பைத்தானும் டிஜாங்கோவும் இணைத்து உருவான இணையபயன்பாடு

புதியவர்கள்கூட விண்டோவில் இயங்கும் இணையப் பயன்பாடுகளை பைத்தானும் டிஜாங்கோவும் இணைந்தசூழலில் எளிதாக உருவாக்கமுடியும்.

இங்கு டிஜாங்கோஎன்பது பைத்தான் மொழியால் உருவாக்கபட்ட தொரு கட்டற்ற இணையப்பயன்பாடுகளின்வரைச்சட்டமொழியாகும் இந்த இணைய பயன்பாடுகளின் வரைச்சட்டமொழியாது மாதிரி காட்சிகளைக் கட்டுபடுத்தும் கட்டமைவை பின்பற்றுகின்றது. அதாவது இங்குக் காட்சி என்பது வரைகலை கட்டமைவை பயன்படுத்தவதைபோன்று பயனாளர் ஒருவர் தான் திரையில் காணும் காட்சியை இடைமுகம்செய்து பயன்படுத்திக் கொள்வதாகும்.. பொதுவாக புதிய பயன்பாடுகளை உருவாக்குவதற்கு அடிப்படையாக IDE சூழல் தேவையாகும். இங்கு Eclips என்பது அதற்காகப் பயன் படுத்தி கொள்ளப்படுகின்றது. இதனை www.eclips.org/downloads/ எனும் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்க. அதற்கடுத்ததாகப் பைத்தான் எனும் மொழியின் 2.7.x பதிப்பாகும்.இதனை www.python.org/downloads/ எனும் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்க. நாம் விரும்பும் இந்தப் பயன்பாட்டினை உருவாக்குவதற்காகப் பைத்தான் எனும் மொழி மட்டும் போதாது அதனடுகூடவே மூன்றவாதாகப் பைத்தானைமேம்படுத்தும் சூழலைவழங்கும் PyDev என்பது தேவையாகும். இதனை pydev.org/download.html/ எனும் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்க. இறுதியாக மிகமுக்கியமாக Django என்பது தேவையாகும். இதனை djangoproject.com/downlaod/ எனும் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்க.

இந்தப் பயன்பாட்டினை உருவாக்குவதற்கான படிமுறைகள் பின்வருமாறு:

படிமுறை1: முதலில் நம்முடைய கணினியில் Eclips IDE சூழலை நிறுவுகை செய்திடுக.

படிமுறை2: அதற்கடுத்ததாக நம்முடைய கணினியில் உள்ளவிண்டோவின் 32பிட் அல்லது 64பிட் பதிப்பிற்கு ஏற்றவாறு பைத்தான் எனும் மொழியின் சரியான பொருத்தமான பதிப்பினை நிறுவுகை செய்திடுக.

படிமுறை3: PyDev என்பதை Eclips என்பதில் நம்முடைய கணினியில் இணைய இணைப்பு இருக்கும் நிலையில் Eclips=>Help=>Installnewsoftwar=>AddNew=> என்ற கட்டளையின் வாயிலாகக் கட்டமைவு செய்திட்டு nextஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. இதற்காக www.pydev.org/updates/ என்ற இணைய ப் பக்கத்தை பயன்படுத்திகொள்க பின்னர்திரையில் கூறும் கட்டளைகளை பின்பற்றிடுக .

படிமுறை4:PyDev என்பதை Eclips IDEசூழலில் இணைய இணைப்பு இல்லாமல் விண்டோ இயக்கமுறைமை கணினியில் கட்டமைவு செய்திடவேண்டும். அதற்காக விண்டோவிற்கான PyDev என்பதின் சுருக்கிகட்டப்பட்ட கோப்புகளின் கட்டினை பழைய பதிப்பெனில் eclipse/dropin/ எனும் கோப்பகத்தில் அல்லது புதிய பதிப்பெனில் eclipse/plugin/ எனும் கோப்பகத்தில் பிரித்து வெளியிலெடுத்து வரிசையாக அடுக்கிடுக. பிறகு இந்த eclipse என்பதை மீண்டும் இயங்கசெய்திடுக

படிமுறை5:பிறகு இந்தப் பைத்தான் மொழிகோப்புகளை eclipse என்பதில் கட்டமைவு செய்திடவேண்டும் அதற்காக நாம் பைத்தானை நிறுவிய கோப்பகத்தில் Eclipse=>Windows=>prefernces=>Pydev=>Interpreter=>Python=>Addnew=> என்றவாறு கட்டளைகளைச் செயற்படுத்திடுக.

படிமுறை6: அதற்கடுத்ததாக டிஜாங்கோவையும் பைத்தானையும் சேர்த்து எக்லிப்ஸில் கட்டமைவு செய்திடவேண்டும் அதற்காக விண்டோவிற்கான .tar எனும் கோப்பினை நம்முடைய கோப்பகத்தில் பிரித்து வெளியிலெடுத்து வரிசையாக அடுக்கிடுக. பின்னர்ப் பைத்தான் வைத்திருக்கும் கோப்பகத்திற்குச் சென்று c:\<python dir>\python.exe C:\<django dir>\setup.py install எனும் கட்டளை வரியை செயல் படுத்திடுக. உடன் இந்தக் கட்டளையாது தானியங்கியாக டிஜாங்கோவை எக்லிப்ஸில் கட்டமைவு செய்துவிடுகின்றது. இப்போது இந்தடிஜாங்கோவையும் பைத்தானையும் சேர்த்து எக்லிப்ஸ் சூழலில் புதிய இணையப் பயன்பாடு ஒன்றினை உருவாக்க தயாராகிவிட்டோம் .

இங்கு PostgreSQL, SQLite3,MYSQL,Oracleஆகிய தரவுதளபொறிகளுடன் அல்லது தரவுதளபொறிஎதுவுமில்லாமலும் இந்த டிஜாங்கோவையும் பைத்தானையும் சேர்த்து எக்லிப்ஸ் சூழலில் புதிய இணையப் பயன்பாடு ஒன்றினை உருவாக்கமுடியும் என்ற செய்தியையும்மனதில் கொள்க.

நமக்கு நிரல்தொடர் உருவாக்குவதைப் பற்றிய விவரம் எதுவும் தெரியாது இருந்தாலும் மேலே கூறிய படிமுறைகளைப் பின்பற்றியபின் நாம் பின்வருமாறு புதிய இணையப் பயன்பாடு ஒன்றினை உருவாக்கிடமுடியும்.

முதலில் Eclipse=>Newproject=>PyDevDjango=> எனும் கட்டளைவரிவாயிலாகக் புதிய பயன்பாட்டினை உருவாக்கிடுக. பின்னர் மூலக்கோப்பகத்தை இடம்சுட்டியால் தெரிவுசெய்துகொண்டு சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் விரியும் சூழ்நிலை பட்டியில் Rootfolder=> Django=> createnewapplication=> என்றவாறு கட்டளைகளைச் செயற்படுத்திடுக.

நம்முடைய வழக்கமான முதல் நிரல்தொடரான வருக!வருக!வணக்கம்.” என்பதை உருவாக்குவதாக கொள்வோம். இதற்காகவருக! வருக! வணக்கம்! இதற்கான இணையமுவரி (URL) (www.example.com/hello.html,)ஆகிய இரண்டு அடிப்படைகளையும் தேவையென்பதை கவணத்தில் கொள்க. ஆனால் இவைகளை மிகவித்தியாசமான வழிமுறையில் திரையில் பிரதிபலிக்கச்செய்யவிருக்கின்றோம்.

from
django.http import HttpResponse
def
வருக
வருக (request):
    return
HttpResponse("வருக!
வருக!
வணக்கம்!")

என்றவாறு நிரல் தொடர் குறிமுறை வரிகளை உள்ளீடுசெய்து views.pyஎன்ற பெயருடைய கோப்பாகச் சேமித்துகொள்க. ந்நிரல் தொடரின் முதல்வரியில் HttpResponseஎன்பதன் இனமானது django.httpmoduleஎன்பதில் உள்ளது அதனால் அதிலிருந்து இந்தக் கட்டளைவரியானதுபதிவிறக்கம் செய்து கொள்ளசெய்கின்றது அதற்கடுத்தஇரண்டாவது வரியில் வருக! வருக! எனும் காட்சியாக செயலியை வரையறுக்கவேண்டும் அதற்காக ஒரு கோரிக்கையை வைக்க(request) வேண்டும். ந்த கோரிக்கையானது lassdjango.http.HttpRequest என்பதற்குள் உள்ளது.

அவ்வாறு நாம் கோரியவுடன் மூன்றாவது வரியின் கட்டளையானது அதனைத் திரையில் HttpRequesஎன்பதலிருந்து பதில்செயலாக வருக! வருக! வணக்கம்.எனத் திரையில் வந்து return எனும் கட்டளை வாயிலாகப் பிரதிபலிக்கச் செய்கின்றது .

மேலும்,விவரங்களுக்கும் முழுவதுமாக இந்த டிஜாங்கோவை பற்றி அறிந்துகொள்ளவும் www.djangobook.com/en/2.0/index.html எனும் இணையதளத்திற்குச் செல்க.

 – ச.குப்பன் (kuppansarkarai641@gmail.com)

About Author

ஓஜஸ்
உங்களுள் ஒருவன். உங்களைப் போல் ஒருவன்!!! http://bit.ly/ojas9 | http://bit.ly/isaai

%d bloggers like this: