[தினம் ஒரு கட்டளை] LS பட்டியலிடுவோமா ?

தினம் ஒரு கட்டளை பகுதியில் கணியம் வாசகர்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி. இன்று மூன்றாவது நாளில் நாம் காண இருப்பது LS – பட்டியல் ls கட்டளையை நாம் பட்டியல் (list) எனப் பொருள் கொள்ளலாம். இந்தக்கட்டளை கோப்புறைகளையும் கோப்புகளையும் பட்டியலிட பயன்படுகிறது. எந்த ஒரு கோப்புறையின் பாதையையும் கொடுக்காமல் இக்கட்டளையை பயன்படுத்தும்போது தற்போது நாம் இருக்கும் கோப்புறையில் உள்ளவற்றை பட்டியலிடுகிறது. தொடரியல்: hariharan@kaniyam: ~/odoc $ ls hariharan@kaniyam: ~/odoc $ sudo ls . நீங்கள்… Read More »

[தினம் ஒரு கட்டளை] POWEROFF இயக்கத்தை நிறுத்து

இரண்டாவது நாளுக்கான கட்டளையாக நாம் பார்க்கவிருப்பது poweroff எனும் கட்டளைதான். POWEROFF – தொடரியல் :  hariharan@kaniyam: ~/odoc $  sudo poweroff இந்த கட்டளை இயங்குதளத்தின் இயக்கத்தை நிறுத்த பயன்படும் கட்டளை ஆகும். இந்த கட்டளை இயக்கப்பட்டவுடன் இயங்குதளத்தில் நிகழும் எல்லாவிதமான செயல்பாடுகளையும் உடனடியாக நிறுத்துகிறது. இவ்வாறு உடனடியாக செயல்பாடுகள் நிறுத்தப்படுவதால் சேமிக்கப்படாமல் இருக்கும் வேலைகள் அனைத்தும் தொலைந்துவிடும். மேலும் இது தற்போது இணைப்பில் உள்ள எல்லா கோப்பு அமைப்புகளின் இயக்கத்தையும் துண்டித்துவிட்டு  வன்பொருளின் இயக்கத்தையும்… Read More »

[தினம் ஒரு கட்டளை] PWD நீ எங்கே இருக்கிறாய்?

லினக்ஸ் இயங்குதளத்தில் பல்வேறு கட்டளைகள் உள்ளன. அவற்றை ஓவ்வொன்றாக நாம் தினம் ஒரு கட்டளை  தொகுப்பில் காணலாம். அதன்படி முதல் நாளான இன்று. PWD கட்டளை பற்றி காணலாம். PWD – Print Working Directory தற்போது நாம் எந்த கோப்புறையில் பணிபுரிகிறோம் என்பதனை அறிய இந்த கட்டளை பயன்படுகிறது. லினக்ஸ் கட்டளைகள் அனைத்திலும் கட்டளைகளோடு சில தெரிவுகள் கொடுக்கப்படும் அவ்வாறு PWD கட்டளையோடு இரு தெரிவுகள் கொடுக்கப்பட்டுள்ளது. அவை –logical மற்றும் –physical தொடரியல் :… Read More »

தடையின்றி அரட்டைகளை மேற்கொள்ள, ஒரு கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலி | கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள் பகுதி 6

நம்மில் பலரும் நண்பர்களோடு பேசுவதற்கும், தகவல் பரிமாற்றத்திற்கும் வாட்ஸ் அப் போன்ற செயலிகளை பயன்படுத்தி வருகிறோம். தற்பொழுது, telegram போன்ற செயலிகளும் பயன்பாட்டில் அதிகமாக இருப்பதை பார்க்க முடிகிறது. ஆனால், whatsapp போன்ற செயலிகளில் நீங்கள் உரையாடும்போது, உங்களுடைய தகவல்கள் பிற நிறுவனங்களுக்கு விற்கப்படுவதாக ஆண்டாண்டு காலமாக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு கொண்டு வருகிறது. தனிமனித தகவல்களை விளம்பர மற்றும் வியாபார நோக்கங்களுக்காக இத்தகைய நிறுவனங்கள் பயன்படுத்துவதாக, நாம் அடிக்கடி செய்திகளில் படித்து வருகிறோம். இவற்றிற்கு மாற்றாக, என்னுடைய… Read More »

வாராந்திர செய்திகள் (Weekly News) – 2024-11-10 | Tamil

இந்த நிகழ்படத்தில் கடந்த வாரம் கட்டற்ற மென்பொருள் உலகத்தில் நடந்த நிகழ்வுகளில் எங்களுக்கு தெரிந்த நிகழ்வுகளை பகிர்ந்துள்ளோம். பங்களித்தவர்கள்: காஞ்சி லினக்ஸ் பயனர் குழு வாராந்திர கூட்டத்தில் பங்கெடுத்தவர்கள். Forum: forums.tamillinuxcommunity.org/

Intro to GDB | Tamil

Topic : Intro to GDB Description : Based on my recent translation of Beej’s guide to Tamil on same. Duration : 20 mins Name : Annamalai N About : a GNU/Linux user interested in Embedded Systems. Final year engineering undergrad.

உங்கள் லினக்ஸ் கணினியில் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்க 3 வழிகள்

உங்கள் லினக்ஸ் கணினியில் உள்ள தகவல்களை, கசியாமல் பார்த்துக் கொள்வதற்கு பல வழிமுறைகளை பின்பற்ற முடியும். பொதுவாகவே, பிற இயங்குதளங்களை காட்டிலும்! லினக்ஸ் ஆனது மிகவும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. இருந்த போதிலும், நம்முடைய தரவுகள் திருடப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கத்தான் செய்கின்றன. இந்தக் கட்டுரையில், உங்கள் தகவல்களை பாதுகாக்க,நம் அனைவருக்கும் பரிச்சயமான மற்றும் பயன்படக்கூடிய மூன்று வழிகளை பார்க்கலாம். இந்தக் கட்டுரைக்கு அடிப்படையாக itsfoss community கட்டுரையை பயன்படுத்துகிறேன். 1. தரவை குறியாக்கம் செய்தல் (encrypting the disk)… Read More »

Postgres Architecture | Tamil

Topic : Postgres Architecture Description : In this talk, we will explore the architecture of postgres Duration : 30 mins Name : Sethupandian About : My name is Sethu and I work as a practice manager for an Insurance company in Canada. Back in India, I am from Salem. Completed my engineering in Electrical &… Read More »

எளிய தமிழில் Electric Vehicles 26. ஓட்டுநர்களுக்கு உதவிக் குறிப்புகள்

மின்னூர்திகள் ஓடும்போது சத்தமே இருக்காது பெட்ரோல் டீசல் கார்களில் வரும் எஞ்சின் ஓடும் சத்தமும், அதிர்வும் மின்னூர்தி மோட்டார்களில் மிகக் குறைவு. காரில் உள்ள பயணிகளுக்கு இது மிகவும் வசதியானது. ஆனால் சாலையில் செல்லும் பாதசாரிகளால் வண்டி மிக அருகில் வந்தாலும் அதை உணர முடியாது. இது விபத்து ஏற்படும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது. ஆகவே ஓட்டுநர் மேலும் கவனமாக ஓட்ட வேண்டும். முக்கியமாகப் பின்னோக்கிச் செல்லும்போது மிகக் கவனமாக ஓட்ட வேண்டும். கியர் மாற்றுதல் தானியங்கி கியர்… Read More »