Windows மூலம் செய்ய முடியாத சில செயல்களை Linux மூலம் செய்யலாம்

விண்டோ இயக்க முறைமைக்கு மாற்றினை விரும்பும் கணினி அறிவியல் மாணவர்கள், ,நிரலாளர்கள் ஆகியோர்களால் இணைய தாக்குதலலிருந்து பாதுகாக்கின்ற மிகவும் சக்திவாய்ந்த, நெகிழ்வான, லினக்ஸ் எனும் திறமூல இயக்க முறைமை முதன்மையாகப் பயன்படுத்தப்பட்டது. துவக்கத்தில் மேசைக்கணினி, மடிக்கணினி ஆகியவற்றில் லினக்ஸை நிறுவுகைசெய்து பயன்படுத்தி கொண்டுவந்தனர் தற்போது மிகவேகமாக முன்னேறி தொலைபேசிகள்,மகிழ்வுந்துகள், பொதுவானஉபகரணங்கள், IoT சாதனங்கள்,போன்ற எல்லாவற்றுக்கும் லினக்ஸானது பயன்படுத்தப்படுகிறது ஏனெனில், இது விண்டோவை விட நெகிழ்வானது, பாதுகாப்பானது. லினக்ஸை நாம் விரும்பியவாறு எவ்வாறு வேண்டுமானாலும் வளைத்து பயன்படுத்த முடியும்.… Read More »

எளிய தமிழில் Electric Vehicles 15. வெப்ப மேலாண்மையகம்

இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளில் சூட்டைத் தணிப்பது மிக முக்கியம் ஊர்தி ஓடிக்கொண்டிருக்கும் பொழுது இழுவை மோட்டார், மின்கலம், திறன் மின்னணு (power electronics) சாதனங்கள் ஆகியவற்றில் அதிக மின்னோட்டம் இருப்பதால் சூடாகிக் கொண்டே இருக்கும். மேலும் மின்கலத்தில் மின்னேற்றம் செய்யும்போதும் அது சூடாகும். இந்த சூட்டைத் தணிக்கா விட்டால் இவை திறனுடன் வேலை செய்ய இயலாது. மேலும் வெப்பம் மிக அதிகமானால் பழுதடையும் வாய்ப்புகள் அதிகம். மின்காப்பு பழுதடைதல் (insulation failure), மின்கசிவுகள் (short… Read More »

Chrome உலாவியில் இருக்கும் அருமையான 5 துணை கருவிகள்

நம்மில் பலரும் குரோம் உலாவியை பயன்படுத்தி வருகிறோம். குரோம் உலாவியில் பலவிதமான துணைக் கருவிகளையும்(extensions) பயன்படுத்தியிருப்பீர்கள். அதில்சில திறந்த நிலை பயன்பாடுகளாக இருக்காது.ஆனால், இந்த கட்டுரையில் நான் குறிப்பிடவிருக்கும் ஐந்து துணைக் கருவிகளும், திறந்த நிலை பயன்பாடுகள் தான். அதே நேரம், உங்களுக்கான வேலையை மேலும் எளிதாக்கும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டிருக்கின்றன . அந்த ஐந்து சிறப்பான துணை கருவிகள், எவை?எவை? என்பதை ஒன்றொன்றாக பார்க்கலாம். அதற்கு முன்பாக, மேற்படி இந்த கட்டுரையானது  itsfoss இணையதளத்தில் சாய்… Read More »

டிரான்சிஸ்டர்கள்(திரிதடையம்) என்றால் என்ன ? | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 6 .

கடந்த எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில், டையோடுகள் குறித்து விவாதித்து இருந்தோம். அந்த கட்டுரையை படிக்கவில்லை எனில்? இந்த கட்டுரையை படித்து விட்டு அதையும் பார்வையிடவும் . மேலும்,  எலக்ட்ரானிக்ஸ் பகுதியில் வெளியாகும் அனைத்து கட்டுரைகளை படிக்க, கீழே இருக்கும் பொத்தானை அமிழ்த்தவும். டிரான்சிஸ்டர் என்றால் என்ன? தமிழில் திரிதடையம் என அழைக்கப்படும் டிரான்சிஸ்டர்கள், அடிப்படையில் குறை கடத்திகளின் ஒரு மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பு தான். இரண்டு PN  சந்திடையோடுகளை இணைத்தார் போல காணப்படும் டிரான்சிஸ்டர்கள் , அதற்கு உரிய… Read More »

செனார் டையோடுகளும் அவை குறித்து தகவல் துணுக்குகளும் |எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 5

கடந்த கட்டுரையில் பி என் சந்தி டையோடு குறித்து பார்த்திருந்தோம். என்னுடைய எலக்ட்ரானிக் தொடர்பான கட்டுரைகளை, நீங்கள் இதுவரை படிக்க வில்லை எனில் , கீழே வழங்கப்பட்டுள்ள பொத்தானை அமிழ்த்தி, கட்டுரைகளை பார்வையிடவும். இன்றைக்கு நாம் விவாதிக்க இருப்பது “செனார் டையோடு” குறித்து தான், நாம் சந்தி டையோடில் பார்த்தது போல, கிட்டத்தட்ட ஒரே விதத்தில் தான், செனார் டையோடும் செயல்படுகிறது. ஆனால், செனார் டையோடுக்கு என சில சிறப்பு பண்புகள் இருக்கின்றன! குறிப்பாக, எதிர் திசை… Read More »

புதியவர்களுக்கான இயந்திர கற்றலின்( ML ) அடிப்படைகள்

இயந்திர கற்றல்( ML ) என்பது ஒரு பரந்த மிக விரைவாக வளர்ந்து வருகின்ற துறையாகும், மேலும் இந்த கட்டுரை புதியதாக இந்த துறையில் நுழை பவர்கள் பாரம்பரிய நிரலாக்கத்திற்கும் ML க்கும் இடையிலான வேறுபாடுகளைப் புரிந்துகொள்வது முதல் பல்வேறு வகையான இயந்திர கற்றல் வழிமுறைகளை ஆராய்வது வரை இயந்திரக் கற்றலின் அடிப்படைக் கருத்தமைவுகளை இந்த கட்டுரையில் தெரிந்துகொள்ளமுடியும். இயந்திர கற்றல் (ML) என்பது செயற்கை நுண்ணறிவின் (AI) மாற்றுத் துறையாகும், இது வெளிப்படையாக நிரலாக்கம் செய்யப்படாமல்… Read More »

காஞ்சி லினக்ஸ் வாராந்திர கூட்டம்( 18/08/2024)

காஞ்சி லினக்ஸ் கூட்டமைப்பின் வாராந்திர கூட்டம், இன்று (ஆகஸ்ட்18 2024 அன்று) நடைபெறவிருக்கிறது. இந்திய நேரப்படி, மாலை 5 மணி முதல் 6:00 மணி வரை இணையவழியில்  கூட்டம் நடைபெறும். நிகழ்வில், லினக்ஸ் தொடர்பான பல தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படும். உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், அது தொடர்பாகவும் கேட்டு தெரிந்து கொள்ள முடியும். மேற்படி கூட்டத்தில் பங்கேற்க எவ்வித நுழைவு கட்டணமும் இல்லை. Jitsi ஆண்ட்ராய்டு செயலி அல்லது உங்களிடம் இருக்கும் உலாவி(browser) மூலம், இந்த… Read More »

எளிய தமிழில் Electric Vehicles 14. மின்கலன் மேலாண்மையகம்

மின்னூர்தியின் செயல்பாடுகள் அதன் மின்கலத்தைப் பெரிதும் நம்பியுள்ளன. ஆகவே அதைத் தொடர்ச்சியாகக் கண்காணிப்பதும் கட்டுப்பாடு செய்வதும் அவசியம். உயர் மின்னழுத்த லித்தியம் அயனி மின்கலங்களில் மின்னூர்திகள் இயங்குகின்றன. லித்தியம் அயனி மின்கலங்கள் மற்ற மின்கல வேதியியல்களுடன் ஒப்பிடும்போது அதிக ஆற்றல் அடர்த்தி கொண்டவை. ஆனால் சில வழக்கத்திற்கு மாறான சூழ்நிலைகளில் இவை தீப்பற்றிக் கொள்ளும் அபாயம் உள்ளது. ஆகவே பயனர் பாதுகாப்பையும் ஊர்தியின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக முன் வரையறுக்கப்பட்ட பாதுகாப்பு வரம்புகளுக்குள் மின்னூர்திகளை இயக்குவது மிகவும்… Read More »

தமிழ் எழுத்துருக்களும் யுனிகோடு பயன்பாடும் அவற்றிலுள்ள சவால்களும் – இணைய உரை

தலைப்பு: தமிழ் எழுத்துருக்களும் யுனிகோடு பயன்பாடும் அவற்றிலுள்ள சவால்களும் தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (இலங்கை) இணையவழி உரையாடல் எண்:158 காலம் 17.08.2024 சனிக்கிழமை 7.30-8.30 IST உரையாளர்: பரதன் தியாகலிங்கம் உறுப்பினர் தமிழறிதம், விரிவுரையாளர் – ஊக்கி,கிளிநொச்சி, இலங்கை சூம் நுழைவு எண் : 818 910 3894 கடவுச்சொல்: 2020 வட்ஸ்அப் +94766427729 மின்னஞ்சல் : thamizharitham@gmail.com சூம் இணைப்பு: us02web.zoom.us/j/81891038941?pwd=U0drdzg4dVMvdC8wMU5LZW5lNDdYUT09

UBUNTU 24.04இல் இருக்கும் ஒரு சிறிய சிறப்பம்சம்!

நம்மில் பலரும் ப்ளூடூத் அடிப்படையில் ஆன கருவிகளை(bluetooth devices) பயன்படுத்துகிறோம். நாம் பயன்படுத்தும் இத்தகைய ஊடலை(bluetooth )அடிப்படையிலான கருவிகளில், உள்ள மின்கல அளவை(battery percentage ) கண்டறிவது குழப்பமான ஒன்றுதான். உதாரணமாக நம்மில் பலருக்கும், தேவைப்படும் நேரத்தில்! சுட்டியில்( mouse) மின்னாற்றல் தீர்ந்து போய் தவித்து இருப்போம். இதற்கான ஒரு எளிய தீர்வை உபூண்டு 24. 04 வெளியிட்டில் காண முடிகிறது. ஆம்! உங்களுடைய ப்ளூடூத் கருவிகளில் இருக்கக்கூடிய ஆற்றல் அளவை, உங்கள் இயங்கு தளத்தின் மூலமாக… Read More »