Tag Archives: daily electronics

வெடிக்கும் பேட்டரிகள்: காரணங்கள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 25

இன்றைக்கு, நம்முடைய எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியின் 25 ஆவது கட்டுரையில் அடி எடுத்து வைத்திருக்கிறோம். அடிப்படையில,  எலக்ட்ரானிக்ஸ் துறை தொடர்பாக எவ்வித முன் அனுபவம் இல்லாமல் என்னால் தொடங்கப்பட்ட இந்த எலக்ட்ரானிக்ஸ் தொடரானது, தற்பொழுது 25வது கட்டுரையை வெற்றிகரமாக நிறைவு செய்கிறது. இதற்கு ஆக்கமும்,ஊக்கமும் அளித்த அனைவருக்கும் மற்றும் வாசகப் பெருமக்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த எளியவனின் பயணம் மென்மேலும் தொடரும். என்னுடைய இன்ன பிற எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளை படிக்க விரும்பினால், கீழே வழங்கப்பட்டுள்ள இணைப்பை… Read More »

டிஜிட்டல் தெர்மாமீட்டர்கள் எவ்வாறு வேலை செய்கின்றன? | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 24

எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில், அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படக்கூடிய எலக்ட்ரானிக்ஸ் கருவிகளின் செயல்முறை குறித்து கடந்த சில கட்டுரைகளாக பார்த்து வருகிறோம். அந்த வகையில், இன்றைக்கு நாம் பார்க்கக்கூடிய எலக்ட்ரானிக்ஸ் பொருள், தற்காலத்தில் அனைவர் வீட்டிலும் குடிகொண்டு விட்ட டிஜிட்டல் தெர்மாமீட்டர் பற்றி தான். இன்றைக்கு கையில் கட்டி இருக்கக்கூடிய ஸ்மார்ட் வாட்ச் முதல் வீட்டில் இருக்கும் ஓவன் வரை தெர்மாமீட்டர்களோடு இணைந்து வருகின்றன. அதையும் கடந்து, நமக்கு நாமே மருத்துவர்களாக மாறிக்கொண்டிருக்கும் இந்த காலத்தில், பெரும்பாலானோர் வீட்டில்… Read More »

அயர்ன் பாக்ஸ் எவ்வாறு வேலை செய்கிறது? | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி:23

எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில், அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சில கால இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் ஒரு எளிய எலக்ட்ரானிக்ஸ் கட்டுரையோடு உங்களை வந்து சந்தித்திருக்கிறேன். அடிப்படையில், இன்றைக்கு நாம் பேசப் போகிற பொருள் முழுமையாக எலக்ட்ரானிக்ஸ் துறையை சார்ந்ததல்ல! ஆனாலும், நாம் தினந்தோறும் பயன்படுத்தக்கூடிய ஒரு கருவி தான். சட்டைகளில் இருக்கக்கூடிய சுருக்கங்களை நேர்த்தியாக நீக்குவதில் முனைவர் பட்டம் பெற்ற, அயர்ன் பாக்ஸ் பற்றிதான் இன்றைக்கு பார்க்க வருகிறோம். அடிப்படையில், ஆரம்ப காலத்தில் அயர்ன் பாக்ஸ்… Read More »

பழைய டிவியின் திரைகள், எவ்வாறு வேலை செய்தன? | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 22

எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில், பல கட்டுரைகள் குறித்து நாம் விவாதித்திருக்கிறோம். ஆனால், இன்றைக்கு நாம் விவாதிக்க இருக்கக்கூடிய கட்டுரை நம்மில் பலருக்கும் பழைய நினைவுகளை கொண்டு வரும் என நம்புகிறேன். சரி! அதற்கெல்லாம் முன்பாக வழக்கம் போல என்னுடைய இன்னபிற எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளை, நீங்கள் படிக்க விரும்பினால் கீழே வழங்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தவும். kaniyam.com/category/basic-electronics/ 1990களில் தான், தனியார் தொலைக்காட்சிகளின் ஆதிக்கம் இந்தியாவில் தொடங்கியது. அதற்கு முன்பெல்லாம், பக்கத்து வீட்டு ஜன்னல் வழியாக தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் ஒளியும்… Read More »

கால்குலேட்டர்களுக்கு உள்ளே என்னதான் இருக்கிறது? | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 20

நேற்றுதான் ஒரு எளிய எலக்ட்ரானிக்ஸ் கட்டுரையை எழுதியிருந்தேன். தொடர்ந்து, இன்றும் அடுத்த கட்டுரையை எழுதுகிறேன். இந்த கட்டுரையை எழுதுவதற்கு மிக முக்கியமான காரணம், என்னுடைய வீட்டில் வாங்கி ஐந்து நாட்களிலேயே பழுதாகிபோன கால்குலேட்டர் ஒன்று பல ஆண்டுகளாக ஏதோ ஒரு இடத்தில் இருந்து வந்தது. தீபாவளியோடு எதர்ச்சியாக இதை காண நேர்ந்தது. இன்றைக்கு அதை ஆர்வத்தோடு பிரித்துப் பார்த்தேன். ஏற்கனவே, கணிப்பான்கள் எவ்வாறு வேலை செய்கிறது? என்பது குறித்து எனக்கு ஒரு அடிப்படை அறிவு இருந்தது. இருந்த… Read More »

மெமரி அட்டைகள் எவ்வாறு வேலை செய்கின்றன? | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 17

நாம் தினந்தோறும் பயன்படுத்தக்கூடிய ஒரு பொருளாக இருந்ததுதான் மெமரி அட்டைகள்(Memory cards). ஆம்! தற்காலத்தில் மெமரி அட்டைகளை பயன்படுத்துவோர் மிகவும் குறைந்து விட்டனர். இருந்தபோதிலும், கேமராக்கள் போன்றவற்றில் இன்னும் மெமரி அட்டைகளை பார்க்க முடிகிறது. நான் சிறுவனாக இருந்த போது யோசித்ததுண்டு! எப்படி இவ்வளவு சிறிய ஒரு பிளாஸ்டிக் துண்டிற்குள், இத்தனை புகைப்படங்களை சேகரித்து வைக்க முடியும்? இத்தனை பாடல்களை சேகரித்து வைக்க முடியும்? என்றெல்லாம் யோசித்து இருக்கிறேன். அப்பொழுது, இரண்டு ஜிபி மெமரி கார்டை பார்க்கும்போது… Read More »

தானியங்கி வீட்டு வசதிகளை இலவசமாக பெறலாம்! | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 16

எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில், பல தானியங்கி கருவிகள் குறித்தும், சென்சார்கள் குறித்தும், டையோடுகள் குறித்தும், இன்ன பிற எலக்ட்ரானிக் பொருட்கள் குறித்தும் கடந்த 15 கட்டுரைகளில் விவாதித்து இருக்கிறோம். இன்றைக்கு நான் உங்கள் மத்தியில் குறிப்பிட இருப்பது எலக்ட்ரானிக் பொருட்கள் குறித்து அல்ல! மாறாக, எலக்ட்ரானிக்ஸ் துறையின் அபரிவிதமான வளர்ச்சியால் இன்றைக்கு இணையத்தின் மூலம் இயங்கும் கருவிகள்(IOT), தானியங்கி வீட்டு வசதி சாதனங்கள்(Home automation devices)ஆகியவை எளிய வகையில் கிடைக்கின்றன. கூகுள் நிறுவனம் மற்றும் அமேசான் நிறுவனத்தின்… Read More »

Sim அட்டைகள் எவ்வாறு வேலை செய்கிறது ?  | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 15.

நான் எளிய எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளை எழுத தொடங்கி, இரண்டு மாதங்கள் ஆகிறது. அந்த வகையில் இது என்னுடைய 15 வது எலக்ட்ரானிக்ஸ் கட்டுரை. கடந்த கட்டுரையில் உள்ளார்ந்த மின்சுற்றுகள் குறித்து பார்த்திருந்தோம். அதுபோன்று என்னுடைய பிற எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளை பார்வையிட கீழே வழங்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தவும். இன்றைக்கு நாம் பார்க்க இருக்கக்கூடிய தலைப்பு சிம் கார்டுகள். சிம் கார்டுகளுக்கும் எலக்ட்ரானிக் தொழில்நுட்பத்திற்கும் அப்படி என்ன சம்பந்தம் இருக்கு போகிறது? என்று நீங்கள் ஒருவேளை யோசிக்கலாம். அடிப்படையில், சிம்… Read More »

உள்ளார்ந்த மின் சுற்றுகள்(IC) என்றால் என்ன? | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 14

நம்முடைய பெரும்பாலான எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளில் மின்தடைகள்,மின் தேக்கிகள், டையோடுகள்,ட்ரான்சிஸ்டர்கள் உட்பட பலவிதமான எலக்ட்ரானிக் பொருட்கள் குறித்து பார்த்திருக்கிறோம். என்னுடைய பிற எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளை படிக்க: kaniyam.com/category/basic-electronics/ இத்தகைய எலக்ட்ரானிக் பொருட்களை, வெறும் ஒரு சிறிய எலக்ட்ரானிக்ஸ் சாதனத்திற்குள் அடக்கி விட முடியுமா? என்று கேட்டால் மிகவும் கடினமான ஒன்றுதான் என்று உங்களுக்கு தோன்றலாம். உதாரணமாக, உங்களுடைய மொபைல் ஃபோன்களிலும் மின்தேக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. அதே நேரம், நமது வீட்டில் பயன்படுத்தக்கூடிய மின்விசிறிகளில் கூட மின்தேக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. அதே அளவில்… Read More »

மின் தூண்டல் அடுப்பு(induction stove )எவ்வாறு வேலை செய்கிறது? | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 12

எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில், கடந்த மின் தூண்டிகள்(inductors )குறித்து பார்த்திருந்தோம். அகமின் தூண்டல் நிகழ்வு குறித்தும் அந்த கட்டுரையில் விவாதித்திருந்தோம். ஒரு கம்பிச்சுருளின் வழியாக மின்சாரம் பாயும் போது, அதில் காந்தப்புலம்(magnetic field)ஏற்படுகிறது. இதன் அடிப்படையிலேயே, நாம் அனுதினமும் வீடுகளில் பயன்படுத்தும் மின் தூண்டல் அடுப்புகள் அதாவது இன்டக்ஷன் அடுப்புகள் செயல்படுகின்றன. அதனுடைய செயல்பாடு விதம் குறித்து தெளிவாக பார்ப்பதற்கு முன்பாக, என்னுடைய பிற எளிய எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளை நீங்கள் படிக்க விரும்பினால் கீழே வழங்கப்பட்டுள்ள பட்டனை… Read More »