புத்தக மன்றம் (Book Club) – துருவங்கள் நுட்ப நாவல் – அத்தியாயம் 5

இந்த தொடரில் புத்தகம் படித்து அதில் கூறி இருக்கும் கருத்துக்கள் பற்றிய விவாதத்தை இங்கே பகிர்ந்திருக்கிறோம். புத்தகம்: துருவங்கள் (நுட்ப நாவல்) இணைப்பு: freetamilebooks.com/ebooks/dhuruvangal-technical-novel/ அத்தியாயம் 5

Tamil Linux Community புத்தக மன்றம் (Book Club) – கலந்துரையாடல்

புத்தகம்: துருவங்கள் 11=10|01 18-02-2024 16:00 IST இணைப்பு: meet.jit.si/LetsReadDhuruvangalInKanchiLUG துருவங்கள் – தமிழின் கட்டற்ற கணினி நுட்ப நாவல் இங்கே இலவசமாகப் பதிவிறக்கம் செய்யலாம்

இலவச இணையவழி React வகுப்புகள் – தமிழில்

நாளை [14.02.2024] முதல் இலவச இணையவழி React வகுப்புகள் நடத்தப்படவிருக்கின்றன.  பொறியாளரும் கட்டற்ற மென்பொருள் பங்களிப்பாளருமான திருமிகு அருண்குமார் இந்த வகுப்புகளை நடத்தவிருக்கிறார். என்ன செய்யப் போகிறோம்? ஒரு சின்ன React மென்பொருளை [Weather App] உருவாக்க இருக்கிறோம் இதில் கலந்து கொள்ள என்னென்ன தெரிந்திருக்க வேண்டும்? HTML, CSS, ஜாவாஸ்கிரிப்ட் அடிப்படைகள் தெரிந்திருப்பது போதுமானது. கல்வித்தகுதி எதுவும் உண்டா? யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.  மேலே குறிப்பிட்டுள்ள தகுதியுடைய யார் வேண்டுமானாலும். எத்தனை நாட்கள்? ஒவ்வொரு… Read More »

கணித்தமிழ் 24 மாநாடு – வெளியீடுகள்

கணித்தமிழ் 24 மாநாட்டில் வெளியிடப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள்,சிறப்பு மலரை இங்கே பதிவிறக்கம் செய்க. கணிக்கோவை – கணித்தமிழ்24 மாநாட்டுக் கட்டுரைகள் கணித்தொகை – பன்னாட்டுக் கணித்தமிழ் 24 மாநாடு சிறப்பு மலர்

வாராந்திர செய்திகள் (Weekly News) – 2024-02-11 | Tamil

இந்த நிகழ்படத்தில் கடந்த வாரம் கட்டற்ற மென்பொருள் உலகத்தில் நடந்த நிகழ்வுகளில் எங்களுக்கு தெரிந்த நிகழ்வுகளை பகிர்ந்துள்ளோம். பங்களித்தவர்கள்: காஞ்சி லினக்ஸ் பயனர் குழு வாராந்திர கூட்டத்தில் பங்கெடுத்தவர்கள்.

பைதான் ஒரு இணையதுணுக்காக செயல்படுத்தி பயனடைக

பைதானின் இணையதுணுக்கு(web scraper) என்பது பல்வேறு இணையதளப் பக்கங்களின் உள்ளடக்கங்களைப் பதிவிறக்கம் செய்து அவற்றிலிருந்து தரவைப் பிரித்தெடுக்கின்ற ஒரு பயன்பாட்டுமென்பொருள் அல்லது உரைநிரல் ஆகும்.இதனை துவக்கிபயன்படுத்திகொள்வதற்கான படிமுறைபின்வருமாறு.               படம் 1: இணையஉரைநிரலின் வெவ்வேறு நிலைகளின் திட்ட வரைபடம் படிமுறை1:இணையதளத்திலிருந்து உள்ளடக்கங்களைப் பதிவிறக்கம்செய்தல் இந்தப் படிநிலையில், URL இலிருந்து கோரப்பட்ட இணையதளபக்கத்தை ஒரு இணைய துணுக்கு ஆனது படிக்கிறது. படிமுறை 2: தரவைப் பிரித்தெடுத்தல் பின்னர் இவ்விணைய துணுக்கு… Read More »

எளிய தமிழில் Car Electronics 15. ஊர்திக் கம்பிதைத்தல்

இன்று கார்களில் பல மின்னணு பாகங்கள் பொருத்தப்படுகின்றன என்று நாம் பார்த்தோம். இவை நகர்தல், திருப்புதல், நிறுத்துதல் போன்ற அடிப்படைச் செயல்பாடுகள் தவிர, பல்வேறு தகவல், பொழுதுபோக்கு செயல்பாடுகளையும் செய்கின்றன. இந்த மின்னணு பாகங்களைக் கட்டுப்படுத்துவதற்கும், ஊர்தியின் ஒவ்வொரு பகுதிக்கும் சக்தியையும் சமிக்ஞைகளையும் கடத்துவதற்கும் மின்கம்பிகள் இன்றியமையாதவை. கம்பிதைத்தல் (Wiring Harness) என்பது இம்மாதிரியுள்ள பல நூற்றுக்கணக்கான மின்கம்பிகளை உறைகளுக்குள் கட்டித் தொகுத்து, அடையாளமிட்டு, ஒழுங்கமைத்து வைப்பதற்கான ஒரு பயனுள்ள அமைப்பு ஆகும். இது மின் கம்பிகளை… Read More »

கணியம் அறக்கட்டளை கனடா கிளை தொடங்கப் பட்டது

1 சனவரி 2012ல் கணியம் தளம், கட்டற்ற மென்பொருட்களுக்கான மின்னிதழாக, கட்டற்ற மென்பொருள் பங்களிப்பாளர்களால் தொடங்கப்பட்டது. பல்வேறு கணித்தமிழ் பணிகளை ஒருங்கிணைக்க, கணியம் அறக்கட்டளையாக 18 செப்டம்பர் 2018 ல் வளர்ந்தது. உலகெங்கும் உள்ள தமிழ் ஆர்வலர்களின் பங்களிப்புகள், நன்கொடைகள் பல அரும்பணிகளை சாத்தியமாக்கியுள்ளன. பல்வேறு கனவுகள் நனவாகும் நிகழ்வுகளின் தொடர்வாக, 4 பிப்ரவரி 2024 அன்று கனடாவில் ஒன்றாரியோ மாகாணத்தில் Kaniyam Foundation என்ற அமைப்பு பதிவு செய்யப்பட்டதை மகிழ்வுடன் அறிவிக்கிறோம். யாதும் ஊரே! யாவரும்… Read More »