எளிய தமிழில் 3D Printing 24. உற்பத்தியின் தர உறுதிதான் பெரிய சவால்

வாகனத்துறை, கட்டுமானம், மருத்துவம் மற்றும் விண்வெளி போன்ற மிகவும் இக்கட்டு நிறைந்த பயன்பாடுகளுக்கு முப்பரிமாண அச்சிடல் பயன்படுத்தப்படுகிறது என்று பார்த்தோம். பாகத்தின் தரம் குறைவாக இருந்தால் எந்தத் துறையிலும் பிரச்சினைதான். ஆனால் இம்மாதிரி மிகவும் இக்கட்டு நிறைந்த துறைகளில் ஒரு பாகம் தரக்குறைவால் பழுதடைந்தால் உயிருக்குக்கூட ஆபத்து ஏற்படக்கூடும். ஏறக்குறைய 50% நிறுவனங்கள் தங்கள் 3D அச்சுப்பொறிகளைப் பயன்படுத்துவதில் தரக் கட்டுப்பாடுதான் அவர்களின் முக்கிய சவால் என்று கூறுகின்றன. 3டி அச்சிடலில் உள்ள தர பிரச்சினைகளின் வகைகள்… Read More »

FreeTamilEbooks பங்களிப்பாளர் இணையவழி நேர்காணல் – திருமூர்த்தி வாசுதேவன்

FreeTamilEbooks.com இணையதளம் தமிழில் எண்ணற்ற புத்தகங்களை கட்டற்ற உரிமையில் (Creative Commons License) வெளியிடும் இணையதளம் அகும். இத்தளம் கணியம் அறக்கட்டளையால் தொடக்கப்பட்டு நடத்தி வரப்படுகிறது. இத்தளத்தில் தன் புத்தகத்தை கட்டற்ற உரிமையில் வெளியிட்ட ஆசிரியர் திருமூர்த்தி வாசுதேவன் அவர்களுடன் இணையவழி நேர்காணல் நடைபெற உள்ளது. அவருடன் உரையாட விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் குறிப்பிட்டுள்ள நேரத்தில் இணையவும். நேர்காணல் நிகழ்படப் பதிவு www.youtube.com/@TamilLinuxCommunity தளத்தில் வெளியிடப்படும். நாள்: சனிக்கிழமை, 2023-07-15 நேரம்: மாலை 5.00… Read More »

எளிய தமிழில் 3D Printing 23. விண்வெளித் துறைப் பயன்பாடுகள்

விண்வெளித் துறையில் 3D அச்சிடலுக்குப் பல பயன்பாடுகள் உள்ளன. செயற்கைக் கோள்களின் எடையைக் குறைக்க அவற்றின் பாகங்கள் 3D அச்சு முறையில் தயாரிக்கப்படுகின்றன. பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் (International Space Station) பதிலி பாகங்கள் 3D அச்சு முறையில் தயாரிக்கப்படுகின்றன. அமெரிக்காவில் நாசா நிறுவனம் நிலா மற்றும் செவ்வாய் கோளில் தேவைப்படும் பொருட்களை அங்கேயே தயாரிக்கக்கூடிய 3D அச்சு எந்திரங்களை உருவாக்கி வருகிறது. இவற்றில் ஒரு எடுத்துக்காட்டாக ஏவூர்தி (rocket) 3D அச்சிடலைப் பற்றி இங்கு பார்ப்போம்.… Read More »

திறமூல மென்பொருள் வழிகாட்டி

திறமூல மென்பொருள் என்பது மேம்படுத்துநர்களின் சமூககுழுவால் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்ற மென்பொருளாகும். இது பொதுமக்களுக்கு கட்டுப்பாடு எதுவுமில்லாமல் கிடைக்கக்கூடியது, அதாவது குறிப்பிட்ட எந்தவொரு மென்பொருளின் மூலக் குறிமுறைவரிகளை யார் வேண்டு மானாலும் பதிவிறக்கம் செய்து அதில் தாம்விரும்பியவாறு மாற்றம் செய்திடலாம். இது மற்ற தனியுரிமை மென்பொருளிலிருந்து வேறுபடுகிறது, அதாவது தனியுரிமை மென்பொருளானது பொதுவாக அங்கீகரிக்கப்படாத நபர்களின் அணுகலைக் கட்டுப்படுத்துகிறது. இந்த திறமூல இயக்கமானது1998 இல் துவங்கியது, “திறமூலம்” எனும் சொல் எளிதாக மற்ற மேம்படுத்துநர்களுடன் கணினி நிரல் குறிமுறைவரிகளை… Read More »

இணைய வழி DevOps அறிமுகம் தொடர் வகுப்பு

வணக்கம், கணியம் அறக்கட்டளை சார்பாக இணைய வழியில் DevOps  அறிமுகம் தொடர் வகுப்பு நடத்த உள்ளோம். கால அளவு – 4 மாதங்கள்  ( வார நாட்கள் மட்டும். தேவையெனில் வார இறுதியிலும்.) நேரம் – தினமும் காலை 6.30 – 7.30 இந்திய நேரம் (IST) . இரவு 9.00 – 10.00 கிழக்கு நேர வலயம் (EST) நன்கொடை – ரூ. 15,000 வகுப்பு தொடங்கும் நாள் – ஜூலை 6 2023 பத்து… Read More »

எளிய தமிழில் 3D Printing 22. மூக்குக் கண்ணாடிகளும் அவற்றின் சட்டங்களும்

மூக்குக் கண்ணாடிகளை அவரவருக்குப் பொருந்துமாறு தனிப்பயனாக்கல் அவசியம் பேரளவு உற்பத்தி செலவைக் குறைக்கும், ஆனால் தனிப்பயனாக்குவது கடினம் மற்றும் அதிக செலவாகும். மூக்குக் கண்ணாடிகள் மற்றும் அவற்றின் சட்டங்கள் தயாரிக்கும் தொழில்துறையில் அனைத்து விதமான மற்றும் அளவிலான முக வடிவங்களின் தேவையையும் பூர்த்தி செய்ய வேண்டும். ஆகவே மூக்குக் கண்ணாடிகள் மற்றும் அவற்றின் சட்டங்களை ஒவ்வொருவருக்கும் ஏற்ற மாதிரி தனிப்பயனாக்க வேண்டும். 3D அச்சிடலின் வரம்பற்ற திறனின் மூலம் இத்துறை முற்றிலும் பயனடைகிறது. 3D அச்சிடலின் மூலம்… Read More »

Pipenv எனும் கட்டற்ற கட்டணமற்ற தொகுப்பு மேலாளர்

Pipenv என்பது ஒரு பைதான் மெய்நிகர் மேலாண்மை கருவியாகும், அதாவது Pipenv என்பது மென்பொருள்தொகுப்புகளின் உலகின் சிறந்தஅனைத்தையும் பைதான் உலகிற்கு கொண்டு வரும் ஒரு தொகுப்பு மேலாளராகும். இது மென்பொருள் தொகுப்புகளில் நமக்குத் தேவையான அனைத்தையும் பெற்றுள்ளது: bundler, composer, npm, cargo, yarnபோன்ற அனைத்தும் நல்ல வசதியான ஒரே தொகுப்பில் ஒன்றாக இருப்பதால் நம் எளிதாக மென்பொருள் தொடர்பான பணி செய்யும் சூழலை இது நமக்கு கிடைக்கச்செய்கின்றது. இதில் Pipenv ஆனது தானாகவே ஒரு virtualenv… Read More »

எளிய தமிழில் 3D Printing 21. உதிரி மற்றும் பதிலி பாகங்கள்

பல சந்தர்ப்பங்களில் பதிலி பாகம் (Replacement Part) மட்டும் தனியாகக் கிடைப்பதில்லை தயாரிப்புகள் அல்லது சாதனங்களின் பாகங்களை இழந்தாலோ அல்லது உடைந்தாலோ அதன் விளைவுகள் சிரமமானவை முதல் நாசம் விளைக்கும் வரை இருக்கலாம். எடுத்துக்காட்டாக காரின் பின் விளக்கை மூடியுள்ள நெகிழி பாகம் உடைந்துவிட்டால் அதை மட்டும் மாற்ற இயலாது. முழு பின் விளக்குத் தொகுப்பையே மாற்ற வேண்டுமென்று சொல்லி செலவு மிக அதிகமாகிவிடும். ஏனெனில் தயாரிப்பு நிறுவனம் அந்தப் பதிலி பாகத்தை மட்டும் தனியாக விற்பதில்லை,… Read More »

KanchiLUG வாராந்திர கலந்துரையாடல் – ஜூன் 25 , 2023 – மாலை 4-5

  அனைவருக்கும் வணக்கம், இந்த வாரம் KanchiLUG இல், ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 25 , 2023 16:00 – 17:00 IST அன்று ஆன்லைன் சந்திப்பாக வாராந்திர கலந்துரையாடலைத் திட்டமிட்டுள்ளோம். சந்திப்பு இணைப்பு: meet.jit.si/KanchiLugWeeklyDiscussion இந்த வாராந்திர கலந்துரையாடல் ஒரு புதிய முயற்சியாகும், இது லினக்ஸ் மற்றும் FOSS உலகில் நடக்கும் விஷயங்களைப் பற்றி மிகவும் நட்புரீதியான விவாதங்களை உருவாக்கத் தொடங்கியது. வாராந்திர கலந்துரையாடல் என்பது ஒரு திறந்த மற்றும் நட்புரீதியான கலந்துரையாடலாகும், இதில் லினக்ஸ்/FOSS தொழில்நுட்பங்கள்… Read More »

சிங்கப்பூர் விக்கிமேனியா ஒளிப்படப் போட்டி

வணக்கம், நடைபெறவுள்ள சிங்கப்பூர் விக்கிமேனியாவினையொட்டி ஒரு ஒளிப்படப் போட்டி 15 ஜுன் முதல் 15 ஜூலை வரை நடைபெறுகிறது. இதில் சிங்கப்பூரில் வசிப்பவர்கள் பங்கெடுக்கலாம். சிங்கப்பூரின் பாரம்பரியத்தைப் படைப்பாக்கப் பொதுமத்தில்(Creative Commons) ஆவணப்படுத்த சிறந்த களம். வாய்ப்பும் ஆர்வமும் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். commons.wikimedia.org/wiki/Commons:Wiki_Loves_Living_Heritage_in_Singapore — நீச்சல்காரன் neechalkaran.com