Tag Archives: basic electronics

தானியங்கி வீட்டு வசதிகளை இலவசமாக பெறலாம்! | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 16

எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில், பல தானியங்கி கருவிகள் குறித்தும், சென்சார்கள் குறித்தும், டையோடுகள் குறித்தும், இன்ன பிற எலக்ட்ரானிக் பொருட்கள் குறித்தும் கடந்த 15 கட்டுரைகளில் விவாதித்து இருக்கிறோம். இன்றைக்கு நான் உங்கள் மத்தியில் குறிப்பிட இருப்பது எலக்ட்ரானிக் பொருட்கள் குறித்து அல்ல! மாறாக, எலக்ட்ரானிக்ஸ் துறையின் அபரிவிதமான வளர்ச்சியால் இன்றைக்கு இணையத்தின் மூலம் இயங்கும் கருவிகள்(IOT), தானியங்கி வீட்டு வசதி சாதனங்கள்(Home automation devices)ஆகியவை எளிய வகையில் கிடைக்கின்றன. கூகுள் நிறுவனம் மற்றும் அமேசான் நிறுவனத்தின்… Read More: தானியங்கி வீட்டு வசதிகளை இலவசமாக பெறலாம்! | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 16 »

Sim அட்டைகள் எவ்வாறு வேலை செய்கிறது ?  | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 15.

நான் எளிய எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளை எழுத தொடங்கி, இரண்டு மாதங்கள் ஆகிறது. அந்த வகையில் இது என்னுடைய 15 வது எலக்ட்ரானிக்ஸ் கட்டுரை. கடந்த கட்டுரையில் உள்ளார்ந்த மின்சுற்றுகள் குறித்து பார்த்திருந்தோம். அதுபோன்று என்னுடைய பிற எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளை பார்வையிட கீழே வழங்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தவும். இன்றைக்கு நாம் பார்க்க இருக்கக்கூடிய தலைப்பு சிம் கார்டுகள். சிம் கார்டுகளுக்கும் எலக்ட்ரானிக் தொழில்நுட்பத்திற்கும் அப்படி என்ன சம்பந்தம் இருக்கு போகிறது? என்று நீங்கள் ஒருவேளை யோசிக்கலாம். அடிப்படையில், சிம்… Read More: Sim அட்டைகள் எவ்வாறு வேலை செய்கிறது ?  | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி… »

உள்ளார்ந்த மின் சுற்றுகள்(IC) என்றால் என்ன? | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 14

நம்முடைய பெரும்பாலான எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளில் மின்தடைகள்,மின் தேக்கிகள், டையோடுகள்,ட்ரான்சிஸ்டர்கள் உட்பட பலவிதமான எலக்ட்ரானிக் பொருட்கள் குறித்து பார்த்திருக்கிறோம். என்னுடைய பிற எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளை படிக்க: kaniyam.com/category/basic-electronics/ இத்தகைய எலக்ட்ரானிக் பொருட்களை, வெறும் ஒரு சிறிய எலக்ட்ரானிக்ஸ் சாதனத்திற்குள் அடக்கி விட முடியுமா? என்று கேட்டால் மிகவும் கடினமான ஒன்றுதான் என்று உங்களுக்கு தோன்றலாம். உதாரணமாக, உங்களுடைய மொபைல் ஃபோன்களிலும் மின்தேக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. அதே நேரம், நமது வீட்டில் பயன்படுத்தக்கூடிய மின்விசிறிகளில் கூட மின்தேக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. அதே அளவில்… Read More: உள்ளார்ந்த மின் சுற்றுகள்(IC) என்றால் என்ன? | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 14 »

Piezo electric(அழுத்த மின்)விளைவு என்றால் என்ன? |எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 13

எளிய எலக்ட்ரானிக்ஸ் தொடர்பான பல கட்டுரைகளை பார்த்து வருகிறோம். நாம் அனுதினமும் கடந்து வரக்கூடிய ஒரு மிக முக்கியமான விளைவு தான்; இந்த பிசோ எலக்ட்ரிக் விளைவு. இது குறித்து நம்மில் பல அறிந்திருப்பதில்லை. இதுகுறித்து விரிவாக பார்ப்பதற்கு முன்பாக, என்னுடைய பிறை எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளை பார்வையிட, கீழே வழங்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி கொள்ளவும். kaniyam.com/category/basic-electronics/ பிசோ எலக்ட்ரிக் விளைவு தமிழில் அழுத்தமின் விளைவு என அறியப்படுகிறது. ஒரு பொருளின் மீது குறிப்பிட்ட அழுத்தத்தை வழங்கும்போது, அதிலிருந்து… Read More: Piezo electric(அழுத்த மின்)விளைவு என்றால் என்ன? |எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 13 »

மின் தூண்டல் அடுப்பு(induction stove )எவ்வாறு வேலை செய்கிறது? | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 12

எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில், கடந்த மின் தூண்டிகள்(inductors )குறித்து பார்த்திருந்தோம். அகமின் தூண்டல் நிகழ்வு குறித்தும் அந்த கட்டுரையில் விவாதித்திருந்தோம். ஒரு கம்பிச்சுருளின் வழியாக மின்சாரம் பாயும் போது, அதில் காந்தப்புலம்(magnetic field)ஏற்படுகிறது. இதன் அடிப்படையிலேயே, நாம் அனுதினமும் வீடுகளில் பயன்படுத்தும் மின் தூண்டல் அடுப்புகள் அதாவது இன்டக்ஷன் அடுப்புகள் செயல்படுகின்றன. அதனுடைய செயல்பாடு விதம் குறித்து தெளிவாக பார்ப்பதற்கு முன்பாக, என்னுடைய பிற எளிய எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளை நீங்கள் படிக்க விரும்பினால் கீழே வழங்கப்பட்டுள்ள பட்டனை… Read More: மின் தூண்டல் அடுப்பு(induction stove )எவ்வாறு வேலை செய்கிறது? | எளிய எலக்ட்ரானிக்ஸ்… »

மின்னதிர்ச்சியும், தவிர்க்கும் வழியும்! |எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 11

பொதுவாக எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில், எலக்ட்ரானிக் பொருட்கள் தொடர்பான கட்டுரைகள் மட்டுமே எழுதி வந்தேன். ஆனால், இந்த வாரம் செய்தித்தாளில் மின்னதிர்ச்சியால் இறந்த ஒரு தம்பதியின் செய்தியை படித்த போது மிகவும் வேதனையாக இருந்தது. மின் அதிர்ச்சியால் உயிரிழப்புகள், ஆண்டாண்டு காலமாக நீடித்து வருகிறது. மேற்படி, நான் கடந்து வந்த இந்த நிகழ்வில் பக்கத்து வீட்டில் போடப்பட்டிருந்த அலங்கார விளக்குகளிலிருந்து மின்சாரம் கசிந்து! சம்பவம் நடந்த வீட்டில் இருந்து துணி காய வைக்கும் இரும்பு கம்பியில் பட்டு… Read More: மின்னதிர்ச்சியும், தவிர்க்கும் வழியும்! |எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 11 »

மின் தூண்டிகள் என்றால் என்ன ? அவை குறித்த அடிப்படை தகவல்கள் | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 10

எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில் தொடர்ந்து டையோடுகள் குறித்து பல கட்டுரைகளில் விவாதித்து இருந்தோம். இன்றைக்கு நாம் விவாதிக்க இருக்கக்கூடிய தலைப்பு மின் தூண்டிகள்(inductors). நீங்கள் என்னுடைய, இதற்கு முந்தைய எளிய எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளை படிக்கவில்லை என்றால்! கீழே வழங்கப்பட்டிருக்கும் பட்டனை பயன்படுத்தி பழைய கட்டுரைகளையும் பார்வையிடுங்கள். அடிப்படையில் சில சென்டிமீட்டர் அளவில் ஆன வயரை, சுருள் போன்ற அமைப்பில் சுற்றி வைத்து இருப்பது போல காட்சி அளிக்கும் இதுதான் மின் தூண்டிகள். பொதுவாக தாமிர கம்பிகளை, இரும்பு… Read More: மின் தூண்டிகள் என்றால் என்ன ? அவை குறித்த அடிப்படை தகவல்கள் |… »

ஒளி உமிழ் டையோடுகளும் அவை செயல்படும் விதமும் | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 9

எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளை எழுத ஆரம்பித்த நாளிலிருந்து, டையோடுகளுக்கும் நமக்கும் நல்ல உடன்பாடு இருக்கிறது போலும்! நான் எப்பொழுது கட்டுரையை எழுத தரவுகளை சேகரித்தாலும், டையோடுகள் எனது கண்களில் இருந்து தவறுவதில்லை. கடந்த ஒரு கட்டுரையில், ஒளி மின் டையோடு(photo diode) குறித்து பார்த்திருந்தோம். அதாவது, வெளியில் இருக்கும் ஒளியின் அளவைக் கொண்டு மின்சாரத்தை உற்பத்தி செய்யவல்ல டையோடு தான் ஒளிமின் டையோடு. இவற்றைப் பெரும்பாலும் உணர்விகளில் பயன்படுத்தலாம் என்று நான் குறிப்பிட்டிருந்தேன். அந்த வகையில் நாம் கொடுக்கின்ற… Read More: ஒளி உமிழ் டையோடுகளும் அவை செயல்படும் விதமும் | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி… »

ஒலிபெருக்கிக்கு பின்னால் இருக்கக்கூடிய அறிவியல் என்ன? | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 8

தொடர்ந்து கடந்த சில கட்டுரைகளாக, டையோடுகள்,ட்ரான்சிஸ்டர்,மின்தடை உள்ளிட்ட அடிப்படை தகவல்கள் குறித்து எலக்ட்ரானிக்ஸ் பகுதியில் பேசி இருந்தோம். ஆனால், இந்தக் கட்டுரையில் நாம் பொது வாழ்வில் அனுதினமும் காணக்கூடிய,  ஒலிபெருக்கிகளில்(loud speakers)புதைந்திருக்க கூடிய அறிவியலை எளிமையாக அறிந்து கொள்ளலாம். அதற்கு முன்பாக, என்னுடைய எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளை நீங்கள் படிக்க விரும்பினால்! கீழே வழங்கப்பட்டுள்ள பட்டனை பயன்படுத்தி பார்வையிடவும். விழா காலங்கள் என்றாலே, ஒலிபெருக்கிகள் ( loud speakers) இல்லாமல் நிறைவடையாது. நீங்கள் பென்டிரைவ் அல்லது ப்ளூடூத் இல்… Read More: ஒலிபெருக்கிக்கு பின்னால் இருக்கக்கூடிய அறிவியல் என்ன? | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 8 »

ஒளிமின் டையோடு | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 7

எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில், தொடர்ந்து மின்னணுவியல் தொடர்பான கட்டுரைகளை பார்த்து வருகிறோம். கடந்த கட்டுரையில் ட்ரான்சிஸ்டர்கள் குறித்து விவாதித்து இருந்தோம், அந்த வகையில் என்னுடைய எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளை நீங்கள் படிக்கவில்லை என்றால்! கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டனை பயன்படுத்தி என்னுடைய பிற கட்டுரைகளையும் பார்வையிடுங்கள். அந்த வகையில் இன்றைக்கு நாம் பார்க்க இருப்பது , ஒளிமின் டையோடுகள் குறித்து தான். அடிப்படையில், ஒளிமின் டையோடுகள் என்பது பி என் சந்தி டையோடின் அடிப்படையிலேயே உருவாக்கப்படுகிறது. இதுகுறித்து அறிந்து கொள்ள… Read More: ஒளிமின் டையோடு | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 7 »