வணக்கம்.
‘கணியம்’ இதழ் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
மின் புத்தகங்கள் , அவற்றை வாசிக்கும் கருவிகள் ( கிண்டில், நூக் , ஐபேட், டேபிலேட்) போன்றவை நமது வாசிக்கும் பழக்கத்தையும்
ஆர்வத்தையும் அதிகரிக்கின்றன. சென்ற இதழை பல்வேறு வடிவங்களில் மின் புத்தகங்களாக வெளியிட்டோம்.
இதே போல இன்னும் பல துறைகளில் மின்னூல்கள் வெளி வர வேண்டும்.
இதற்கான நமது அடுத்த முயற்சி freetamilebooks.com
இந்த திட்டத்தில், கிரியட்டிவ் காமன்ஸ் உரிமையில் வெளியிடப்படும் வலை பதிவுகள், வலை தளங்கள், இலக்கிய இதழ்கள்,
செய்தி தளங்கள் போன்றவற்றை கண்டறிய வேண்டும். பின் அவற்றில் இருந்து கட்டுரைகளை தெரிவு செய்து
LibreOffice , Calibre போன்ற மென்பொருட்கள் மூலம், மின் புத்தகங்கள் தயார் செய்யலாம்.
இந்த மின் புத்தகங்களை யாவரும் படித்து பகிரும் வகையில் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில் வெளியிடலாம்.
இந்த திட்டத்தில் பங்களிக்க freetamilebooksteam@gmail.com க்கு எழுதவும்.
முழு விவரங்கள் இங்கே:
onroads.wordpress.com/2013/05/28/freetamilebooks-com-let-us-free-the-tamil-ebooks/
Facebook: www.facebook.com/FreeTamilEbooks
Google Plus: plus.google.com/communities/108817760492177970948
இந்த இதழை கிண்டில், ஐபேட் , டேப்லட் போன்ற மின் புத்தக கருவிகளிலும் படிக்கும் வகையில்
6″ pdf, epub , azw ஆகிய வடிவங்களிலும் அளிக்கிறோம்.
கணியம் இதழின் படைப்புகள் அனைத்தும், கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிடப்படுகின்றன.
இதன் மூலம், நீங்கள் o~யாருடனும் பகிர்ந்து கொள்ளலாம். ~o~ திருத்தி எழுதி வெளியிடலாம்.
~o~ வணிக ரீதியிலும்யன்படுத்தலாம். ஆனால், மூல கட்டுரை, ஆசிரியர் மற்றும் www.kaniyam.com
பற்றிய விவரங்களை சேர்த்து தர வேண்டும். இதே உரிமைகளை யாவருக்கும் தர வேண்டும்.
கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிட வேண்டும்.
பொருளடக்கம்
எளிய தமிழில் WordPress -2
எளிய செய்முறையில் C – பாகம் 6
கட்டற்ற மென்பொருளும் அறிவியலும் – பகுதி II
எச்.டி.எம்.எல் 5 பட விளக்கம்(6)
பைதான் – 10
.htaccess கோப்பும் நான்கு நல்ல SEO பயன்பாடுகளும்
எங்கும் லினக்சு – லினக்சால் இயங்கும் 12 சிறந்த கருவிகள்
வின்எஸ்,ஸி,பி (WinSCP ) என்ற திறமூலபயன்பாட்டினை
எவ்வாறு பயன்படுத்துவது?
ஹாங் காங் விமான நிலையத்தில் லினக்ஸ்
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி
கணினியை Router ஆக்க சிறு குறிப்பு
ஓபன் சோர்ஸ் தொடர்பான பணிகளில் ஈடுபடும் நிறுவனங்கள்
கணியம் வெளியீட்டு விவரம்
கணியம் பற்றி…
நன்றி.
ஸ்ரீனி
ஆசிரியர்,
கணியம்
editor@kaniyam.com