Pravஎனும் XMPP நெறிமுறையில் செயல்படுகின்ற செய்தியிடல் பயன்பாடு

Prav என்பது XMPP நெறிமுறையில் செயல்படுகின்ற ஒரு செய்தியிடல் பயன்பாடாகும். இதன்மூலம் பயனர்கள் மற்ற XMPP பயனர்களுடன் எளிதாக தொடர்பு கொள்ளலாம். அவ்வாறான மற்ற பயனர்களுடன் தொடர்புகொண்டு செய்தி அனுப்புதல், கோப்புகளை பகிர்ந்துகொள்ளுதல், குரல்வழி செய்திகள், இசை, கானொளிகாட்சி அழைப்புகளுக்கான ஆதரவை Prav எனும்பயன்பாடானது கொண்டுள்ளது.
எளிதாக உள்ளிடுதல்
நம்முடைய செல்பேசி எண்ணை உள்ளிட்டு, குறுஞ்செய்தியின்SMS மூலம் நாம் பெற்ற OTPயை உள்ளிடுவது போன்று, இந்த இணையதளபயன்பாட்டில் பதிவு செய்வது எளிது. எனவே நாம் எளிதாக நம்முடைய நண்பர்களையும் குடும்பத்தினரையும் இந்த பயன்பாட்டிற்குள் அழைத்து இணைத்திடலாம். XMPP அடிப்படை யிலான செய்தியிடல் பயன்பாடான Quicksy எனும் பயன்பாட்டிலிருந்து அதற்கான கருத்தமைவுகளைமட்டும் எடுத்து கொண்டு இது செயல்படுகின்றது மேலும் பொதுவாக இதுபோன்ற பயன்பாடுகளின் விற்பனையாளர்கள் கோருகின்றவாறு குறிப்பிட்ட பயன்பாட்டிற்குள் பதிவுசெய்து உள்நுழைவு செய்திடாமல் செல்பேசி எண்ணைமட்டுமேப் பயன்படுத்தி நாம் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறான வசதியை இது வழங்குகிறது.
பெரும்பாலான XMPP பயன்பாடுகளில் முதலில் நாம் விரும்பும் ஒரு சேவையகத்தைத் தேர்வுசெய்ய வேண்டும் பிறகு நமக்காகவென ஒரு பயனர்பெயர் கடவுச் சொல்லைத் தேர்வுசெய்து (அனைத்தையும் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்), பின்னர் நாம் அரட்டையடிக்கத் துவங்கிடும் முன்பு ஒவ்வொரு தொடர்பையும் கைமுறையாகச் சேர்த்தபின்னர் அவர்களுடன் அரட்டையடிக்கை துவங்கவேண்டியநிலைஉள்ளது. இந்த Prav எனும் செய்தியிடல் பயன்பாடானது அவைகளின் செயல்பாடுகளிலிருந்து வேறுபடுகின்றது,
சுதந்திரமான பயன்பாடு இந்த மென்பொருளை நாம் விரும்பியவாறு மாற்றியமைத்தபின்னர் அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட பதிப்புகளை இயக்க, படிக்க, மேலும் மாற்றியமைத்திட, நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள இதில் பயனர்களுக்கு முழுசுதந்திரம் உள்ளது.
பயன்பாட்டின் விற்பனையாளர் கோரியவாறு உள்நுழைவு செய்திடத் தேவையில்லை: மிகவும் பிரபலமான செய்தியிடல் பயன்பாடுகளை பயன்படுத்திட வேண்டுமெனில், பயனாளர்கள் குறிப்பிட்டதொரு பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்து நிறுவுகைசெய்திவேண்டும், அதே சேவையில் நமக்காகவென ஒரு பயனர்பெயர் கடவுச் சொல் ஆகியவற்றுடன் கணக்கு ஒன்றினை துவங்கி பராமரித்திட வேண்டும் நாம் தொடர்புகொள்ளவிரும்புவோரும் இதேசேவையில் நம்மைபோன்றுகணக்கு ஒன்றினை வைத்திருக்கவேண்டும். அதற்கு பதிலாக இந்த Prav எனும் பயன்பாடானது பிற XMPP சேவைகளுடன் எளிதாக இணைந்து இயங்கக்கூடியது, அதாவது நாம் தற்போது நாம் வெவ்வேறு மின்னஞ்சல் சேவையாளர்களுடன் நம்முடைய மின்னஞ்சல்களை பகிர்ந்து கொள்வதை போன்றே வெவ்வேறு XMPP சேவைவழங்குநர்களிடம் கணக்குவைத்துள்ள நம்முடைய தொடர்பாளர்களுடன் எளிதாக தகவல்களை அனைத்து வழிமுறைகளிலும் பரிமாறிக்கொள்ளலாம் அதனோடு தொலைத்தொடர்புசேவை வழங்குநர்களை மாற்றிகொள்ளலாம். எடுத்துக்காட்டாக, குறிப்பிட்டநிறுவனத்தின் இயங்கக்கூடிய சிம் கார்டுகளை மாற்றுதல். நாம் ஏர்டெல்லில் இருந்து வோடஃபோனுக்கு மாறினால், நம்முடைய தொடர்புகளுடன் தொடர்ந்து அழைப்புகளைச் செய்ய முடியும். வாட்ஸ்அப், டெலிகிராம், சிக்னல் போன்ற பிரபலமான பயன்பாடுகளில் இதே போன்ற செயல்களுக்கான வாய்ப்பில்லை என்பதை நினைவில் கொள்க. அதாவது அவைகளில் நாம் அந்த பயன்பாட்டின் நிறுவுகையை நீக்கினால், எல்லா தொடர்புகளையும் இழந்துவிடுவோம்.
தனியுரிமை சுதந்திரத்தில் கவனம் செலுத்தும் அனைவருக்கும் இது பயனர் நட்புடன்கூடியதொரு செய்தியாளர் ஆகும்.
நண்பர்கள் , குடும்பத்தினருக்கு குறுஞ்செய்தி அனுப்ப விரும்பினாலும் அல்லது அழைப்புகளைச் செய்ய விரும்பினாலும், இந்த பயன்பாடு நமக்கு எளிதாக்குகிறது. இது வசதியான தன்னமைவு(onboarding) , பயனர் நட்புடனான இடைமுகத்தை வழங்குகிறது.
தனியுரிமை ஒரு அடிப்படை உரிமை என்றும், எவராலும் எளிதாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் இந்தபயன்பாடானது பரிந்துரைக்கின்றது.
இந்த பயன்பாட்டின் மூலம், நம்முடைய அரட்டைகள் தனிப்பட்டவை, நாம் மட்டுமே அவற்றைப் படிக்க முடியும். இது XMPP நெறிமுறையை அடிப்படையாகக் கொண்டது, எனவே பயனர்கள் உலகெங்கிலும் உள்ள வேறு எந்த XMPP பயனர்களுடனும் குறிப்பிட்டதொரு சேவைக்குள் உள்நுழைவு செய்திடாமல் எளிதாக தொடர்புகொள்ளலாம்.
விற்பனையாளர் உள்நுழைவுசெய்தால் (vendor lock-in) என்றால் என்ன?
சமூகஊடகவசதியான (WhatsApp, Telegram, Signal போன்றவை) மிகவும் பொதுவான செய்தியிடல் பயன்பாடுகளானவை, குறிப்பிட்டஅந்த பயன்பாட்டைப் பயன்படுத்தும் நபர்களுடன் மட்டுமே தொடர்புகொள்ள நம்மை அனுமதிக்கின்றன, இவை பயனர்களின் விருப்பத்தை மட்டுப்படுத்துகின்றன. இதுவே விற்பனையாளர் உள்நுழைவுசெய்தல் என அழைக்கப்படுகிறது.
இந்த பயன்பாடானது விற்பனையாளர் உள்நுழைவுசெய்தலை எவ்வாறு தவிர்க்கிறது?
Quicksy பயனர்கள், XMPP நெறிமுறையை ஆதரிக்கின்ற பிற பயன்பாடுகளின் பயனர்கள், செய்தி அனுப்புவதற்கான செந்தரநிலையை பின்பற்றுவதால் , இது (Prav) எந்தவொரு XMPP சேவையின் பயனர்களுடன் எளிதாகதொடர்புகொள்வதற்கு நம்மை அனுமதிக்கிறது.
பயன்பாட்டை எங்கு பதிவிறக்கம் செய்யலாம்?
தனிப்பட்ட பீட்டா பயன்பாட்டை முயற்சிக்க விரும்பினால், prav.app/ எனும் இணையதளமுகவரியிலுள்ள இதன்படிவத்தை நிரப்பிடுக. விரைவில் பொதுமக்கள் பயன்படுத்தி கொள்வதற்கான பதிப்பை வெளியிட திட்டமிடபட்டுள்ளது.
தற்போது பல்வேறு செய்தியாளர் பயன்பாடுகள் பயன்பாட்டில் உள்ளநிலையில் ஏன் ,Prav போன்ற மற்றொன்று தேவை?
இந்த Prav எனும் பயன்பாட்டினை தனித்துவமாக்குவதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. வாட்ஸ்அப் போன்ற பிரபலமான செய்தியாளர் பயன்பாடுகள் தனியுரிமை மென்பொருளாகும், இது மேம்படுத்தநரால் கட்டுப்படுத்தப்படுகிறது பெரும்பாலும் தனியுரிமை மென்பொருட்கள் நச்சுநிரல்களை உருவாக்குகிறது, பின்னர் இது பயனர்களைக் கண்காணிக்கப் பயன்படுகிறது. ஆனால் இந்த Prav எனும் பயன்பாட்டில் மென்பொருளின் கட்டுப்பாட்டை பயனர்களுக்கு வழங்கபடுகின்றது. எனவே, Prav எனும் பயன்பாடானது இலவச/சுதந்திர மென்பொருளாக வெளியிடப்படுகின்றது, இது பயனர்களுக்கு சுதந்திரத்தையும் மென்பொருளின் மீதான கட்டுப்பாட்டையும் வழங்குகிறது. இங்கு ‘இலவசம்’ என்பது ‘சுதந்திரத்தை’ குறிக்கிறது, விலை அன்று. பயன்பாட்டின் மூலக் குறிமுறைவரிகளை வழங்குவது வெளிப்படைத்தன்மையின் கலாச்சாரத்தை ஊக்குவிக்கிறது, மேலும் குறிமுறைவரிகளை சுதந்திரமாக தணிக்கை செய்யலாம். மறுபுறம், தனியுரிமை மென்பொருள் மீதான எந்த நம்பிக்கையும் ஒரு குருட்டுத்தனமான நம்பிக்கையாகும்.
மையப்படுத்துதல்: பொதுவாக இவ்வாறான அனைத்து சேவையாளர்களிலும் மையப்படுத்துதல் என்பது மற்றொரு முக்கிய பிரச்சனையாகும் வாட்ஸ்அப், டெலிகிராம் , சிக்னல் ஆகிய அனைத்தும் மையப்படுத்தப்பட்ட சேவைகளை கொண்டவை. அவை ஒரு குறிப்பிட்டதொரு நிறுவனத்தால் கட்டுப்படுத்தப்படு கின்றன. குறிப்பிட்டதொரு நிறுவனத்தை மட்டுமே நம்பியிருக்கவேண்டும் எனும் நிலையிலுள்ளஇவற்றில். நாம் நம்முடைய முழு உலகத்தின் தகவல்தொடர்புகள் நிலையானது சரியானது என்று நாம் நினைப்பது தவறான நம்மிக்கையாகும். முகநூல் செயலிழப்பு இதை நினைவூட்டுகிறது. மின்னஞ்சல் சேவைகள் , தொலைநிலைதந்தி இயக்குநர்களைப் போன்றே பயனர்களுக்கு சேவை வழங்குநர்களின் தேர்வுகள் அதிகமாக இருப்பதால், மேலும் மேலும் உடனடி செய்தியாளர் சேவைகள் (சேவையின் பயனர் A சேவையின் பயனருடன் பேசலாம்) ஒன்றுடன் ஒன்று இயங்கக்கூடியது என்று கருதப்படுகின்றது. இது பயனர்கள் பயன்படுத்தும் செய்தியிடல் மென்பொருள் , சேவைகளின் மீது உண்மையான கட்டுப்பாட்டை வழங்குகின்றது.
Quicksy , Snikket ஆகியவற்றின் நல்ல கருத்தமைவுகளை இந்த Pravஎனும் பயன்பாடானது ஒருங்கிணைக்கிறது. Quicksy ஆனது Android க்கு மட்டுமே கிடைக்கும், Snikket மேசைக்கணினிஇயங்குதளங்களில் உள்ள பயனர்களை மையமாகக் கொண்டுள்ளது, ஆனால் இது சுயமான-புரவலராக செய்யக்கூடிய வரையறுக்கப்பட்ட நபர்களை இலக்காகக் கொண்டுள்ளது. பெரும்பாலான செயல்திட்டங்களுக்கு, முக்கிய மேம்படுத்துநர்கள் எந்த இயல்புநிலைகளை செயல்படுத்த வேண்டும் என்பதை தீர்மானிக்கின்றனர். இந்த Prav எனும் பயன்பாட்டில், சமூககுழுவின் எந்தவொரு இயல்புநிலைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை முடிவு செய்து அதை செயல்படுத்த மேம்படுத்துநர்களுக்கு நிதியளிக்கிறது. Prav என்பது மாற்றியமைப்பதற்கான உரிமையை மக்கள்மையப்படுத்துவதற்கான ஒரு பரிசோதனையாகும். தற்போது இது பெரும்பாலும் தனிப்பட்ட மேம்படுத்துநர்கள் அல்லது மேம்படுத்துநர்களின் தொகுப்பாகப் பயன்படுத்தப்படுகிறது.இதில் பயனர்களை மிக முக்கியமான பாத்திரத்தில் ஈடுபடுத்தப்படுகின்றது. பெரிய நிறுவனங்கள் ஏற்கனவே மாற்றியமைக்க இந்த உரிமையைப் பயன்படுத்துகின்றன ஆனால் பல்வேறு செயல்திட்டங்கள் மேம்படுத்துநர்கள் அல்லாதவர்களுக்கு இந்த அதிகாரத்தை வழங்கப்படுவதில்லை. xmpp க்குள், பெரும்பாலான செயல்திட்டங்கள் மேம்படுத்துநர்களால் இயக்கப்படுகின்றன, ஆனால் Prav ஆனது பயனர்களால் இயக்கப்படுகிறது.
ஒன்றிணைந்து இயங்குதன்மை என்றால் என்ன?
அ என்பவருக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு வேடிக்கையான மீம் அனுப்பப்பட்டது. அவர் அதை ஆஎன்பவருக்கு அனுப்ப விரும்புகிறார். ஆனால் ஆஎன்பவருக்கு இன்ஸ்டாகிராம் கணக்கு இல்லை, இருப்பினும் அவருக்கு வாட்ஸ்அப் கணக்கு உள்ளது. அந்த மீம்ஸை அஎன்பவர் தனது செல்பேசியில் பதிவிறக்கம் செய்தபின்னர் வாட்ஸ்அப்பில் ஆஎன்பவருக்கு அனுப்பினார். வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகிய இரண்டு பயன்பாடுகளும் ஒன்றோடொன்று இணைந்து இயங்கக்கூடியதாக இருந்தால், அதை இன்ஸ்டாகிராமிலிருந்து நேரடியாக அவர்களுக்கு அனுப்பியிருக்கலாம் அல்லவா. அதனால் இதற்காக, இப்போது அ என்பவர் இரண்டு பயன்பாடுகளைப் பயன்படுத்த வேண்டியுள்ளது, மேலும் அவரது தொடர்புகளின் பன்முகத்தன்மையைப் பொறுத்து, அவற்றில் சிலவற்றை அவர் விரும்பாவிட்டாலும், அந்தப் பயன்பாடுகளைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இந்நிலையல் XMPP நெறிமுறையை ஆதரிக்கின்ற பிற பயன்பாடுகளுடன் செய்திகளை பரிமாறிகொள்வதையே ஒன்றிணைந்து இயங்குதன்மை ஆகும்

இது ஒரு கட்டற்ற கட்டணமற்ற இணையத்தின்மூலம் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய செய்தியிடல் பயன்பாடுஆகும் மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம்செய்து பயன்படுத்தி கொள்ளவும்https://prav.app/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க,

 

%d bloggers like this: