C மொழியில் சின்னதாக ஒரு கூட்டல் கணக்கு | எளிய தமிழில் C

எளிய தமிழில் C கட்டுரைகளை எழுதத் தொடங்கி கடந்த 15 நாட்களாக கட்டுரை எதுவும் வெளியாகவில்லை. சில தனிப்பட

சரி இன்றைக்கு பெரியதாக ஒன்றும் பார்க்கப்போவதில்லை! C மொழியில் எளிமையாக ஒரு கூட்டல் கணக்கு போடுவது எப்படி ?என்றுதான் இன்றைய கட்டுரையில் பார்க்க வருகிறோம்.

இதற்கு உங்களுக்கு அடிப்படையான தகவல்கள் தெரிந்திருக்க வேண்டும். இதற்கு முன்பு நான் எழுதியிருக்கக் கூடிய,C மொழியில் பொங்கல் வாழ்த்து என்னும் கட்டுரையை படித்து பாருங்கள். C மொழியில் எழுதுவதற்கு அடிப்படையான தகவல்கள் என்னென்ன? என்பது குறித்து அந்த கட்டுரையின் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

சரி! கூட்டல் கணக்கு போடுவது என்று முடிவாகிவிட்டது .எப்படிப்பட்ட கூட்டல் கணக்கு போடலாம்.நீங்கள் ஒன்றாம் வகுப்பில் சேரும்போது நிச்சயமாக 1+1=? எத்தனை என்றுதான் ஆசிரியர் முதல் முதலில் கேட்டிருப்பார். அதுபோலவே, இன்றைக்கும் இரண்டையும் ,மூன்றையும் கூட்டினால் என்ன வரும்? அதைத்தான் C மொழியில் ஒரு நிரல் ஆக்கமாக செய்து காட்டப் போகிறேன்.

<stdio.h>
int main()
{
int a = 2;
int b = 3;
int c;
c = a + b;
printf(“sum is: %d\n”,c);
return 0;
}
Output :
Sum is 5

இவ்வளவுதான் இத்தகைய நிர்வாகத்தை கொண்டு 2 மற்றும் 3 ஐ கூட்டி விட முடியும்.

A என்கிற மாறி மதிப்பில் நான் 2 என்பதை சேமித்து வைத்திருக்கிறேன்.

B என்கிற மாறி மதிப்பில் 3 என்பதை சேமித்து வைத்திருக்கிறேன்

C என்கிற மாறி மதிப்பில் A மற்றும் B ஆகியவற்றின் கூட்டுத்தொகையை சேமித்து வைத்திருக்கிறேன். இதற்கு நாம் வழக்கமாக பயன்படுத்தக்கூடிய கூட்டல் குறியே(+)போதுமானது.

ஒவ்வொரு விளக்கத்திற்குப் பின்பும் அரை நிறுத்தக்குறி(;) இட வேண்டும்.

%d என்பது integer மதிப்புக்கான format specifier என அறியப்படுகிறது அது குறித்து வரும் கட்டுரைகளில் விரிவாக பார்க்கலாம்.

முடிவாக திருப்புதல் மதிப்புக்கான return 0 வழங்கியிருக்கிறேன்.

Output:

சரி! ஏற்கனவே உள்ள மதிப்பைக் கொண்டு கூட்டல் செய்வதற்கு இது சரியாக இருக்கும். ஒருவேளை நாம் விரும்பிய மதிப்புகளை போட்டு கால்குலேட்டர் போல பயன்படுத்துவது எப்படி? அடுத்த கட்டுரையில் நாமாகவே மதிப்பு அளித்து,எப்படி கூட்டல் செயல்பாடை செய்வது என்று பார்க்கலாம்.

எனக்குத் தெரிந்த வகையில் எளிமையாக இந்த கட்டுரையை எழுதி இருக்கிறேன். ஏதேனும் பிழைகள் அல்லது திருத்தங்கள் தேவைப்படும் பட்சத்தில் தயங்காமல் என்னுடைய மின்மடல் முகவரிக்கு மடல் இயற்றுங்கள். உங்களுடைய கருத்துக்கள் எப்போதும் வரவேற்கப்படுகிறது.

கட்டுரையாளர்:-
ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்து கல்லூரி, நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் முகவரி : srikaleeswarar@myyahoo.com
இணையம் :

ssktamil.wordpress.com

%d bloggers like this: