போன பதிவில் os நிரல்கூற்றைப் பற்றிப் பார்த்தோம் அல்லவா! இந்தப் பதிவு sys module பற்றியது. கணினியின் சில அடிப்படைத் தகவல்கள், பைத்தான் வரிபெயர்ப்பி பற்றிய தகவல்கள் ஆகியவற்றை sys நிரல்கூற்றில் இருந்து பெறலாம்.
முதலில் import sys கொடுத்துக் கொள்ளுங்கள்.
வினா 1: பைத்தான் காப்புரிமை பற்றிய தகவல்களை எங்கே பார்ப்பது?
sys.copyright
வினா 2: float தரவுவகை பற்றி என்று எப்படிப் பார்ப்பது?
sys.float_info
வினா 3: யூனிக்கோடு என்கோடிங் என்ன என்று எப்படிப் பார்ப்பது?
sys.getdefaultencoding()
வினா 4: பைத்தான் பல்புரியாக்கத்தில்(Multithreading) ஓர் இழை(thread)க்கும் இன்னோர் இழைக்கும் இடையில் இருக்கும் இயல்பு(default) இடைவெளியை எப்படிக் கண்டுபிடிப்பது?
sys.getswitchinterval()
வினா 5: பைத்தான் நிறுவப்பட்டுள்ள கணினியின் இயங்குதளத்தை எப்படிப் பார்ப்பது?
sys.platform
வினா 6: நிறுவப்பட்டுள்ள பைத்தானின் பதிப்பை எப்படிப் பார்ப்பது?
sys.version
இதைப் போலவே, sys.version_info என்றும் கொடுத்துப் பார்க்கலாம். துணைப் பதிப்பு முதலிய தகவலும் இப்போது சேர்ந்து வரும்.
வினா 7: பைத்தான், நம் கணினியில் எங்கு நிறுவப்பட்டிருக்கிறது என்று எப்படிப் பார்ப்பது?
sys.executable
வினா 8: sys நிரல்கூற்றை வேறு எங்கெல்லாம் பயன்படுத்துவார்கள்?
கட்டளை வரி(Command Line) நிரல்களில் உள்ளீட்டு வாதங்களுக்கு(arguments) sys நிரல்கூறு பயன்படுத்தப்படுகிறது.
sys.argv என்றோ sys.argv[0] என்றோ கொடுத்துப் பாருங்கள்.