அறிவியல்பூர்வ பைதானின் மேம்படுத்திடும் சூழல்(Scientific Python Development Environment(SPYDER)) என்பது அறிவியல் அறிஞர்களுக்கும், பொறியாளர்களுக்கும் தரவு ஆய்வாளர்களுக்கும் பயன்படுவதற்காக பைதான் மொழியால்உருவாக்கி வடிவமைக்கப்பட்ட தொரு திறன்மிக்க அறிவியல் சூழலாகும்இது உள்ளிணைந்த பல்வேறு வசதி வாய்ப்புகள் மட்டுமல்லாது பைதான் மொழியின் கூடுதல் இணைப்பாகவும் , API ஆகவும் ,அதைவிட PyQt5 எனும் விரிவாக்க நூலமாகவும்–கூட இதனை பயன்படுத்தி கொள்ளமுடியும் மேலும் இதன் செயலி, இடைமுகப்புதிரை போன்ற உள்பொதிந்த உள்ளுறுப்புகளை தேவையெனில் நம்முடைய சொந்த பயன்பாடுகளில்நாம் கட்டமைத்து மேம்படுத்தி கொள்வதற்கு இது அனுமதிக்கின்றது
தரவு ஆய்வு, ஊடாடுவதை செயல்படுத்தல், ஆழ்ந்த ஆய்வு, அழகான காட்சிப்படுத்தல் ஆகிய திறன்களுடன் கூடிய விரிவான மேம்படுத்திடும் கருவியாகவும் , திருத்தம் செய்தல், பகுப்பாய்வுசெய்தல், பிழைத்திருத்தம்செய்தல் ஆகிய பல்வேறு வசதி வாய்ப்பகளையும் பயனாளர்களுக்கு வழங்க தயாராக இருக்கும் இதுஒரு அறிவியல் செயலிகளின் தொகுப்பாக விளங்குகின்றது .
பல்வேறு மொழிகளை கையாளும் திறனுடன் நிகழ்வுநேரத்திலேயே குறிமுறைவரிகள் சரியாக இருக்கின்றனவா என ஆய்வுசெய்து தானாகவே குறிமுறைவரிகளின் மிகுதி சொற்களை பூரத்தி செய்து கொள்ளும் வசதி வாய்ப்புகளை இது கொண்டுள்ளது அவ்வப்போது நாம் பயன்படுத்திடும் ஆவணத்தை பதிப்புதிரையில் அல்லது முகப்புசாளரத்தில் என்றவாரு தேவையான பகுதியில் காணும் வசதி கொண்டது மேலும் நெகிழ்வுதன்மையுடன் கூடிய முழுமையான வரைகலைஇடைமுகப்பு வசதியை நமக்கு இது வழங்குகின்றது numeric/strings/bools, Python lists/tuples/dictionaries, dates/timedeltas, Numpy arrays, Pandas index/series/dataframes, PIL/Pillow imagesஆகிய பல்வேறு மாறிகளை பயன்படுத்தி கொள்ளவும் ,அவைசரியாக செயல்படுகின்றதாவென சரிபார்த்திடும் வசதியையும் இது கொண்டுள்ளது நாம் எழுதிடும் நம்முடைய குறிமுறைவரிகளை static analyzer, trace,debugger என்பன போன்ற இதனுடைய கருவிகளை கொண்டு நம்முடைய பயன்பாட்டினை மேலும் மேம்படுத்தி கொள்ளமுடியும் இந்த Spyder ஆனது பைத்தானின் பதிப்பு 3.3 இற்கு மேல் உள்ள பதிப்பில் மட்டுமே செயல்படும் என்ற கூடுதல்செய்தியை மனதில் கொள்க. இந்த Spyderஐ பதிவிறக்கம்செய்து எளிதாக நிறுவுகை செய்து பயன்படுத்த விழைபவர்கள் www.anaconda.com/download/ எனும் இணையதளபக்கத்திற்கு சென்று Anaconda வின் கட்டுகளை பயன்படுத்தி கொள்க வேறு எதுவும் தேவையில்லை என பரிந்துரைக்கப்–படுகின்றது இந்நிலையில் நான் விண்டோ இயக்கமுறைமை கணினிதான் வைத்துள்ளேன் நான் எவ்வாறு இதனை பயன்படுத்தி கொள்ளமுடியும் என அலறுபவர்கள் கவலையே படவேண்டாம் winpython.github.io/ எனும் இணையதளபக்கத்திற்கு சென்று மென்பொருள்கட்டுகளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்கஎனபரிந்துரைக்கப்படுகின்றது.மேலும் இதனை பயன்படுத்திடும்போது எழும் எந்தவொரு சிக்கலையும் தீ்ர்வுசெய்து கொள்வதற்காக github.com/spyder-ide/spyder/wiki/Troubleshooting-Guide-and-FAQ எனும் இணையதள–பக்கத்திற்கு செல்க
அதுமட்டுமல்லாது இந்த Spyder ஐ பற்றிய மேலும்விவரங்களை அறிந்துகொள்ள www.spyder-ide.org/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க