UBUNTU 24.04இல் இருக்கும் ஒரு சிறிய சிறப்பம்சம்!

நம்மில் பலரும் ப்ளூடூத் அடிப்படையில் ஆன கருவிகளை(bluetooth devices) பயன்படுத்துகிறோம். நாம் பயன்படுத்தும் இத்தகைய ஊடலை(bluetooth )அடிப்படையிலான கருவிகளில், உள்ள மின்கல அளவை(battery percentage ) கண்டறிவது குழப்பமான ஒன்றுதான். உதாரணமாக நம்மில் பலருக்கும், தேவைப்படும் நேரத்தில்! சுட்டியில்( mouse) மின்னாற்றல் தீர்ந்து போய் தவித்து இருப்போம். இதற்கான ஒரு எளிய தீர்வை உபூண்டு 24. 04 வெளியிட்டில் காண முடிகிறது. ஆம்! உங்களுடைய ப்ளூடூத் கருவிகளில் இருக்கக்கூடிய ஆற்றல் அளவை, உங்கள் இயங்கு தளத்தின் மூலமாக… Read More »

PN சந்தி டையோடு – ஒரு அடிப்படை விளக்கம் | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 4

கடந்த கட்டுரையில் குறைகடத்திகள் குறித்து விரிவாக விவாதித்து இருந்தோம். குறைக்கடத்திகளின் ஒரு மேம்படுத்தப்பட்ட வடிவம் தான்! PN சந்திடையோடு. அது குறித்து தான் இன்றைய கட்டுரையில் அடிப்படை தகவல்களை அறியவிருக்கிறோம். என்னுடைய எளிய எலக்ட்ரானிக்ஸ் குறித்த கட்டுரைகளை நீங்கள் படிக்கவில்லை! என்றால், அவற்றையும் இந்த கட்டுரைக்கு பிறகு பார்வையிடவும். அவற்றை பார்வையிட கீழே இருக்கும் பொத்தானை அமிழ்த்தவும்! பிஎன் சந்திடையோடு என்பது அடிப்படையில் முக்கோண வடிவில் குறியிடப்படுகிறது. பி என் சந்திடையோடு மின்சுற்று படம் கீழே வழங்கப்பட்டுள்ளது.… Read More »

பயர்பாக்ஸ் உலாவியில், தேவையில்லாத அறிவிப்புகளை நிறுத்துவது எப்படி?

நம்மில் பலரும் தெரிந்தோ, தெரியாமலோ! பல இணையதளங்களிலும், அறிவிப்பு விருப்பங்களை தேர்ந்தெடுத்து வைத்துவிடுகிறோம். பின்னாளில், நாம் உலாவியை(browser) பயன்படுத்தாத போதிலும் பல நேரங்களிலும் இத்தகைய இணையதளங்களில் இருந்து, தேவையற்ற பல அறிவிப்புகள்(especially push notifications) வந்து நம்மை எரிச்சலடைய செய்கிறது. இதற்கான தீர்வு குறித்து தான் பார்க்கவிருக்கிறோம். குறிப்பிட்ட இணையதளத்திலிருந்து அறிவிப்புகளை நிறுத்துவது! ஒரு குறிப்பிட்ட இணையதளத்தில் இருந்து வரும் அறிவிப்புகளை மட்டும், நீங்கள் நிறுத்த விரும்பினால்! நான் இப்பொழுது கூறவிருக்கும் முறையை முயற்சி செய்து பாருங்கள்.… Read More »

துவக்கநிலையாளர்களுக்கான சிறந்த லினக்ஸ் வெளியீடுகள்

பிரபலமான கருத்துக்கு மாறாக, லினக்ஸ் என்பது ஒரு இயக்க முறைமையாகும், இந்த இயக்கமுறைமைகளை விரும்பும் எவரும் பயன்படுத்த முடியும். அதாவது, உபுண்டு லினக்ஸைப் பயன்படுத்துவது எவ்வாறு என 79 வயதுடையவர்கூட கற்றறிந்துகொண்டு பயன்படுத்ததுவங்கிடமுடியும், இதனை பயன்படுத்தி கொள்வதற்காகவென குறிப்பிட்ட ஒரு மொழி தெரிந்திருக்கவேண்டும் எனும் கட்டுப்பாடு எதுவுமில்லை. நாம் பயன்படுத்த துவங்குவதற்கான சிறந்த லினக்ஸ் வெளியீட்டினைத் தேர்ந்தெடுப்பதே உண்மையான பிரச்சனையாகும். லினக்ஸில் நாம் தேர்வு செய்வதற்காக நூற்றுக்கணக்கான லினக்ஸ் வெளியீடுகள் உள்ளன. அவற்றுள் Gentoo ,Linux From… Read More »

எளிய தமிழில் Electric Vehicles 13. மோட்டார் கட்டுப்பாட்டகம்

பெட்ரோல் டீசல் கார்களிலும் பல மின்னணு கட்டுப்பாட்டகங்கள் உள்ளன. ஆகவே மின்னூர்திகளுக்குப் பிரத்தியேகமான கட்டுப்பாட்டகங்களைப் பற்றி மட்டும் இங்கு பார்ப்போம். மின்னழுத்தத்தையும், அலைவெண்ணையும் துல்லியமாகக் கட்டுப்படுத்த வேண்டும் நம் வீடுகளில் மின்தடங்கல் ஏற்பட்டால் அவசரகாலப் பயனுக்கு மின்மாற்றி (inverter) வைத்திருப்போம் அல்லவா? மின்சாரம் இருக்கும்போது மாறுமின்சாரத்தை (Alternating Current – AC) நேர்மின்சாரமாக (Direct Current – DC) மாற்றி மின்கலத்தில் மின்னேற்றம் செய்யும். மின்தடங்கல் ஏற்பட்டால் மின்கலத்திலிருந்து வரும் நேர்மின்சாரத்தை மாறுமின்சாரமாக மாற்றி விளக்கு, மின்விசிறி… Read More »

குறை கடத்திகள் | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 3

ஏற்கனவே மின்தேக்கிகள் மற்றும் மின்தடைகள் குறித்து இரண்டு கட்டுரைகளில் விவாதித்திருந்தேன். அந்தக் கட்டுரைகளை படிக்கவில்லை எனில், இந்த கட்டுரையை படித்துவிட்டு அதையும் பார்வையிடவும். சரி! இன்றைய தலைப்புக்கு வருவோமா? குறை கடத்திகள் அப்படி என்றால் என்ன? ஏன் அவை குறைவாக கடத்த வேண்டும்? என அடுக்கடுக்கான கேள்விகள் உங்களுக்குள் வரலாம். அடிப்படையில் திடப்பொருட்கள் மூன்று வகையில் வகைப்படுத்தப்படுகின்றன. இந்த வகைப்பாடானது, திடப் பொருட்களின் ஆற்றல் மட்ட கோட்பாட்டின்( Band theory of solids) அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது. அவையாவன,… Read More »

உங்கள் UBUNTU  VERSION – ஐ எளிமையாக அறிந்து கொள்ளுங்கள்!

பலதரப்பட்ட செயலிகளை நிறுவுவதற்கும் , சில நுணுக்கமான செயல்பாடுகளை செய்வதற்கும் உங்களுடைய கணினியின் ubuntu version(வெளியீடு) ஐ அறிந்து கொள்வது அவசியமாகிறது. தொடக்க நிலை பயனாளர்களுக்கு Ubuntu version ஐ அறிந்து கொள்வதில் சிக்கல் நீடிப்பதை காண முடிகிறது. வாருங்கள்! வழிமுறைகள் ஒவ்வொன்றையும், ஒன்றும் பின் ஒன்றாக பார்க்கலாம். முதலாவதாக முனையத்தில்(terminal) கீழ்காணும் கட்டளையை அரங்கேற்றவும். lsb_release -a மேற்படி கட்டளையை முனையத்திற்கு அழைத்த பிறகு கீழ்காணும் வகையிலான வெளியீடை நீங்கள் பெற முடியும். Distributor ID:… Read More »

கட்டற்ற மென்பொருள் உலகம் – இந்த வார செய்திகள் – 2024-08-04

இந்த நிகழ்படத்தில் கடந்த வாரம் கட்டற்ற மென்பொருள் உலகத்தில் நடந்த நிகழ்வுகளில் எங்களுக்கு தெரிந்த நிகழ்வுகளை பகிர்ந்துள்ளோம். பங்களித்தவர்கள்: காஞ்சி லினக்ஸ் பயனர் குழு வாராந்திர கூட்டத்தில் பங்கெடுத்தவர்கள். [Parameshwar’s News] [Thanga Ayyanar News]

Category:

மின்தடையும் அது குறித்த தகவல் துணுக்குகளும்| எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி-2

கடந்த கட்டுரையில் மின் தேக்கி குறித்து பார்த்திருந்தோம். அந்த கட்டுரையை தற்போது வரை நீங்கள் படிக்கவில்லை எனில், இந்த கட்டுரை படித்து முடித்துவிட்டு அதையும் பார்வையிடவும். சரி! இன்றைய தலைப்பிற்கு உள்ளாக வருவோம். மின்தடை என்றால் என்ன? பெயரிலேயே இருக்கிறதே! மின்சாரத்தை தடை செய்யக்கூடிய பொருள் என்று பதில் அளித்தால் அது சரிதான். சரி! எத்தகைய பொருட்கள் மின்சாரத்தை தடை செய்யும்? மின்சாரத்தை தடை செய்ய வேண்டும் என்றால் மின்சாரத்தை கடத்தாத பொருட்களை தானே பயன்படுத்த வேண்டும்… Read More »