Tag Archives: எளிய தமிழில் PHP

PHP தமிழில் பகுதி 13: Working with Strings and Text in PHP

PHP என்ற நிரல் மொழி உருவாக்கப்பட்டதன் முக்கிய நோக்கமே web contentகளை திறம்பட கையாள்வதற்குத்தான். web content என்பது உரைகளை (text) அடிப்படையாகக் கொண்டது. ஆகையால் உரைகளைத் திறம்பட, எளிமையாக கையாள்வதற்காக பலதரப்பட்ட வசதிகளை (features) PHP கொண்டிருப்பதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை. உரைகளைக் கையாள்வதற்காக PHP வழங்கியுள்ள பலதரப்பட்ட நுட்பங்களை இந்தப் பகுதியில் நாம் விரிவாக பார்க்க இருக்கிறோம். Web developer ஆக பணிபுரியும் ஒருவருக்கு உரைகளைக் கையாள்வதில் நிறைய வேலைகள் இருக்கும். அவற்றில் எழுத்துக்களை மாற்றுதல்,… Read More »

PHP தமிழில் பகுதி 12: Arrays

PHP Arrays பல மாறிகளை (variable) ஒன்றாக இணைத்து ஒரு குழுவாக மாற்றி அதை ஒற்றை மாறியின் (variable) மூலமாக அணுகுவதற்கு வழி எற்படுத்தி தருகிறது. Array யானது ஒருமுறை உருவாக்கப்பட்டுவிட்டால் அதன் பிறகு அதில் நம்மால் உருப்படிகளைச் (items) சேர்க்க, நீக்க, மாற்ற, வரிசைப்படுத்த முடியும். ஒரு Array இருக்கும் உருப்படிகள் எந்த மாறி வகையினைச் சேர்ந்ததாக இருக்கலாம். Array யில் உருப்படிகள் அனைத்தும் ஒரே வகையினைச் சேர்ந்ததாகத்தான் இருக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும்… Read More »

PHP தமிழில் பகுதி 10: Flow Control and Looping

10. Flow Control and Looping PHP போன்ற நிரல்மொழிகளைப் பயன்படுத்துவதன் நோக்கமே, வலை (web) அடிப்படையிலான தகவல்களில் தர்க்கம் மற்றும் நுண்ணறிவு நுணுக்கங்களை கட்டமைக்க வேண்டும் என்பதாகும். தர்க்கம், நுண்ணறிவு என்று வந்துவிட்டாலே சூழலுக்கு ஏற்ப தகவல்களின் அடிப்படையில் அடிக்கடி முடிவுகளை எடுக்க வேண்டி வரும். உதாரணமாக, நிரலினுடைய ஒரு குறிப்பிட்ட பகுதியை பலமுறை இயக்க வேண்டிய அவசியம் ஏற்படலாம் அல்லது குறிப்பிட்ட நிபந்தனை பொருந்தும் போது மட்டும் நிரலை இயக்க வேண்டிய அவசியம் ஏற்படலாம்… Read More »

PHP தமிழில் பகுதி 9: Operators (வினைக்குறி)

9. Operators (வினைக்குறி) மாறிகள் (variables) மற்றும் மதிப்புகள் (values) ஆகியவற்றின் மீது கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் மற்றும் இணைத்தல் மற்றும் இன்னும் பல வேலைகளை செய்வதற்கு வினைக்குறிகள் பயன்படுகின்றன. இது PHP யில் மட்டுமல்ல அனைத்து நிரல் மொழிகளிலேயுமே இருக்கின்றது. வினைக்குறிகள் தனியாக மட்டுமல்லாது ++, –, += போன்று இணைந்த வடிவிலும் இருக்கின்றது. ஒரு குறிப்பிட்ட வேலைக்காக நிர்ணயிக்கப்பட்டு இருக்கும் மாறிகள் அல்லது மதிப்புகளுடன் இருக்கக் கூடியவை வினைஏற்பிகள் எனப்படும். அத்தகைய வினைஏற்பிகளுடன்… Read More »

PHP தமிழில் – 2 ஓர் அறிமுகம்

  பொருளடக்கம் பகுதி – 1 PHP – இன் வரலாறு PHP Script உருவாக்குதல் PHP பிரபலமானது எப்படி? பகுதி – 2 PHP – ஓர் அறிமுகம் PHP என்றால் என்ன? PHP என்பது ஒரு Server Side Scripting language. எளிமையாக சொல்ல வேண்டுமானால் உங்களுக்கு ஒரு புத்தகம் தேவைப்படுகிறது. அதை இணையமூலம் வாங்குவதற்காக ஏதோ ஒரு  பதிப்பகத்தின் இணையதளத்திற்கு செல்கிறீர்கள். அந்த பதிப்பகத்தின் இணையதளம் PHP மூலம் உருவாக்கப்பட்டதெனில். அந்த இணைதளத்தில்… Read More »

PHP தமிழில் – 1

இதற்கு உன் :  PHP தமிழில் – அறிமுகம் பகுதி – 1 PHP – இன் வரலாறு PHP Script உருவாக்குதல் PHP பிரபலமானது எப்படி? PHPயின் வரலாறு பிரச்சனைகள் ஏற்படும் போதே அதன் தீர்வுகளும் தேடப்படுகிறது. எங்கு தேடியும் தீர்வுகள் கிடைக்காத பட்சத்தில், அதற்கான தீர்வை தாமாகவே முயன்று கண்டுபிடிப்பர். அவருக்கு ஏற்பட்ட அந்த பிரச்சனை வேறு ஒருவருக்கு ஏற்படும் போது, மற்றவர்களுக்கும் அவரைப் போல கஷ்டபடாமல் இருப்பதற்காக, கண்டுபிடித்த அந்த தீர்வை அனைவரும்… Read More »

PHP தமிழில் – நூல் அறிமுகம் & பொருளடக்கம்

கணியம் வாசகர்களுக்கு இனிய வணக்கம் இன்று முதல் PHP என்ற சிறந்த கணினி மொழியை, கணியம் மூலம் எளிமையான தமிழில் கற்று மகிழலாம். இந்த அரும் பணியை செய்ய முன்வைத்துள்ள ஆர்.கதிர்வேல் (linuxkathirvel.info@gmail.com) அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். Techotopia வழங்கும் PHP Essentials என்ற நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு தான், கணியத்தில் PHP தமிழில் என்று தொடராக வரப்போகிறது. அதன் பொருளடக்கம் கீழே உள்ளது. முதல் பகுதி இன்று வெளிவரும். படித்து பகரிந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கமெண்ட் மூலம் எங்களுக்கும், தொடரின்… Read More »