சுயமாக தொழில்நுட்பங்களை கற்றறிந்து கொள்வதற்காக திரைக்காட்சியை பதிவுசெய்தல் (ScreenCast) என்பது மிகமுக்கியமான செயலாகும். அதாவது திரையில் தோன்றிடும் காட்சியை படமாக்கப்பட்டு பின்னர் காணொளி காட்சியாக காண்பிப்பதற்காக கோப்பு உருமாற்றம் செய்யப்படவேண்டும். பெரும்பாலும் இவ்வாறான செயலை செய்வதற்காக தனியுடமை மென்பொருட்களே ஏராளமான வகையில் உள்ளன. நல்ல தரமான காணொளி காட்சிகளாக தரும் கோப்புகளை உருவாக்குவதில் கட்டற்ற மென்பொருட்கள் அரிதாக உள்ளன. அதனை தீர்வு செய்வதற்காகவே இந்த எளிய திரைக்காட்சி பதிவுசெய்தல் (Simple Screen Recorder(SSR)) எனும் கட்டற்ற பயன்பாடு லினக்ஸ் இயக்க முறைமையில் செயல்படுவதற்காகவே வெளியிடபட்டுள்ளது.
பொதுவாக இவ்வாறான பணிக்கான தனியுடமை மென்பொருட்கள் ஒருமணி நேரத்தில் பதிவுசெய்யபட்ட காட்சிகளை 20 இலிருந்து 50 நிமிடங்கள் வரை கோப்புகளை சரிசெய்தபின்னர்தான் காணொளி காட்சிகளாக கணினியில் இயக்கி காணமுடியும். ஆனால் இந்த SSR எனும் கட்டற்ற பயன்பாட்டின் வாயிலாக ஒருமணிநேரத்தில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை அடுத்த ஓரிரு நிமிடங்களிலேயே கோப்புகளை சரிசெய்து காணொளி காட்சிகளாக கணினியில் இயக்கி காணமுடியும் என்பதுதான் இதன் சிறப்பம்சமாகும். இது VLC ஐவிட சிறந்ததாக மிகவேகமாக செயல்படும் தன்மையுடையது. இது குறைந்த ரேம் (RAM) நினைவகத்தை பயன்படுத்திடுகின்றது .இதுமுழுத்திரையும் படப்பிடிப்பு செய்திடுகின்றது. இது நிலையான செவ்வக அளவில் பதிவுசெய்கின்றது. இது அனைத்து OGL பயன்பாடுகளின் காட்சிகளை பதிவுசெய்கின்றது. இணைய காணொளி காட்சி வடிவமைப்பிலும் (WebMovieFormat – WebM)கோப்புகளை சேமிக்கும் திறன்கொண்டது.இது உபுண்டு,ஃபெடோரா,லினக்ஸ்மின்ட், ஸ்லாக்வேர் போன்ற அனைத்து லினக்ஸ் இயக்கமுறைமையிலும் செயல்படும் திறன்கொண்டது.
இதனுடைய சிறப்பியல்புகளையும் இதர பயன்களையும் அறிந்து தெரிந்து கொள்ள
எனும் தளத்தின் காணொளி காட்சியினை கண்டறிந்து கொள்க.
இதனை பயன்படுத்திட விழைவோர் www.maartenbaert.be/simplescreenrecorder/ எனும் தளத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்து நம்முடைய கணினியில் நிறுவுகை செய்து பயன்படுத்தி கொள்க.
ச.குப்பன்
kuppansarkarai641@gmail.com