Tag Archives: மென்பொருள் சோதனை

சாப்ட்வேர் டெஸ்டிங் – நேரலை வகுப்புகள்

இன்று முதல், பயிலகம் யூடியூப் பக்கத்தில் இந்திய நேரம் ஏழு மணி முதல் எட்டு மணி வரை, சாப்ட்வேர் டெஸ்டிங் (Manual Testing) வகுப்புகள் நேரலையாக ஒளிபரப்பப்படவிருக்கின்றன.  விருப்பமுடைய நண்பர்கள் கலந்து கொள்ளலாம். இணைந்து கொள்ள: www.youtube.com/channel/UCdw_PocG9G8-y4f6wYkz8og பயிற்றுநர்: கி. முத்துராமலிங்கம், பயிலகம்.

சாப்ட்வேர் டெஸ்டிங் – 23 – தகவெளிமை முறை(Agile Methodology)

அண்மைக்காலங்களில் பல மென்பொருள் நிறுவனங்கள் தகவெளிமை முறைக்கு மாறியிருக்கின்றன. ஏன் இந்த மாற்றம்? அப்படி என்ன இருக்கிறது இந்த முறையில்? இதைப் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ள வேண்டுமே என்று நினைப்பவர்கள் கணியத்தில் திரு. அசோகன் அவர்கள் எழுதியுள்ள “எளிய தமிழில் Agile/Scrum” மின் நூலில் படித்துத் தெரிந்து கொள்ளலாம். விரிவாகத் தெரிவதற்கு முன்னர், தகவெளிமை(Agile) பற்றிய ஓர் அறிமுகமாவது வேண்டாமா? என்று கேட்பவரா நீங்கள்? அப்படியானால் உங்களுக்கானது தான் இந்தப் பதிவு! இதற்கு முன்பு நாம்… Read More »

சாப்ட்வேர் டெஸ்டிங் – 14 – கருப்புப் பெட்டியும் வெள்ளைப் பெட்டியும்

வானூர்தியில் தான் கருப்புப் பெட்டி என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இதென்ன சாப்ட்வேர் டெஸ்டிங்கிலும் கருப்புப் பெட்டியா? என்று வியக்கிறீர்களா? வியக்க வேண்டாம். எளிமையானது தான்! பார்த்து விடலாமா? கருப்புப் பெட்டிச் சோதனை: வீட்டில் இருக்கும் மோடத்திற்கு (Modem) இணைய இணைப்புக் கொடுக்கிறீர்கள். ஆனால் அந்த மோடம் எப்படி உள்ளீட்டை வாங்குகிறது? எப்படி உங்களுக்கு இணைய வசதி கிடைக்கிறது என்று யோசித்திருக்கிறீர்களா? எப்படிக் கிடைத்தால் என்ன – இணையம் கிடைத்தால் போதும் அல்லவா? வண்டிக்குப் பெட்ரோல் நிரப்புகிறோம். பெட்ரோல் இஞ்சினுக்குப்… Read More »