கட்டற்ற ஆய்வு மேற்கொள்ள 5 ஒழுங்கு முறைகள்

 

UNICEF-ல் உள்ள சிலர், Mel-லிடம், கட்டற்ற ஆய்வு எவ்வாறு மேற்கொள்ள வேண்டும், என்பது பற்றி விரிவாக ஒரு கட்டுரை எழுதுமாறு கேட்டுக் கொண்டனர். அவர், அவர்களுக்கு அளித்த பதில் பின்வருமாறு.

ஒரு ஆய்வாளர், கட்டற்ற ஆய்வு மேற்கொள்ள சில அடிப்படை காரியங்கள் உள்ளன. அவற்றுள் சில பின்வருமாறு.

1.Radical(Real time transparency) உண்மை நிலை தெளிவு:

நம் அனைத்து வேலைபாடுகளையும், அது இயற்றப்பட்ட உடன், திருத்தப்படக் கூடிய வடிவில் creative common license ஆக வெளியிட வேண்டும். நான் அவற்றை சற்று விரைவாக குறிப்பிடுகிறேன்

1.அ) அனைத்து வேலைபாடுகளையும் வெளியிடுக:

இது முழுமையாக முடிக்கப்பட்டு, மெருகேற்றப்பட்ட program-களை மட்டும் குறிப்பிடுவது அல்ல. ஆய்வில் ஈடுபடும் போது நாம் செய்த சிறு கிறுக்கல்கள், குறிப்புகள் உள்ளிட்ட அனைத்தையும் சேர்த்தே உரைப்பதாகும். இவற்றை வெளியிடும் போது, “இவை ஆய்வில் பின்பற்றப்பட்ட வழிமுறைகள்” என மேலே தெரியப்படுத்தலாம். இந்த சிறு குறிப்புகளை வெளியிடும் போது, பிறருக்கு தெரிவிக்க வேண்டுயது இல்லை. ஆனால், இச்சிறு குறிப்புகள், உங்கள் படைப்பை மற்றவர் ஆழ்ந்து அறிந்து கொள்ள உதவும்.

1.ஆ) திருத்தத்தக்க வடிவு:

PDF-கள் வேண்டாம். விக்கி பக்கங்கள், version control-ளுடன் கூடிய plain text, word கோப்புகள் முதலியவை சற்றே ஏற்கத்தக்கவை. ஆனால், பிறர் நம் படைப்புகள் திருத்துவதற்கு மட்டுமல்லாது, திருத்தப்பட்ட திருத்தங்களிலும் திருத்தம் செய்ய ஏதுவாக இருந்தால் சிறப்பாய் இருக்கும்.

1.இ) Creative-Commons உரிமம்:

இறுதித் தாளில் பயன்படுத்திய உரிமத்தையே மீண்டும் பயன்படுத்தவும். UNICEF குழுவினரே, சிறந்ததான CC-BY-SA உரிமத்தை தேர்ந்தெடுங்கள். நம் முக்கிய நோக்கம் வியாபாரத்தன்மை அற்றதையும், ‘no derivetives’-ஐயும் புறந்தள்ளுவதே ஆகும். இவை non-open-creative உரிமங்களின் வேறு வடிவங்களாகும். அனைத்திற்கும் remixability பயன்படுத்துவது தீங்கானது.

1.ஈ) இயற்றப்பட்ட உடனே:

ஒரு வேலை முடிந்தவுடன், அதை வெளியிட்டாக வேண்டும். பிறகு முடிவு பெற்ற தாளுடன் சேர்த்து வெளியிடலாம் என்பதெல்லாம் வேலைக்கு ஆகாது. பிறர் உங்களுக்கு ஆய்வில் உதவ வேண்டும் என நீங்கள் கருதினால், உங்கள் தற்போதைய நிலை என்ன என்பதில் நீங்கள் தெளிவாய் இருக்க வேண்டும்.

 

2. உங்கள் ஆய்வு எளிதில் கண்டுகொள்ளப்படும் படியாக இருக்க வேண்டும்:

உங்கள் படைப்புகளை மக்கள் எளிதில் கண்டு, ஒன்று அல்லது அதற்கு குறைவான நிமிடங்களில் வாசிக்கும்படி நடுநிலையான இடம் ஒன்று தேவை. அப்போது தான் நீங்கள் ஆய்வில் உருவாக்கிய படைப்புகளை அவர்கள் காண ஏதுவாக இருக்கும். ஒரு குறிப்பிட்ட வடிவை பின்பற்றுவதை காட்டிலும், தெளிவான வடிவை பின்பற்றி, படைப்பை துவங்குவது தான் சிறந்தது. அப்படி ஒரு வடிவை தேர்வு செய்து அதை பின்பற்றி வாருங்கள்.

3. பங்கேற்புக்கு சிறு தெடைகளே நன்று:

முடிந்தவரை, login மற்றும் உறுப்பினர் ஆக்க பரிந்துரைக்கும் வாய்ப்புகளை வழங்காதீர்கள். அப்படி ஏதேனும் இடங்களில் authentication தேவைப்பட்டால், மக்கள் பொதுவாக பயன்படுத்துவதாக் நீங்கள் நினக்கும் வலைத்தளங்களின் account-ஐ collaborate செய்து கொள்ளுங்கள்.(facebook? twitter/identi.ca? wikipedia? github?) அது போலவே மக்களுக்கு பழக்கப்பட்ட தளம் எதுவென தேர்ந்து கொள்ளுங்கள் (version control? word processing? english?) பிறர் எளிதாக உங்கள் ஆய்வில் பங்கு பெற, சில கிளிக்குகளில் அதற்கு வழி செய்யுங்கள்.

 

4. சீரான இடைவெளியில் மேம்படுத்தவும்:

பொதுவாக வாரம் ஒரு முறை மேம்படுத்துதல் நன்று. எனினும் சில ஆய்வுகளுக்கு இது மாறுபடலாம். குறிப்பாக சொல்ல வேண்டுமானால், ஒரு ஆய்வின் முடிவிற்குள் ஏற குறைய ஐந்து முறை மேம்படுத்த வேண்டும். அப்படியெனில், இரண்டு மாத கால ஆய்விற்கு, வாரம் ஒரு முறையும், இருவார ஆய்விற்கு தினசரியும், ஒரு நாள் ஆய்விற்கு, ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையும், ஓர் ஆண்டு நீண்ட ஆய்விற்கு இரண்டு மாதத்திற்கு ஒரு முறையும் மேம்பாடுகள் செய்யலாம்.(எனினும் வாராவாரம் மேம்பாடுகள் செய்யப்பட்டால், அது பலரது பங்களிப்பை ஈர்க்கும்) இவற்றில் ஒன்றை தேர்வு செய்து, அதை சரியாக பின்பற்றி வாருங்கள். இந்த வழிமுறையை உங்கள் பங்களிப்பின் முகப்பு பக்கத்தில் தெளிவாய் சொல்லி விடுங்கள். அது அடுத்த மேம்பட்ட ஆய்வு என்று வெளியாகும் என பிறருக்கு உரைத்துவிடும்.

5. மக்களை உங்கள் அருகில் வரச்செய்ய, நீங்கள் அவர்கள் அருகில் செல்லுங்கள்:

மின்னஞ்சல், tweet, வலைப்பூ, போன்றவற்றின் மூலமும், வணிக வளாகங்கள், உணவகங்கள் போன்ற இடங்களில் மக்களை சந்தித்து, அவர்கள் உங்களிடம் வர பழகும் வரை கலந்துரையாடுங்கள். தனி உரையாடல்கள் மிக முக்கியமானவை. ஆனால் அவை இறுதிக் கட்டங்களில் தான் தேவைப்படும். இது புதிதாக ஒரு பொது இடத்தை, கலந்துரையாடலுக்காக தேர்வு செய்வதைப் போன்றது. பிறர் உங்கள் இடத்திற்கு வரவேண்டும் என நீங்கள் விழைவதால், அவர்கள் இடத்திற்கு நீங்கள் சென்று கலந்துரையாடல் செய்து, அவர்களை உங்கள் இடத்திற்கு வர வழி செய்கிறீர்கள்.

 

~ஜோபின் பிராஞ்சல் ஆன்றனி

%d bloggers like this: