடத்தஇயலாத தற்போதைய சூழலில் ஆசிரியர்களுக்கு அவ்வாறான வகுப்புகள் நடத்துவதற்கான ஒரு வழி தேவையாகும், கல்வி கற்க விரும்பும் மாணவர்களுக்கு அவ்வாறான கற்றலை எளிதாக்க நட்புடன்கூடிய ஒரு பயனாளர் இடைமுகம் தேவையாகும் , மேலும் நிர்வாகிகள் இந்த கல்வி முறையின் செயல்திறனைக் கண்காணித்து வழிநடத்தி செல்வதற்கான… Read More »

விழுப்புரம் பகுதில் தகவல் தொழிற்நுட்ப பூங்கா அமைக்க அரசாணை

விழுப்புரம் பகுதில் தகவல் தொழிற்நுட்ப பூங்கா அமைக்க 26/02/2021-ம் தேதி அரசாணை( GO.(Ms) No. 109) வெளியிடபட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து VGLUG சார்பாக பல்வேறு மட்டங்களில் அரசின் பார்வைக்கு கொண்டு சேர்த்ததன் பலனாக தற்போது அரசாணை வெளியாகியுள்ளது. இது VGLUG மற்றும் விழுப்புரம் பகுதியை சார்ந்த மக்களுக்கு மகிழ்ச்சியை தருவதாக அமைந்துள்ளது. இது மக்கள் கோரிக்கைக்கு கிடைத்த மகத்தான வெற்றி!விழுப்புரம் பகுதியை சார்ந்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு இந்த தகவல் தொழிற்நுட்ப பூங்கா அரசாணையின்… Read More »

காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்பு – 14-03-2021 – மாலை 4 மணி – இன்று

வணக்கம். காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்புக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமை மாலை 4-5 இணைய வழியில் சந்தித்து, கட்டற்றமென்பொருட்கள் பற்றி உரையாடுகிறோம். நிகழ்ச்சி நிரல் 1. பங்கு பெறுவோர் அறிமுகம்   2. ரூபி மொழி மூலம் Web Scrapping இணையப் பக்கங்களில் இருந்து பல்வேறு தகவல்களை நிரல் மூலம் தானியக்கதாகப் பெறுவது Web Scrapping ஆகும்.‌‌இதை எளிய முறையில் ரூபி என்ற நிரலாக்க மொழி மூலம் எப்படி செய்வது என்று இங்கு… Read More »