துருவங்கள் – அத்தியாயம் 0 – மின்னஞ்சல் முகவரியில்

முன்னுரை சுவாரஸ்யமாக சொல்வதற்கு அற்புதக் காதல் அல்ல, இருந்தாலும் சொல்லக்கூடிய ஒன்று. IT துறையில் இரு துருவங்களாக கருதப்படும் ஓப்பன் சோர்ஸ் விரும்பிகளுக்கும், ஓப்பன்சோர்ஸ்சை பற்றி தெரியாமல் பணிபுரிபவர்களுக்கு இடையே நடக்கும் சம்பவங்களே இக்கதை. ஓப்பன் சோர்ஸ் (Open Source) விரும்பிகள் ஆங்கிலத்தில் அவுட் லாஸ் (OutLaws) என்றழைக்கப்படுபவர்கள் போன்றவர்கள். எளிதில் கட்டுப்படுத்த முடியாது, இவர்களையும், இவர்கள் கற்பனை மற்றும் செயல்திறனையும். உலகம் போகும் போக்கில் செல்லாதவர்கள், அதேசமயம், அதன் போக்கை மாற்றி அமைக்க கூடியவர்கள். அறிவையும்… Read More »

மொசிலா காமன் வாய்ஸ் – கூட்டம் – 24-04-2022 (Mozilla Common Voice – Meet – 24-04-2022) | Tamil

கடந்த 24-04-2022 அன்று நடந்த மொசிலா காமன் வாய்ஸ் கூட்டத்தின் நிகழ்படம் இங்கே வழங்கப்பட்டுள்ளது. நிகழ்படத்தை வழங்கியவர்: முத்துராமலிங்கம் கிருஷ்னன், பயிலகம் இணைப்புகள்: commonvoice.mozilla.org/ குறிச்சொல்: #Mozilla #CommonVoice #Linux

ஜிம்ப் – நிழற்பட அடுக்கின் அளவை சரிசெய்தல் (Gimp – resize canvas) | Tamil

ஜிம்ப் பயன்படுத்தி எப்படி ஒரு நிழற்படத்தில் தேவையில்லாத பாகங்களை நீக்கிவிட்டு அதன் அளவை சரிசெய்வது என்பதை கற்போம் நிகழ்படம் வழங்கியவர்: தகவல் உழவன், விக்கிமூலம். இணைப்புகள்: www.gimp.org/ குறிச்சொற்கள்: #Gimp, #CanvasResize, #Linux

Mingw-w64 எனும் gccக்கான முழுமையான இயக்க நேர சூழல்

mingw-w64 செயல்திட்டம் என்பது விண்டோ 64-பிட் , 32-பிட் இயக்க முறைமைகளுக்கு சொந்தமான இருமநிரலிகளை ஆதரிக்க gccக்கான முழுமையான இயக்க நேர சூழலாகும். மேலும் இது அசல் mingw.org செயல்திட்டத்தின் முன்னேறிய பதிப்பாகும், இது விண்டோஇயக்கமுறைமை செயல்படுகின்ற கணினிகளில் GCC இயந்திரமொழி மாற்றியை ஆதரிப்பதற்காக உருவாக்கப்பட்டது. அதாவது 64 பிட்கள் , புதிய APIகளுக்கு ஆதரவை வழங்குவதற்காக 2007ஆம் ஆண்டில் இதை ஒரு கிளைசெயலாக ஆக்கப் பட்டது. அப்போதிருந்து, இது பரவலான பயன்பாட்டினையும் விநியோகத்தையும் பெற்றுவருகின்றது. ஒவ்வொரு… Read More »

மொசில்லா பொதுக்குரல் – அரைமணி நேர அறிமுகக் கூட்டம்

மொசில்லாவின் திறந்த மூல குரல்தரவுதள முன்னெடுப்பான Common Voice (voice.mozilla.org/ta) இப்போது தமிழில் தொடங்கப்பட்டுள்ளது. இது குரல் கண்டறிதல் தொழில்நுட்பங்களுக்குப் பயிற்சி அளிப்பதற்குத் தேவையான பெருமளவு குரல்மாதிரிகளைக் பொதுக்கள உரிமையில் (CC-0) வெளியிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. Common Voice தளத்திற்குச் சென்று சொற்றொடர்களைப் பேசி பதிவுசெய்வதின் மூலமும் பதிவு செய்யப்பட்டவற்றைச் சரிபார்ப்பதன் மூலமும் நீங்கள் பங்களிக்கலாம். இதைப் பற்றிய அரை மணி நேர அறிமுகக் கூட்டம் இணையவழி நடக்கவிருக்கிறது. நாள்: 24.04.2022 ஞாயிறு – காலை 8.30… Read More »

சென்னை சாசென் மகளிர் கல்லூரியில் விக்கிப்பயிலரங்கு – நிகழ்வுக் குறிப்புகள்

சென்னை திநகர் பேருந்து நிலையத்திற்கு அருகில் இருக்கும் ஸ்ரீ சங்கர்லால் சுந்தர்பாய் ஷசுன் ஜெயின் மகளிர் கல்லூரி (Shri SS Shasun Jain College)தமிழ்த்துறையினர சார்பாக,அக்கல்லூரியின்110 மாணவிகளுக்கு, இரு அணியாகப் பிரித்து, இரண்டு நாட்கள் அணிக்கு 55 கல்லூரி மாணவிகளுக்கு, விக்கிமீடியத்திட்டங்கள் அறிமுகமும், விக்கிமூலப் பயிலரங்கும் 04.04.2022 முதல் 05.04.2022 வரை இனிதே நடந்தது.   உடன் ஒத்துழைக்கும், அக்கல்லூரி பேராசிரியைகள்       இப்பயிலரங்குக்கு தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் இருந்து அருணும், மேலும், தமிழ்… Read More »

பைத்தான் படிக்கலாம் வாங்க – 17 – வென்றது வியனா? அப்பாவா?

மன்னரிடம் நெல்மணிகள் கேட்ட கதையில் வென்றது மோகனா? மன்னரா? கண்டுபிடித்து விட்டீர்களா? மோகன் தான் எனக் கண்டுபிடித்திருப்பீர்கள். முதல் சதுரத்திற்கு ஒரு நெல்மணி, இரண்டாவது சதுரத்திற்கு இரண்டு நெல்மணி, மூன்றாவது சதுரத்திற்கு நான்கு நெல்மணி என அறுபத்து நான்குக் கட்டங்களுக்கும் கண்டுபிடித்தால் மொத்தம் 18,446,744,073,709,551,615 நெல்மணிகள் தேவைப்படும். இந்த நெல்மணிகளை எடுத்து வைக்க மட்டுமே மன்னருக்கு சூரியனின் தொலைவு போன்று இரண்டு மடங்கு தேவைப்படும்.(நன்றி: செயல்வழிக் கணிதம், அரவிந்த் குப்தா) இதை எப்படி மன்னரால் கொடுக்க முடியும்?… Read More »

கர்ல் பயன்பாடு (Curl usage) | Tamil

இந்த நிகழ்படத்தில் கர்ல் கமாண்ட் பயன்படுத்தி எப்படி பல நிழற்படங்களை ஒரே சமயத்தில் இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம் என்பதை கற்போம். நிகழ்படத்தை வழங்கியவர்: தகவல் உழவன், விக்கிமூலம். Links: curl.se/ Tags: #Curl, #Linux

Rust எனும் நிரலாக்கமொழி ஒருஅறிமுகம் 

  Rust எனும் திறமூலநிரலாக்க மொழியானது நமக்கு நம்பகமான, திறமையான மென்பொருளை உருவாக்குவதற்கான அதிகாரம் அளிக்கின்ற ஒரு கட்டற்ற கணினிமொழியாகும். இது மிக விரைவாக இயங்குகின்ற திறனுடனும் நினைவகத்தை திறனுடன் கையாளும் தன்மையும் கொண்டது, எனவே இது செயல்திறனுடன் முக்கிய சேவைகளை ஆற்றவும்  உட்பொதிக்கப்பட்ட சாதனங்களில் செயல்படுவதற்காகவும் இது பயன்படுத்தி கொள்ளப்படுகின்றது. இது ஒரு உயர்ந்த(rich)வகை அமைப்பினையும் உரிமையாளர் மாதிரியைக் கொண்டுள்ளது, இது திரி, நினைவகம் ஆகியவற்றின் பாதுகாப்பை உறுதி செய்கிறது. ஒரு நிலையான நூலகம், சிறந்த… Read More »

NPTEL – MOOC | Tamil

இந்த நிகழ்படத்தில் NPTEL பற்றி தெரிந்து கொள்வோம். நிகழ்படத்தை வழங்கியவர்: மோகன் ரா, ILUGC Links: nptel.ac.in/ Tags: #NPTEL #MOOC #Linux