Pipenv என்பது ஒரு பைதான் மெய்நிகர் மேலாண்மை கருவியாகும், அதாவது Pipenv என்பது மென்பொருள்தொகுப்புகளின் உலகின் சிறந்தஅனைத்தையும் பைதான் உலகிற்கு கொண்டு வரும் ஒரு தொகுப்பு மேலாளராகும். இது மென்பொருள் தொகுப்புகளில் நமக்குத் தேவையான அனைத்தையும் பெற்றுள்ளது: bundler, composer, npm, cargo, yarnபோன்ற அனைத்தும் நல்ல வசதியான ஒரே தொகுப்பில் ஒன்றாக இருப்பதால் நம் எளிதாக மென்பொருள் தொடர்பான பணி செய்யும் சூழலை இது நமக்கு கிடைக்கச்செய்கின்றது.
இதில் Pipenv ஆனது தானாகவே ஒரு virtualenv ஐ உருவாக்கி நிர்வகிக்கிறது, மேலும் நாம் ஏதேனும் தொகுப்புகளை நிறுவுகைசெய்திடும்/நீக்கம் செய்திடும்போது Pipfile இல் இருந்து தேவையானவாறு தொகுப்புகளைச் சேர்க்கலாம் அல்லது அகற்றலாம். அதனோடு இது Pipfile.lock ஐயும் உருவாக்குகிறது, ஏனெனெல் இது(Pipfile.lock) உறுதியான கட்டமைப்பிற்கு அவசியமானது.
இந்தPipenv ஆனது நாம் எதிர்கொள்கின்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு வசதியான தீர்வுகளை வழங்குகிறது. இது pip , virtualenv ஆகியவற்றை ஒன்றாகப் பயன்படுத்த நம்மை அனுமதிக்கிறது; சிக்கலான தேவைகளில்.txtக்குப் பதிலாக வரவிருக்கும் Pipfile , Pipfile.lock ஆகியவற்றினை பயன்படுத்திகொள்க; இது பாதுகாப்பு குறைபாடுகளை தானாகவே வெளிப்படுத்துகிறது; இது .env எனும் கோப்பை பதிவேற்றம் செய்வதன் மூலம் நம்முடைய மேம்பாட்டு பணிப்பாய்வுகளை ஒழுங்குபடுத்துகிறது.
இதனுடைய முக்கிய வசதிவாய்ப்புகள்: நமக்குத் தேவையானதை மட்டும் என குறிப்பிடும் போது, உறுதியான உண்மையான உருவாக்கங்களை அனுமதிக்கிறது, பூட்டப்பட்ட சார்புகளுக்கான கோப்பு அசையாதகாட்சிகளை உருவாக்குகிறது சரிபார்க்கிறது, தேவையான பைதான்களை தானாக நிறுவுகைசெய்கிறது (pyenv இருந்தால்) நம்முடைய செயல்திட்டத்தினை தானாகவே கண்டுபிடிக்கின்றது, Pipfile இல்லை எனில், அதனை உருவாக்குகின்றது ஒரு நிலையான இடத்தில் தானாகவே ஒரு virtualenv ஐ உருவாக்குகிறது, அதனோடு ஒரு Pipfile இல் தொகுப்புகளை தானாக சேர்க்கிறது/அகற்றுகிறது, அவை நிறுவுகைசெய்யப்படும் போது, .env கோப்புகள் ஏதேனும் இருந்தால், தானாகவே அவற்றை பதிவேற்றம் செய்கின்றது.
இது பல்வேறு அமைப்புகளையும் ஆதரிக்கிறது. pip, python (கணினி python, pyenv அல்லது asdf ஐப் பயன்படுத்துதல்), virtualenv ஆகியவற்றுக்கு இடையே உள்ள இடைவெளிகளை நன்றாகக் குறைக்கிறது. Linux, macOS , Windows அனைத்து இயக்கமுறைமைகளிலும் pipenv ஆனது முதன்மை பயன்பாடு போன்று செயல்படுகின்றது.
Pipenv தானாகவே நம்முடைய செயல்திட்டங்களுக்கு ஒரு virtualenv ஐ உருவாக்கி நிர்வகிக்கிறது, அத்துடன் அவ்வாறான தொகுப்புகளை நிறுவுகைசெய்திடும்போது/நீக்கம்செய்திடும்போது Pipfile இலிருந்து தொகுப்புகளைச் சேர்க்கிறது/அகற்றுகிறது. இது Pipfile.lock ஒரு செயல் திட்டத்தையும் உருவாக்குகிறது, இது தீர்மானகரமான உருவாக்கங்களை உருவாக்க பயன்படுகிறது.
Pipenv முதன்மையாக பயனர்கள் , பயன்பாடுகளின் மேம்படுத்துநர்களின் ஒரு சீரான செயல்திட்ட சூழலை அடைய எளிதான வழிமுறையை வழங்குகின்றது.
Pipenv ஆனது தீர்க்க முயல்கின்ற பிரச்சனைகள் பலதரப்பட்டவைகளாகும்:
நாம் இனி pip, virtualenv ஆகியவற்றை தனித்தனியாகப் பயன்படுத்த வேண்டியதில்லை: அவை ஒன்றாக செயல்படுகின்றன.
நம்முடைய தேவைகளுக்காக .txt கோப்பை தொகுப்பின் அசையாத காட்சிகளுடன் நிர்வகிப்பது சிக்கலாக இருக்கலாம். இந்நிலையில் Pipenv கடைசியாக பரிசோதிக்கப்பட்ட கலவையிலிருந்து சுருக்க சார்பு அறிவிப்புகளை பிரிக்க Pipfile , Pipfile.lock ஆகியவற்றைப் பயன்படுத்திகொள்கிறது.
நிறுவுகைசெய்திடும்போது சரிபார்க்கப்பட்ட பூட்டுதலுக்கான கோப்பில் அசையாதகாட்சிகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு பரிசீலனைகள் முதலில் வைக்கப்படுகின்றன. காலாவதியான கூறுகளிலிருந்து எழும் பாதுகாப்பு அபாயங்களைக் குறைக்க சார்புகளின் சமீபத்திய பதிப்புகளைப் பயன்படுத்துவதை வலுவாக ஊக்குவிப்பவது மிகவும்நல்லது. சார்பானது வரைபடம் (எ.கா. $ pipenv வரைபடம்) பற்றிய நுண்ணறிவை நமக்கு வழங்குகிறது.
இது பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கட்டணமில்லாமல் கட்டற்றதாக MIT எனும் உரிமத்தின்கீழ் கிடைக்கின்றது மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் github.com/pypa/pipenv எனும் இணையதள முகவரிக்கு செல்க.