Tag Archives: C programming in tamil

C மொழியில் அச்சிடுவது எப்படி ? | எளிய தமிழில் சி பகுதி 7

எளிய தமிழில் சி பகுதியில் ஆரம்பக் கட்டுரைகளிலேயே பொங்கல் வாழ்த்து சொல்வது எப்படி? என ஒரு சுவாரசிய கட்டுரையை எழுதி இருந்தேன். இருந்த போதிலும் கூட, அந்த கட்டுரையில் C மொழியில் அச்சிடுவதற்கான சில விதிமுறைகளை முறைப்படி எழுதவில்லை. எந்த ஒரு மொழியிலேயுமே அச்சிடுவது(print statement)தான் மிக முக்கியமான ஒரு பகுதி. நீங்கள் ஒரு மதிப்பை அச்சிடும்போது தான், நீங்கள் எழுதி இருக்கும் நிரலின் தேவையான பகுதிகளை பயனர்களுக்கு வழங்க முடியும். உதாரணமாக, நீங்கள் ஒரு கணிப்பானுக்கான… Read More »

C மொழியின் மாறிகள் | எளிய தமிழில் C பகுதி -6

மாறி என்றால் என்ன? எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. நான் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது என்னுடைய கணித ஆசிரியர் இந்த பெயரை முதல் முதலாக சொன்னபோது, தனுஷ் நடிச்ச படம் தான் “மாரி” என பின் பெஞ்சிலிருந்த நண்பன் சத்தம் போட்டது இன்றும் நினைவிருக்கிறது. ஒருபுறம் மாறி என்பதையும், மாரி என்பதையும் குழப்பிக் கொண்டவர்கள் பலரும் இருக்கிறார்கள். மாரி என்றால் மழை என்று அர்த்தம். மாரி பொழியாது போனால், வையகம் எங்கும் வாடிய பயிர்கள்… Read More »

C மொழியில் அடுத்த வரிக்கு செல்வது எப்படி? | எளிய தமிழில் சி பகுதி 5

வழக்கமாக, பள்ளி- கல்லூரியில் ஆசிரியர் சொல்ல,சொல்ல மாணவர்கள் குறிப்பெடுத்து கொண்டிருக்கும் போது, இந்த வரியை அடுத்த பத்தியாக(para) எழுத வேண்டும் என ஆசிரியர் கூறுவார். அல்லது இந்த இடத்தில் மேற்கோள் குறி இட வேண்டும்(“) என்று குறிப்பிடுவார். இந்த அடிப்படையான வேலைகளை கணினியின் அடிப்படை மொழியான C யில் எப்படி செய்வது? என்று தான் இன்றைக்கு பார்க்கவிருக்கிறோம். ஏற்கனவே, printf() செயல்பாட்டின் மூலம் நீங்கள் கொடுக்கும் உள்ளீடை, வெளியீட்டு திரையில் காண்பிக்க முடியும் என பார்த்து இருந்தோம்.… Read More »

C மொழியின் குறிப்புகள்(comments) | எளிய தமிழில் C பகுதி 4

ஒவ்வொரு மொழியிலும் நிரலாக்கம் எழுதும்போது எந்த அளவிற்கு சரியாக எழுதுகிறோமோ, அந்த அளவிற்கு வரிக்கு வரி அதை விளக்கும் விதமான குறிப்புகளை வழங்கிக் கொண்டே வரவேண்டும். ஆங்கிலத்தில் இதை கமெண்ட் என அறியப்படுகிறது. எப்படி சமையல் செய்யும்போது சமையல் குறிப்புகள் பயன்படுகிறதோ, அது போலவே நிரலாக்கத்தின் போதும் குறிப்புகளை வழங்க வேண்டும். நீங்கள் ஒரு நிறுவனத்தில் குறுகிய காலம் பணியாற்றி விட்டு வெளியில் செல்ல கூடும். அப்படி வெளியில் செல்லும்போது, உங்களுக்குப் பிறகு அதே வேலைக்கு வருபவர்… Read More »

C மொழியின் சில முக்கியமான குறிச்சொற்கள் | எளிய தமிழில் சி

எளிய தமிழில் சி மொழி தொடர்பான கட்டுரைகளை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்றைக்கு நாம் பார்க்க இருப்பது சில முக்கியமான சீன் மொழியின் குறிச்சொற்கள் (keywords) குறித்துதான். இந்த குறி சொற்களை கவனமாக படித்து வைத்துக் கொள்ளுங்கள். நாம் அடுத்தடுத்து பார்க்கப் போகிற நிரல் ஆக்கங்களுக்கு இத்தகைய குறிச்சொற்கள் முக்கியமானது. மொத்தமாக சீ மொழியில் 32 குறிச்சொற்கள் இருக்கிறது. இந்த அனைத்து குறிச்சொற்களையும் முதலிலேயே கற்று வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை போகப் போக ஒவ்வொரு… Read More »

C மொழியில் சின்னதாக ஒரு கூட்டல் கணக்கு | எளிய தமிழில் C

எளிய தமிழில் C கட்டுரைகளை எழுதத் தொடங்கி கடந்த 15 நாட்களாக கட்டுரை எதுவும் வெளியாகவில்லை. சில தனிப்பட சரி இன்றைக்கு பெரியதாக ஒன்றும் பார்க்கப்போவதில்லை! C மொழியில் எளிமையாக ஒரு கூட்டல் கணக்கு போடுவது எப்படி ?என்றுதான் இன்றைய கட்டுரையில் பார்க்க வருகிறோம். இதற்கு உங்களுக்கு அடிப்படையான தகவல்கள் தெரிந்திருக்க வேண்டும். இதற்கு முன்பு நான் எழுதியிருக்கக் கூடிய,C மொழியில் பொங்கல் வாழ்த்து என்னும் கட்டுரையை படித்து பாருங்கள். C மொழியில் எழுதுவதற்கு அடிப்படையான தகவல்கள்… Read More »

C மொழியில் பொங்கல் வாழ்த்து சொல்வோமா! | எளிய தமிழில் C பகுதி 2

பள்ளியில்,கணினி அறிவியல் படித்த மாணவர்களுக்கு நிச்சயமாக தெரிந்திருக்கும்.முதன் முதலில் “புரோகிராமிங் “என்கிற பெயரில் ஹலோ வேர்ல்ட்(hello world) எனும் வார்த்தையை, கணினி திரையில் வெளியீடாக(display ) கொண்டு வர சொல்லுவார்கள். செய்முறை தேர்வுகளுக்கு கூட, இந்த கேள்விகள் கேட்கப்பட்டு இருப்பதாக, என்னுடைய நண்பர்கள் சொல்லி கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆனால் அதற்கு கூட, நண்பர்கள் பலமுறை திணறிக் கொண்டிருப்பதை நான் கவனிக்க தர வரவில்லை. எதற்காக include போடுகிறோம்? எதற்காக # போடுகிறோம்? Main() என்றால் என்ன? Return… Read More »

C மொழிக்கு ஒரு சிறிய அறிமுகம் | எளிய தமிழில் சி பகுதி-1

அனைத்து கணினி நிரலாக்க மொழிகளுக்கும் “தாய்” என அறியப்படும் கணினி மொழிதான் C. அடிப்படையில் கணினியும் இன்று பிறந்த குழந்தையும் ஒன்றுதான், கணினிக்கு நாம்தான் ஒவ்வொன்றையும் சொல்லிக் கொடுக்க வேண்டும். இதுதான் “அ” , இதுதான் “ஆ”  , இதுதான் அகர எழுத்துக்கள், இதுதான் இலக்கணம், இதுதான் இலக்கியம், இப்படித்தான் நடக்க வேண்டும்! இப்படித்தான் பேச வேண்டும்! இத்தனை மணிக்கு அலாரம் வைக்க வேண்டும் !என்றெல்லாம் ஒவ்வொன்றையும், நாம் தான் சொல்லிக் கொடுக்கிறோம். ஆனால், இவை அனைத்தையும்… Read More »

எளிய தமிழில் C | புதிய தொடர் அறிமுகம்

நமது கணியம் இணையதளத்தில், பெரும்பாலான பிரபலமான நிரலாக்க மொழிகள்(programming languages) குறித்து தொடர்கள் வெளிவந்து, பின்பு புத்தகங்களாக கூட பதிப்பிக்கப்பட்டு இருக்கின்றன. Html,css, javascript,ruby எனப்  பல்வேறுபட்ட மொழிகள் குறித்தும், தொடர்கள் வெளியாகி இருக்கின்றன. ஆனால், கணினி நிரலாக்கம் என்று படிக்க செல்லும் ஒவ்வொரு மாணவருக்கு,ம் தொடக்கப்படியாக அமைவது “சி” எனப்படும் தொடக்க கணினி மொழிதான். உண்மையில், அனைத்து மொழிகளுக்கும் தலைமகனாகவும் இன்றும் “சி” விளங்குகிறது. இதன் மேம்படுத்தப்பட்ட வடிவமான சி பிளஸ் பிளஸ்(C++) குறித்தும் படித்திருப்பீர்கள்,… Read More »

எளிய செய்முறையில் C – பாகம் 7 FUNCTIONS

துணை நிரல்(Functions): துணை நிரல்(Functions) என்பது program-ல் சில பகுதிகளை மட்டும் பிரித்து அதற்கு என்று ஒரு பெயரை வைத்து அதனை திரும்ப call பண்ணுவதற்கு உபயோகபடுத்த படுகின்றது. துணை நிரலின் பகுதிகள்   Prototype : <Return Type> FunctionName (Argument List). ·         இங்கு <Return Type> என்பது இந்த துணை நிரலில் இருந்து எந்த வகையான தரவானது திரும்ப அனுப்பபடுகிறது என்பதை குறிக்கிறது. ·         FunctionName என்பது இந்த துணை நிரலின் பெயர்… Read More »