மென்பொருள் சுதந்திர தின விழா – 2018 – நிகழ்வுக் குறிப்புகள்

அக்டோபர் 27, 2018 அன்று கணியம் அறக்கட்டளை சார்பாக மென்பொருள் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.

15 பேர் கலந்து கொண்ட இந்நிகழ்வில், உரையாடல்களும், கேள்விகளும், பதில்களும் நிரம்பியது.

 

பாரதி கண்ணன் நிகழ்வின் அறிமுகம் செய்தார்.

இராமன் கட்டற்ற மென்பொருள் அறிமுகம், அவற்றின் அவசியம், வரலாறு, தற்போதைய வளர்ச்சி நிலைகள், லினக்சு பயனர் குழுக்கள், சென்னை குழு பற்றி பேசினார்.

பாஸ்கர், RaspberryPi/LibreElec கருவியை விளக்கினார். கட்டற்ற மென்பொருள், கட்டற்ற வனெபொருளின் அவசியத்தை வலியுறுத்தினார்.

சீனிவாசன் பல்வேறு கட்டற்ற மென்பொருட்களை இயக்கிக் காட்டினார்.

அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.

மோகன் புதிதாக வந்தோரின் மடிக்கணினிகளில் LinuxMint நிறுவினார். ஏற்கெனவே லினக்சு இருந்த மடிக்கணினிகளில் இருந்த சில சிக்கல்களை நீக்கி, சீராக்கினார்.

வெங்கோபாராவ், புது லினக்சு பயனர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் சென்னையில்  Support Center ஒரு போன்ற ஒரு இடமாவது வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தார்.

 

சிலர் புழல், திருவேற்காடு போன்ற தூர இடங்களில் இருந்தும் ஆர்வமுடன் பங்குபெற்றனர்.

பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகள்.

புகைப்படங்கள் இங்கே – www.flickr.com/photos/160169276@N03/albums/72157702728589544