கணியம் – இதழ் 23

வணக்கம்.

கணியம்இதழ் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

இம்மாத இதழ் சற்றே கால தாமதமாக வெளிவருகிறது. மன்னிக்கவும்.

 

சென்ற வாரம், சான்பிரான்சிஸ்கோ நகரில், எழில் [ ezhillang.org]எனும் தமிழ் நிரல் மொழியை உருவாக்கிய, முத்து அவர்களை சந்தித்தேன். தமிழுக்காய் பல செயல்களை ஆர்வமுடன் செய்யும் இளைஞர். கல்லூரிக் கல்வி கணிணித்துறையாய் இல்லாத போதிலும், தானே பல்வேறு நுட்பங்களைக் கற்று, தமிழிலேயே நிரல் எழுதும் வகையில், எழில் என்ற புதிய நிரல் மொழியை தனி ஒருவராய் எழுதி, கட்டற்ற மென்பொருளாக வெளியிட்டுள்ளார். கணியம் இதழின் தொடர்ந்த வெளியீடுகளைப் பாராட்டி, பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

 

இவர் போல் பலரும், தமிழில், தாம் அறிந்த கருத்துகளையும், புது நுட்பங்களையும் கட்டற்ற வகையில் வெளியிட்டால், தமிழ் தானே இன்னும் பல தலைமுறைகள் தாண்டித் தழைக்கும்.

 

கட்டுரைகள் குறைந்த போது, புயல் போல் பல கட்டுரைகள் எழுதி அளித்து, இந்த இதழ் வெளிவர உதவிய ச.குப்பன் அவர்களுக்கு நன்றிகள்.

கணியம் இதழின் படைப்புகள் அனைத்தும், கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிடப்படுகின்றன. இதன் மூலம், நீங்கள் o~யாருடனும் பகிர்ந்து கொள்ளலாம். ~o~ திருத்தி எழுதி வெளியிடலாம். ~o~ வணிக ரீதியிலும்யன்படுத்தலாம். ஆனால், மூல கட்டுரை, ஆசிரியர் மற்றும் www.kaniyam.com பற்றிய விவரங்களை சேர்த்து தர வேண்டும். இதே உரிமைகளை யாவருக்கும் தர வேண்டும். கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிட வேண்டும்.

நன்றி.

ஸ்ரீனிஆசிரியர், கணியம் editor@kaniyam.com

 

 

[wpfilebase tag=file id=43/]

%d bloggers like this: