Sim அட்டைகள் எவ்வாறு வேலை செய்கிறது ?  | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 15.

நான் எளிய எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளை எழுத தொடங்கி, இரண்டு மாதங்கள் ஆகிறது. அந்த வகையில் இது என்னுடைய 15 வது எலக்ட்ரானிக்ஸ் கட்டுரை. கடந்த கட்டுரையில் உள்ளார்ந்த மின்சுற்றுகள் குறித்து பார்த்திருந்தோம். அதுபோன்று என்னுடைய பிற எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளை பார்வையிட கீழே வழங்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தவும். இன்றைக்கு நாம் பார்க்க இருக்கக்கூடிய தலைப்பு சிம் கார்டுகள். சிம் கார்டுகளுக்கும் எலக்ட்ரானிக் தொழில்நுட்பத்திற்கும் அப்படி என்ன சம்பந்தம் இருக்கு போகிறது? என்று நீங்கள் ஒருவேளை யோசிக்கலாம். அடிப்படையில், சிம்… Read More »

செநு(AI) பயன்பாடுகளை உருவாக்க ஜாவாஸ்கிரிப்ட் நமக்கு உதவுமா?

சில மாதங்களுக்கு முன்பு, DeepLearning.AI இன் நிறுவனர் Andrew Ngஎன்பவர் , LangChAIn.js உடன் இணைந்து LLM பயன்பாடுகளை உருவாக்குவதற்கான ஒரு பாடத்திட்டத்தை கொண்டு வந்தார். இது LLM இல் சூழல்–விழிப்புணர்வு பயன் பாடுகளை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்தியது, மேலும் இணைய அபிவிருத்தி சந்தையை ஆளும் திறன்மிக்க ஒருநிரலாக்க மொழி செநு(AI) பயன்பாடுகளை உருவாக்குகின்ற திறனையும் எவ்வாறு கொண்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டியது. சில வாரங்களுக்கு முன்பு, இரண்டு மூத்த மேம்படுத்துநர்களான, தேஜஸ் குமார் , கெவின்… Read More »

எளிய தமிழில் Electric Vehicles 20. சறுக்குப்பலகை அடித்தளம்

தற்போது சந்தையிலுள்ள பெரும்பாலான மின்னூர்திகள் பெட்ரோல் டீசல் ஊர்தி மாதிரியை (model) அடிப்படையாகக் கொண்டவை. பெரும்பாலான மாதிரிகளை நீங்கள் பெட்ரோல் டீசல் ஊர்தியாகவோ அல்லது மின்னூர்தியாகவோ வாங்கலாம். ஆகவே இவற்றில் பெட்ரோல் டீசல் ஊர்தியின் அடிச்சட்டகத்தையே (chassis) எடுத்து அதற்குள் மின்கலம், மோட்டார், திறன் மின்னணு சாதனங்களை எங்கு வைப்பது என்று ஓரளவு தக்கவாறு அமைத்து வடிவமைப்பு செய்கிறார்கள். ஆகவே இவற்றை இருப்பதை வைத்து சமாளித்த வடிவமைப்பு என்றுதான் சொல்லமுடியும். மின்னூர்திகளுக்காகவே உருவாக்கிய ஆகச்சிறந்த வடிவமைப்பு என்று… Read More »

உள்ளார்ந்த மின் சுற்றுகள்(IC) என்றால் என்ன? | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 14

நம்முடைய பெரும்பாலான எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளில் மின்தடைகள்,மின் தேக்கிகள், டையோடுகள்,ட்ரான்சிஸ்டர்கள் உட்பட பலவிதமான எலக்ட்ரானிக் பொருட்கள் குறித்து பார்த்திருக்கிறோம். என்னுடைய பிற எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளை படிக்க: kaniyam.com/category/basic-electronics/ இத்தகைய எலக்ட்ரானிக் பொருட்களை, வெறும் ஒரு சிறிய எலக்ட்ரானிக்ஸ் சாதனத்திற்குள் அடக்கி விட முடியுமா? என்று கேட்டால் மிகவும் கடினமான ஒன்றுதான் என்று உங்களுக்கு தோன்றலாம். உதாரணமாக, உங்களுடைய மொபைல் ஃபோன்களிலும் மின்தேக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. அதே நேரம், நமது வீட்டில் பயன்படுத்தக்கூடிய மின்விசிறிகளில் கூட மின்தேக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. அதே அளவில்… Read More »

திறந்த நிலை, கட்டற்ற தொழில்நுட்பங்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சிக்கல்!

தற்காலத்தில் பெரும்பாலும் கட்டற்றத் தரவுகள் குறித்து, பெரும்பாலான பொதுஜன மக்களுக்கு தெரிந்திருப்பதில்லை. அவ்வாறே தெரிந்திருந்தாலும், அது குறித்த போதிய விழிப்புணர்வு இல்லை. துறைசார் அறிவு கொண்ட வல்லுநர்கள் மட்டுமே கட்டற்ற தொழில்நுட்பங்களை சரியாக பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக, பல கனவுகளோடு எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி உருவாக்கப்படும் இத்தகைய கட்டற்ற படைப்புகள் சில மாதங்களிலேயே பராமரிப்பு இன்றி போகின்றன. மேற்கொண்டு அவற்றை பராமரித்து முறையான புதிய வெளியீடுகளை வழங்க, போதியமான நிதி இருப்பதில்லை. இந்த வாரம் நான் its… Read More »

Build your own lisp using C – part 1

அசல் புத்தக இணைப்பு: buildyourownlisp.com/ மொழிபெயர்த்தது தங்க அய்யனார் அத்தியாயம் 1 – அறிமுகம் புத்தகத்தை பற்றி இந்தப் புத்தகத்தில் நீங்கள் சி(C) நிரலாக்க மொழியைக்(Programming language) கற்றுக்கொள்வீர்கள், அதே நேரத்தில் ~உங்கள் சொந்த நிரலாக்க மொழி~, சிறிய லிஸ்ப்(LISP), 1000 வரிகளுக்குக் கீழ் எவ்வாறு உருவாக்குவது என்பதை அறிந்து கொள்வீர்கள்!ஆரம்பத்தில் சிலவற்றைச் செய்ய நாம் ஒரு நூலகத்தைப்(library) பயன்படுத்துவோம், எனவே வரி எண்ணிக்கையில் நான் கொஞ்சம் ஏமாற்றுகிறேன், ஆனால் மீதமுள்ள நிரல் முற்றிலும் அசலாக இருக்கும்,… Read More »

தமிழ் 99 விசைப்பொறியை மொபைல் ஃபோனிலும் பயன்படுத்தலாம்!

F droid ஆப் ஸ்டோரில் காணப்படக்கூடிய செயலிகள் குறித்து பார்க்க வருகிறோம். தமிழ் 99 விசை பொறி தொடர்பாக, முன்பு ஒரு கட்டுரையில் விவாதித்து இருந்தோம். அந்தக் கட்டுரையையும் பார்வையிடவும் F droid ஆப் ஸ்டோரில் காணப்படக்கூடிய indic keyboard எனும் செயலியை பயன்படுத்தி, உங்களால் தமிழ் 99 விசைபொறியை மொபைல் போனில் பயன்படுத்த முடியும். அதையும் கடந்து, மொபைல் ஃபோன்களுக்கான ஒரு கட்டற்ற,திறந்த நிலை விசைப்பொறியை நம்மில் பலரும் தேடிக் கொண்டிருப்போம். ஆனால் ப்ளே ஸ்டோரில்… Read More »

நமக்கு இந்த ஆறு முக்கிய வேறுபாடுகள் மட்டும் தெரிந்தால் போதும் விண்டோவிற்கு பதிலாக லினக்ஸைப் பயன்படுத்துவது எளிதாகும்

எந்தவொரு இயக்க முறைமையையும் புதியதாக பயன்படுத்திட துவங்குவது என்றால் நமக்கு அதிகபயமாகவும் வெறுப்பாகவும் இருக்கும், ஏனென்றால் புதிய சூழலில் செயலிகளும், பயன்பாடுகளும் நாம் இதுவரை பழகிய விதத்தில் செயல்படா. அவ்வாறான நிலையில் விண்டோவிலிருந்து லினக்ஸிற்கு மாறவிரும்புவோர் விண்டோவிற்கும் லினக்ஸுக்கும் இடையிலுள்ள வேறுபாடுகளைக் கற்றுக்கொள்வது அவ்வாறான வெறுப்பை விருப்பமாக மாற்றிவிடும். பொதுவாக நாம் புதியதான ஒரு பகுதிக்கு செல்லும் போது, ​​தண்ணீரிலிருந்து தரையில் வீசிய மீன் போன்று மிகவும் போராட்டமாக இருக்குமோ என்ற கவலை எழுவது இயல்புதான். அவ்வாறு… Read More »

கட்டற்ற ஆண்ட்ராய்டு கணிப்பான்

ஆண்ட்ராய்டு கருவிகளுக்கான, கணிப்பான்(calculator) செயலிகளை நாம் அடிக்கடி பயன்படுத்துகிறோம். தற்காலத்தில், பிரத்தியேகமாக கணிப்பான்களை வாங்கும் பழக்கம் மிகவும் குறைந்துவிட்டது. ஓரளவுக்கு கல்லூரி மாணவர்கள், வயதானவர்கள் மற்றும் சில கடைகளில் மட்டுமே கணிப்பான்களை பார்க்க முடிகிறது. பெரும்பாலானவர்கள், மொபைல் ஃபோன்களில் இருக்கக்கூடிய கணிப்பான்களையே பயன்படுத்துகின்றனர். ஆனால், உங்களுக்கு மொபைல் போன்களில் இயல்பாக இருக்கக்கூடிய கணிப்பான்கள் அவ்வளவு சிறப்பாக பணியாற்றுவதில்லை. நீங்கள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து வேறு கணிப்பான்களை நிறுவினாலும்! அதில் நிமிடத்திற்கு நிமிடம் விளம்பரங்களை பார்க்க வேண்டிய… Read More »