Q4OS

Q4OS என்பது ஒரு பாரம்பரிய மேஜைக்கணினி பயனாளர் இடைமுகத்தை வழங்குகின்ற தற்போதைய சூழலில் சமீபத்திய தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்ட மிகவிரைவான சக்திவாய்ந்த தொரு இயக்க முறைமையாகும். மிகமுக்கியமாக சரிபார்க்கப்பட்ட புதிய வசதி வாய்ப்புகளைகொண்ட பாதுகாப்பு, நம்பகத்தன்மை, நீண்டகால நிலைத்தன்மை பழமைவாத ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் இந்த இயக்க முறைமையானது அதிக கவனம் செலுத்துகின்றது. இது கணினியில் செயல்படும் வேகம் , செயல்படுவதற்கான மிகக் குறைந்த வன்பொருள் தேவை ஆகியவற்றால் மற்ற இயக்கமுறைமைகளிலிருந்து முற்றிலும் இது வேறுபடுகின்றது, புத்தம் புதிய கணினிகளிலும் பாரம்பரியமிக்க மரபு கணினிகளிலும் இது சிறப்பாக செயல்படுகின்றது. மேலும் மெய்நிகர்கணினி, மேககணினி ஆகியவற்றிற்கும் இது மிகவும் பொருத்தமாக அமைகின்றது. அதிக செயல்திறன் கொண்ட மேஜைக்கணினி சூழலை இது வழங்குகின்றது
.இது நம்முடைய வணிகத்திற்கான தொழில்முறை ஆதரவை எப்போதும் வழங்க தயாராக இருக்கின்றது . இந்த Q4 எனும் இயக்கமுறைமைக்குப் பின்புலத்தில் உள்ள தொழில்நுட்ப குழுவானது, core level API நிரலாக்கம், பயனாளர் இடைமுக மாற்றங்கள் உள்ளிட்ட எந்தவொரு கணினி தனிப்பயனாக்கத்தையும் வழங்க தயாராக உள்ளது . இதனுடைய Centaurus என்ற பெயரிடப்பட்ட நீண்ட கால ஆதரவு வெளியீடானது நமக்கு ஐந்து ஆண்டுகளுக்கு பாதுகாப்புகளையும் புதுப்பித்தல் களையும் வழங்குகின்றது, வருகின்ற ஜூலை 2024 வரை. இதனுடைய இலகுரக திறமையுடனான Trinity மேஜைக்கணினிபதிப்பை அல்லது மேம்பட்ட Plasma மேஜைக்கணினி பதிப்பை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளலாம். நேரடி பல்லூடக பயனாளர்களுக்கு விரைவான Q4OS அனுபவத்தைப் பெற அனுமதிக்கின்றது, அல்லது நிறுவுகைசெய்திடாமல் உண்மையான வன்பொருளில் முயற்சிக்கவும் முடியும். திருப்தி அடைந்தால், ஒரு விருப்ப நிறுவியாக இது கிடைக்கிறது. பழைய 64 பிட், 32 பிட் ஆகிய கணினிகளுக்கு install-cd பல்லூடகத்தைப் பயன்படுத்திகொள்க. இது செயல்படுவதற்கான குறைந்தபட்ச வன்பொருள் தேவைகள்
1.பிளாஸ்மா டெஸ்க்டாப் -1 ஜிஹெர்ட்ஸ் சிபியு / 1 ஜிபி ரேம் / 5 ஜிபி வட்டு ,
2. டிரினிட்டி டெஸ்க்டாப் -300 மெகா ஹெர்ட்ஸ் சிபியு / 128 எம்பி ரேம் / 3 ஜிபி வட்டு ஆகியவைகளாகும்
விண்டோஇயக்கமுறைமையுடன் இந்த Q4OS ஐ எளிதான வழியில் இணைத்து செயல்படுத்த லாம். விண்டோவில் அமைவு வழிகாட்டியை இயக்கியபின்னர் , இந்த Q4OS ஐ வேறு எந்தவொரு பயன்பாட்டையும் போன்று எளிதாக நிறுவுகை செய்து பயன்படுத்தி கொள்ளமுடியும். விண்டோ 10/8/7 ஆகிய இயக்கமுறைமைகளுடன் இது இணக்கமாக செயல்படுகின்றது. நேரடிகுறுவட்டில் இருந்து நிறுவுகையைத் தொடர விருப்பமான வழியில், இது துவக்க ஏற்றி நிறுவுகை விருப்பத்தை நமக்கு வழங்குகின்றது. Grub துவக்க ஏற்றி நிறுவுகையை நாம் நிறுவுகைசெய்திட அனுமதித்தால், அது விண்டோஇயக்கமுறைமை உள்ளிட்ட தான் செயல்டுவதற்காக கிடைக்கக்கூடிய இயக்க முறைமைகளை தானாகக் கண்டறிந்து ஒவ்வொரு துவக்கத்திலும் அனைத்து இயக்கங்களையும் வழங்குகின்றது. நாம் விண்டோ இயக்கமுறைமையில் துவக்க ஏற்றியை (bootloader) வைத்திருக்க விரும்பினால், நிறுவுகை செய்தலின் போது தொடர்புடைய தேர்வுப்பெட்டியைத் தேர்வுசெய்ய மறக்காதீர்கள்
லினக்ஸில் அதனுடைய துவக்கத்தில் ஏற்றாமலேயே எளிதான வழியாக யூ.எஸ்.பி-ஐ செருகுவது, முனைமத்தில் இயக்குவதன் வாயிலாக செயல்படுத்திடலாம்
$ sudo cp bootable.iso / dev / sdx
இங்கு ‘sdx’ என்பது இலக்கு யூ.எஸ்.பி டிரைவ், எடுத்துக்காட்டாக ‘sdb’
‘bootable.iso’ என்பது துவக்கக்கூடிய Q4OS நிறுவுகை குறுவட்டு உருவககோப்பாகும், நாம் அதை Q4OS இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம். மாற்றாக, துவக்கக்கூடிய யூ.எஸ்.பி வட்டுகளை உருவாக்க UNetbootin எனும் பல்லடுக்கு தளம் அல்லது ‘Rufus’ எனும் கட்டற்ற மென்பொருளைப் பயன்படுத்தி கொள்ளலாம், மேலும் விவரங்களுக்கும் பயன்படுத்தி கொள்ளவும் www.q4os.org/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க

%d bloggers like this: