பைத்தான் கற்பதற்கு பல்வேறு மாணவர்களும் மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர்களும் ஆர்வமாக காத்துக் கொண்டிருப்பீர்கள். பல்வேறு இணைய வாய்ப்புகளின் மூலமாகவும், பயிற்சி நிறுவனங்களின் மூலமாகவும் கற்றுக் கொள்ள முடிந்தாலும் தெளிவாக புரிந்து கொள்வதில் சிரமங்கள் நீடிக்கும்.
மேலும், பொருளாதார சூழல்களால் சரியாக வாய்ப்பு அமையாமல் கற்றுக்கொள்ள முடியாது போனவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். தற்கால செயற்கை நுண்ணறிவு யுகத்தில் பைத்தான் போன்ற கணினி மொழிகளை கற்பது இன்றியமையாதது. நீங்கள் எந்த துறையில் இயங்கிக் கொண்டு இருந்தாலும், பைத்தான் போன்ற கணினி மொழிகளை கற்றுக் கொள்ளும் போது வரும் காலத்தில் உங்களுடைய துறையில் சிறந்து விளங்குவதற்கு நிச்சயம் பயன்படும்.
ஆனால், அடிப்படையிலிருந்து ஒரு துறைசார் நிபுணர் நமக்கு கற்றுக் கொடுத்தால் மிகவும் சிறப்பாக இருக்குமே என்று பலரும் நினைக்கிறார்கள். அதற்கான ஒரு அருமையான வாய்ப்பு தற்போது அமைந்திருக்கிறது. கடந்த ஆண்டு நமது கணியம் அறக்கட்டளையோடு இணைந்து திரு சையது ஜாபர் அவர்கள் பைத்தான் இணைய வகுப்பை நடத்தி இருந்தார்கள். சுமார் 1000 பேர் வரை பங்கேற்ற அந்த இணைய வகுப்பில் பெரும்பாலானோர் சிறப்பாக பைத்தான கணினி மொழியை கற்று இருந்தார்கள்.
மேலும், இது ஒரு கட்டணமற்ற சேவை ஆகும். இந்த முறை யும் திரு சையது ஜாபர் அவர்கள் கற்றுத்தரும், இணைய வழி பைத்தான் வகுப்புகளில் பங்கு பெறுவதற்கான பதிவுகள் வரவேற்கப்படுகிறது. அதற்கான இணைப்பை நான் கீழே வழங்கி இருக்கிறேன். நீங்கள் உங்களுடைய தகவல்களை வழங்கி பதிவு செய்து கொள்ளுங்கள். உங்களுடைய விருப்பம் மற்றும் திறமையை அடிப்படையாகக் கொண்டு வாய்ப்பு வழங்கப்படும்.
இதில் பங்கேற்பதற்கோ, கல்வி கற்பதற்கோ எவ்வித கட்டணமும் கிடையாது உங்களுடைய சந்தேகங்களும் உடனுக்குடன் தீர்க்கப்படும். மற்றும் அடிப்படையில் இருந்தே கற்றுத் தரப்படும் என்பதால் மாணவர்கள் கூட எளிமையாக கற்றுக்கொள்ளலாம்.
உண்மையை சொல்லப் போனால், உங்களோடு சேர்ந்து இந்த கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் நானும், ஒரு கல்லூரி மாணவன் என்கிற முறையில் இந்த வகுப்பின் மூலமே முதல்முறையாக பைத்தானை முறைப்படி கற்றுக் கொள்ளப் போகிறேன். இந்த வாய்ப்பை நிச்சயம் பயன்படுத்திக்கொள்ளுங்கள். ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கீழே வழங்கப்பட்டுள்ள முறைப்படியான மின் மடல் முகவரி அல்லது இணையதளத்தை தொடர்பு கொள்ளவும்.
ஆனால், ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் உங்களுடைய சொந்த முயற்சி இருந்தால் மட்டுமே எந்த காரியத்திலும் வெற்றி கிடைக்கும். எனவே சற்றே முயற்சி செய்து, ஆர்வத்தோடு கற்றுப் பாருங்கள் பைத்தானும் உங்கள் கரங்களில் சரளமாக புரளும்.
மீண்டும் ஒரு பயனுள்ள தகவலோடு உங்களை வந்து சந்திக்கிறேன்.